வியாழன், 27 ஏப்ரல், 2017

டெங்கு நோய்

டெங்கு நோய்



டெங்கு நோய் என்பது வைரஸ் மூலம் பரவுகின்ற ஒரு நோய் என்பதுடன் நோய்த்தொற்றுள்ள ஒரு நுளம்பு காவியாக செயற்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இது மிகச் சமமான போதும் நோயைப் பரப்புவதில் வித்தியாசமான வைரஸ்கள் செயற்படுகின்றன. (DEN 1, DEN 2 , DEN 3,  DEN 4)
டெங்கு தொற்றுவதன் மூலம் ஏற்படும் நோய் நிலைமைகள் மிகப் பெரிய வீச்சினுள் விரிந்து செல்வதுடன் சில நபர்களிடம் எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படமாட்டாது என்பதுடன் இன்னும் சிலரிடம் நோய் அறிகுறிகள் தென்படும். நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்களுள் பெரும்பாலானவர்களிடம் சாதாரன வைரஸ் காய்ச்சல் நிலைமை, டெங்கு காய்ச்சல் அல்லது அசாதாரண நோய் அறிகுறிகளுடன் கூடிய டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை ஏற்பட முடியும். டெங்கு காய்ச்சல் காரணமாக ஆகக் கூடுதலாக காணக்கிடைப்பது டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை என்பதுடன் அசாதாரண நோய் அறிகுறியுடன் கூடிய டெங்கு நோய் நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்கிறது. (< 1%)
  • டெங்கு காய்ச்சல் – டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள் ( முரசுகளிலிருந்து, மூக்கிலுருந்து, சளி மற்றும் தோல் என்பவற்றிலிருந்து).
  • டெங்கு குருதிப்பெருக்கு – டெங்கு குருதிப்பெருக்கு, டெங்கு தொற்றின் உச்சக் கட்ட நோய் நிலைமை ஆவதுடன் மிகவும் சிறிய எண்ணிக்கையான நோயாளர்களுக்கு இந் நிலைமை ஏற்படுகிறது. டெங்கு குருதிப்பெருக்கு நோயின் போது பெரும்பாலும் தெளிவாக வித்தியாசப்படுத்தி இனங் காண முடியுமான 3 கட்டங்கள் காணப்படுவதுடன் அவை, காய்ச்சலுடன் கூடிய கட்டம் (இக் கட்டத்தின் போது 7 தினங்களுக்கு குறைவாகக் காணப்படும் கடுமையான காய்ச்சலுடனான காலம்), நெருக்கடியான கட்டம் (நெருக்கடியான கட்டம் ஆரம்பமாவது திரவவிழையம் கசிய ஆரம்பித்தல் மற்றும் சதாதாரணமாக காய்ச்சல் தணிந்து செல்லலுடனேயாகும்) இந் நிலைமை 1-2 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் ஏற்கனவே இனங் கண்டு தேவையான அக்கறை செலுத்தப்படாமையால் நோயாளி அதிர்ச்சி நிலைமைக்கு கூட ஆளாகலாம். குணமடையும் கட்டம், 2-5 தினங்கள் வரையான காலத்திற்கு காணப்படுவதுடன் இக் கால கட்டத்தில் நோயாளியின் உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும், இதயத் துடிப்பு குறைவடையும். குணமடையும் சந்தர்ப்பத்திற்கே உரித்தான கொப்புளங்கள் (சிவப்பு நிற பின்னணியில் வௌ்ளை நிற கொப்புளங்கள்) பெரும்பாலும் உடல்பூராக அரிப்புணர்ச்சி காணப்படும். (உள்ளங்கையிலும் அடியிலும் அதிகமாகக் காணப்படும்) இவ் வேளையில் அதிகமாக சிறுநீர் கழிக்கவேண்டியேற்படும்.

நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் தென்படுமாயின் (விசேடமாக காய்ச்சல் குறைகின்ற வேளையில்) கட்டாயமாக வைத்தியரின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
  • தொடர்ச்சியாக வாந்தியெடுத்தல்
  • வயிற்று வலி  
  • கடுமையான தாகம்
  • கடுமையான தூக்கமும் மயக்க நிலைமையும்
  • உணவு மீதுள்ள வெறுப்பு
  • அசாதாரண குருதி வடியும் நிலைமை உதா: மாதவிடாய்ச் சுற்றின் போது அதிகமான குருதிப்பெருக்கு இடம்பெறல், குறித்த தினத்திற்கு முன்னர் மாதவிடாய்ச் சுற்று இடம்பெறல்.

நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து உடனடியாக வைத்திய அறிவுரை பெற்றுக்காள்ளப்படல் வேண்டும்.
  • கைகால்களில் குருதியற்ற மற்றும் குளிரான தன்மை
  • அமைதியின்மை மற்றும் குழப்ப நிலைமை
  • தோலின் நிறம் மாற்றமடைதல்
  • சிறுநீர் வெளியேறாமை அல்லது குறைவாக சிறுநீர் வெளியேறல்
  • நடத்தையில் மாற்றம் – மயக்கம்/ இழிவான வார்த்தைப் பிரயோகம்
டெங்கு நோய் நிலைமையினை முன்னரே இனங்காணல் 
டெங்கு நோயினை முன்னரே இனங்கண்டு உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் டெங்கு நோயின் சிக்கலான மற்றும் குணப்படுத்த முடியாத நிலைமையினைக் குறைத்துக்கொள்ள முடியும். இலங்கையில் தற்போது நிலவும் டெங்கு அதி நிறமூர்த்த நிலைமையின் கீழ் காய்ச்சலுடன் பின்வரும் நோய் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் டெங்கு நோயினால் (டெங்கு காய்ச்சல்/ டெங்கு குருதிப்பெருக்கு) அவதிப்படுவதாக சந்தேகித்து தேவையான அவதானத்தைச் செலுத்துவது அத்தியவசியமாகும்
கடுமையான தலைவலி, கண்களின் கீழ் பகுதியில் வலி, எலும்பு மற்றும் தசைகளில் வலி, உடம்பில் மேலெழும்பும் கொப்புளங்கள் (விரிவடைந்த தன்மையிலுள்ள சிவப்பு நிற கொப்புளங்கள்), சிறிய அளவிலான குருதிவடிதல் நிலைமைகள் (தோலின் மேற்பகுதியில் மற்றும் குருதி கணிப்பீட்டு பரிசோதனை மூலம் காட்டப்பட முடியுமானவாறு), வெண்குருதியணுக்கள் குறைவடைதல் (<5000/mm3), குருதிச் சிறுதட்டுக்கள் ≤150,000/mm3 , குருதியின் செறிவத் தன்மை அதிகரித்தல் (5 – 10%)
சில சந்தர்ப்பங்களில் இருமல், தடிமன் மற்றும் தொண்டை வலி போன்ற மூச்சுக் குழலை அண்மித்த நோய் அறிகுறிகளுடன் கூடிய மற்றும் மலச்சிக்கல், வயிற்றோட்டம், வாந்தி, இடைக்கிடை ஏற்படும் வயிற்று வலி போன்ற உணவுக் கலன்சார்ந்த நோய் அறிகுறிகளுடன் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்க இடமுண்டு.

கடுமையான காய்ச்சலுடன் கூடிய ஒரு நோயாளியின் முகம் மற்றும் கைகால்கள் சிவப்பு நிறத்தில் பரவிய தழும்களுடன் கூடிய தன்மையில் காணப்படல், வெண்குருதியணுக்களின் அளவு குறைவடைதல், (
அதிர்ச்சி நிலைமையில் வருகை தரும் ஒரு நோயாளி விசேடமாக காய்ச்சல் இன்றி, கைகால்கள் குளிராக, இதயத் துடிப்பு வேகமாக நாடித் துடிப்பு மற்றும் குறைவான இரத்த அமுக்கத்துடன் காணப்படின் டெங்கு அதிர்ச்சி நிலைமை என சந்தேகித்தல் வேண்டும்.

NS 1 நோய் எதிர்ப்பு நோய்தொற்றியுள்ள ஒரு நோயாளியிடம் காய்ச்சலின் ஆரம்ப கட்டத்தில் குருதிப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியுமான புதிய இரசாயனப் பரிசோதனையாவதுடன் அதன் மூலம் நோயாளிக்கு டெங்கு தொற்றியுள்ளதாக மாத்திரம் கண்டுபிடிக்க முடியும். ஆயினும் நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் அல்லது டெங்கு குருதிப்பெருக்கு தொற்றியிருப்பதாக வேறுபடுத்தி இனங் காண்பதற்கு இப் பரிசோதனை மூலம் அவகாசம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக டெங்கு நோய் என்பதாக ஆரம்ப கட்டத்தில் சந்தேகத்திற்கிடமான வேளைகளில் மாத்திரம் இப் பரிசோதனையினை மேற்கொள்ளல் பயனளிக்க முடியும்.

பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம்
  • காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாவது தினத்தில் அனைத்து நோயாளர்களுக்கும் பூரணமான குருதிப் பரிசோதனை மேற்கொள்ளுதல் அத்தியவசியமாகும்.
  • ஒருசில விசேட நோயாளர்களிக்கு முதலாவது தினத்தில் அல்லது முதல் தடவையாக சிகிச்சைக்காக வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே குருதிப் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.(கர்ப்பிணிப் பெண்கள், ஒரு வயதுக்கு குறைந்த பிள்ளைகள், முதியவர்கள் மற்றும் ஏனைய காலங்கடந்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள்)
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≥150,000/ mm3 எனின் மூன்றாவது தினத்திலிருந்து நாளாந்தம் பூரண குருதிப் பரிசோதனை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும்.
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤150,000/ mm3 எனின் நாளொன்றுக்கு இரு தடவைகள் பூரண குருதிப் பரிசோதனை மேற்கொள்ளல் அத்தியவசியமாகும் (நோயாளியின் சிகிச்சை நிலைமை, அபாயமான நோய் அறிகுறிகளைக் காட்டுதல் மற்றும் ஏனைய சமூகக் காரணிகள் என்பவற்றின் காரணமாக நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிக்கும் தேவைப்பாடு தங்கியுள்ளது)
  • • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு ≤100,000/ mm3 ஆகக் காணப்படும் வேளைகளில் நோயாளியை வைத்தயசாலையில் அனுமதிப்பது அத்தியவசியமாகும்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்
  • காய்ச்சல் தொற்றி மூன்றாவது தினத்தில் அல்லது அதற்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பில் வெளிநோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட வேண்டியவாறே (மேலே விவரிக்கப்பட்டவாறு) குருதிப் பரிசோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும். சிகிச்சையளிக்கும் வைத்தியர் உத்தரவிட்டால் அதற்கு அதிகமான தடவைகள் குருதிப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.  

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான விசேட அறிவுறுத்தல்கள்’.
  • • முதற் தடவையில் நோயாளரைச் சந்திக்கும் வைத்தியர் நோயாளியின் வாயிலிருந்து தேவையான அளவு திரவம் பெற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
  • வயதுவந்த ஒரு நோயாளிக்கு 24 மணித்தியாலங்களுக்குள் 2500 மி.லீ அளவு திரவம் காய்ச்சல் நிலவுகின்ற போது பெற்றுக்ெகாள்ளல் வேண்டும். (நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர்) நோயாளியின் உடல் நிறை கி.கி.50 ஐ விடக் குறைவான சந்தர்ப்பங்களில் 24 மணித்தியாலங்களுக்குள் 50 மில்லி/ கி.கி அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு 2 மில்லி/ கி.கி எனும் அடிப்படையில் திரவம் வழங்கப்படல் வேண்டும்.
  • சிறு பிள்ளைகளின் நாளாந்த திரவத் தேவை பின்வருமாறு கணிப்பிடப்படல் வேண்டும்.
                     நாளாந்த தேவை = 100 மி.லீ/ கி.கிராம் / முதலாவது 10 கி.கிராம் தொடர்பாக
                     = + 50 மி.லீ/ கி.கிராம் / அடுத்த 10 கி.கிராம் தொடர்பாக
                     = + 20 மி.லீ/ மீதி கிலோகிராம் அளவிற்காக
காய்ச்சல் தொற்றி 3 தினங்களில் அல்லது அதன் பின்னர் நோயாளியிடம் பின்வரும் நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு நோயாளிக்கு/ பெற்றோருக்கு அறிவூட்டுதல்.
  • காய்ச்சல் குறைவடைந்த போதும் நோயாளியின் சிகிச்சைப் பண்புகளில் அதிருப்தி காணப்படல்
  • வாயினால் திரவம் உட்கொள்ளல் கடினமாதல்
  • வயிற்றில் ஏற்படும் கடுமையான வலி
  • குளிரான மற்றும் உயிரற்ற கைகால்கள்
  • உயிரற்ற தன்மை/ அமைதியின்மை/ வெறுப்பு
  • ஒழுங்கற்ற விதமாக நிகழும் மாதவிடாய் குருதிப் பெருக்கு அல்லது மாதவிடாயுடன் நிகழும் அதிகரித்த குருதிப் பெருக்கு போன்ற குருதி வடிதலின் அதிகரித்த அபாய நிலைமைகள்
  • 6 மணித்தியாலங்களுக்கு மேலான ஒரு காலத்திற்கு சிறுநீர் வெளியேறாமை

டெங்கு நோயை டெங்கு குருதிப் பெருக்கிலிருந்து வேறுபடுத்தி இனங்காணல்
காய்ச்சல் தொற்றி மூன்றாவது தினத்திற்குப் பின்னர் டெங்கு குருதிப் பெருக்கு நோய் தொற்றியுள்ள நோயாளர்கள் திரவவிழையம்த் திரவம் கசிதல் போன்ற சிக்கலான தன்மைக்கு ஆளாகும் அபாயம் காணப்படுகின்றமையினால் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு நோயாளர்களை வேறுபடுத்தி இனங்காணல் மிக முக்கியமாகும். டெங்கு குருதிப்பெருக்கு நிலைமை பெரும்பாலும் காய்ச்சல் குறைவடைந்து செல்கின்ற போது காணக் கிடைக்கிறது. காய்ச்சல் இன்றி வேகமான இதயத் துடிப்பு அல்லது காய்ச்சலுக்கு ஏற்றவாறின்றி வேகமான இதயத் துடிப்பு பெரும்பாலும் ஏற்படலாம். இதயம் சுரங்கும் போது ஏற்படும் அமுக்கத்திற்கும் விரியும் போது ஏற்படும் அமுக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒடுங்குதல் (40 mmHg முதல் 30 mm Hg) மூலம் திரவம் கசிய ஆரம்பித்தல் தொடர்பான ஒரு அறிகுறியினை வழங்குவதுடன் இச் சந்தர்ப்பத்தில் நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பது இன்றியமையாததாகும். இச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் மூலம் படிப்படியாக குருதி உறைதல் காணக் கிடைப்பதுடன் இதன் மூலம் நோயாளி அபாய நிலைமையிலிருப்பதனை இனங் கண்டுகொள்ளலாம். எவ்வாறாயினும் அல்ட்ரா சவுண்ட் கருவியொன்றின் உதவியுடன் நெஞ்சுக் குழி மற்றும் அடிவயிற்றுக் குழி என்பவற்றினுள்ளே படிப்படியாக திரவவிழையம் திரவம் கூட்டுச்சேர்வதைக் காட்டுவது நோயாளி அபாய கட்டத்தினை அடைந்துள்ளாரென்பதற்கான சிறந்ததொரு விஞ்ஞான ரீதியான ஆதாரமாகும்.

நோயாளியை வைத்தியசாலையில் அனுமதித்தல்
நோயாளியின் சிகிச்சை நோய் அறிகுறிக்கு ஏற்ப பெரும்பாலும் நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் தேவை வைத்தியரினால் தீர்மானிக்கப்படும். ஆயினும் பின்வரும் அறிகுறிகளைக் கொண்ட நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதித்தல் அத்தியவசியமாகும்.
  • குருதிச் சிறுதட்டுக்களின் அளவு<100,000/mm3
  • காய்ச்சல்/ நோய் தொற்றி மூன்றாவது தினத்தில் அல்லது அதற்கு முன்னர் பின்வரும் அபாயமான நோய் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள்
  • வயிற்றினுள் ஏற்படும் கடுமையான வலி
  • தொடர்ச்சியாக நிலவும் வாந்தி
  • சளியிலிருந்து குருதி வடியும் நிலைமைகள் (வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி வடிதல்)
  • அலட்சியம் அல்லது அமைதியின்மை
  • ஈரல் விரிடைதல் ( 2 செ.மீ. அதிகமாக )
  • குருதி உறைதல் மற்றும் துரிதமாக குருதிச் சிறுதட்டுக்களின் அளவு குறைவடைதல்
  • திரவவிழையம் திரவக் கசிவினைக் காட்டும் சிகிச்சை அறிகுறிகள்: நெஞ்சு மற்றும் அடிவயிற்றுக் குழிகளில் திரவவிழையம் கசிதல் ( ஓரளவு தாமதித்து காணக்கிடைக்கும் ஒரு நிலைமையாகும்)

மேற்குறிப்பிடப்பட்டநோய் அறிகுறிகள் இல்லாத போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டிய ஏனைய நோயாளிகள்
  • கர்ப்பிணிப் பெண்கள் – காய்ச்சல் /நோய் தொற்றி 2 ஆவது தினத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பூரண குருதிப் பரிசோதனையொன்று நாளாந்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • முதிய நோயாளர்கள் / சிறு குழந்தைகள்
  • கொழுத்த நோயாளிகள்
  • ஏனைய காலங்கடந்த நோயுடைய நோயாளிகள் ( நீரிழிவு, நீண்டகால சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள், தலசீமியா போன்ற குருதி சம்பந்தப்பட் நோயாளர்கள், ஏனைய நீண்டகால நோய் நிலைமைகள் )
  • சமூக நிலைமைகளின் கீழ் விசேட கவனஞ் செலுத்தப்பட வேண்டிய நோயாளர்கள் உதா: தனிமையில் வசிக்கும் கவனிப்பாரற்ற நோயாளிகள்
  • வதிவிடத்திற்கு அண்மையில் சுகாதார வசதிகள் இல்லாத அல்லது சுகாதார வசதிகளுக்காக செல்வதற்கு போக்குவரத்து வசதிகளற்ற நோயாளிகள்

48 மணித்தியாலங்கள் சிகிச்சை ரீதியாக நிலையாக மற்றும் காய்ச்சலின்றிய நோயாளிகள் டெங்கு நோயிலிருந்து குணமடையும் கட்டத்தினை அடைந்துள்ளார்களென்ற முடிவுக்கு வர முடியும்.