சனி, 20 ஆகஸ்ட், 2022

யாருக்கு கொடுக்கலாம் பரிசு.


யாருக்கு? என்ன? பரிசளிக்கலாம் என்பதைக் கூறும் அட்டவணை.
பிடித்ததில் பிடித்தது. 

 

The Vigeland Museum and Park, NORWAY,OSLO.நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில்  எனது மனைவியின் இரண்டாவது 
தம்பியரின் வீட்டிற்குச் சென்றபோது,எங்களை இந்த (Vigeland Pàrk )சிற்பப் பூங்காவைக்
பார்வையிட,தங்களோடு  கூட,   அழைத்துச் சென்றார்கள்.மிகவும் தரமான
அருமையான,ஒரு பூங்கா மணிதர்களாய்ப் பிறந்த நாம் அனுபவிக்க  வேண்டிய
ஒரு இடம். அழகான மலர்வனம்,அதில் ஒரு நீர் நிலை,பெரிய ஒரு இடத்தைக் 
கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஏறத்தாள இருநூறு சிலைகள்,கற்களாலும்,வெங்கலத்தாலும் செதுக்கப்பட்டுள்ளது.GUSTAV 
VIGELAND (1869-1943) என்கின்ற சிற்பியால்  வடிவமைக்கப்பட்டது.எல்லாச்
சிற்பங்களும் மணித வாழ்க்கையின்,பிரதி பலிப்பாகவே காணக்கூடியதாக
உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் இந்த  இடத்தைக் 
கண்டுகளித்தது பெரிய ஒரு சாதனைதான்.என்ன ஒரு மனக்குறை நமக்கு
விளங்கக்கூடிய மொழியில்  எதுவுமில்லை.மிகுதிப் படங்கள்,இன்னும்  ஒரு
பதிவில்.......