பெரும் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் பதினாறு பெரும் பேறுகளாவன:
- அன்பான துணை
- கபடற்ற நட்பு
- கலையாத கல்வி
- குறையாத வயது
- குன்றாத வளமை
- கோணாத செயல்
- சலியாத மனம்
- பரவசமான பக்தி
- பிணியற்ற உடல்
- போகாத இளமை
- மாறாத வார்த்தை
- தடையற்ற கொடை
- தவறாத சந்தானம்
- தாழாத கீர்த்தி
- துன்பமில்லா வாழ்வு
- தொலையாத நிதி
நன்றி விக்கிபீடியா.