எதற்கும் பயன்படாதவன்
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
ஞாயிறு, 21 மே, 2023
எதற்கும் பயன்படாதவன்
புதன், 17 மே, 2023
அநித்ய சுகம்.
அநித்ய சுகம்
விலகியே இருத்தல் நலம்.
விலகியே இருத்தல் நலம்.
சொல்லுவார்,வார்த்தை கேட்டு.
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை யிகழ்வார் புல்லர்
நல்லவர் விசாரி யாமற் செய்வரோ நரிசொற் கேட்டு
வல்லியம் பசுவுங் கூடி மாண்டதோர் கதையைப் போலப்
புல்லிய ரொருவ ராலே போகுமே யாவும் நாசம். (45)
- கேட்பார் சொல்லைக் கேட்டுத் தன் தோழனை இகழ்வாகக் கருதுபவர் ‘புல்லர்’.
- நல்லவர்களை விசாரிக்காமல் தோழனை இழப்பார்களோ?
- நரியின் சொல்லைக் கேட்டுப் புலியும் பசுவும் கூடி வாழ்ந்த கதை போல் புல்லியன் ஒருவனால் நல்லவன் வாழ்வு முடிந்துவிடும்.
# பட்டினத்தார் பாடல்#
மாலைப்பொழுதில் நறுமஞ்சல் அரைத்தே குளித்து
வேலை மினுக்கிட்டு விழித்திருந்து- சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்.
# பட்டினத்தார் பாடல்#
வியாழன், 13 ஏப்ரல், 2023
தூங்காமை,கல்வி,துணிவுடமை.
இன்றைய குறள்:
பொருட்பால் > அரசியல் > இறைமாட்சிநீங்கா நிலனான் பவர்க்கு. (383)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
— மு. வரதராசன்
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
— சாலமன் பாப்பையா
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்
— மு. கருணாநிதி
செவ்வாய், 11 ஏப்ரல், 2023
வருவிருந்து..
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. (௮௰௩)
— மு. வரதராசன்
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை. (௮௰௩)
— சாலமன் பாப்பையா
திங்கள், 3 ஏப்ரல், 2023
ஈனருக்கு உரைத்திடாதே
ஈனருக்கு உரைத்திடாதே .
அகவை தின, வாழ்த்துகள்..!
24-03-1965
ஐம்பத்தெட்டாவது அகவையில் கால்பதிக்கும்,-திருமதி
எனதருமைத் துணைவிக்கு,இனிய வாழ்த்துக்கள்
கடந்துவந்த பாதையில்,சாதனைகளையும்-பல
சோதனைகளையும்,சரிசமமாக ஏற்று,
சரித்திரமாக மாற்றும், வல்லமை கொண்ட-எந்தன்
வெற்றித் திருமகளே,! வாயார வாழ்த்துகின்றேன்.
இப்புவியில் இணைந்த நாள் தொட்டு,இனிதாக-நீ
இன்னும் வாழ, இறைவனை பிரார்த்திக்கிறேன்,!
வியாழன், 26 ஜனவரி, 2023
காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரத் தயார் – ஜெய்சங்கர் வந்த சூட்டோடு ரணில் சம்பந்தனுக்கு உறுதியளித்தார்
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர அவசரமாக நேற்றுமுன்தினம் பிற்பகல் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்றது. அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகணங்களுக்கு வழங்கப்படும். மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் எண்ணிக்கையை 10 ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.



