செவ்வாய், 20 டிசம்பர், 2016

நீதிபதி ஸ்ருதி


நீதிபதி ஸ்ருதி 



சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !
அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..!
.
அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி ... வயது 24 ..!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் ...!
கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !
.
அந்தப் நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”
.
ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
எதுவும் பேசவில்லை .
பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”
நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள் : “ மேடம் ..உங்கள் குடும்பம் .... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன் ..?”
.
ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம் .
நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .
ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ..?
“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”
“ஸாரி ..என்ன கேட்டீர்கள் ..?”
“உங்கள் அப்பா – அம்மா ...?”
ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் . “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”
நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள் : “எங்கே மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”
.
ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார் : “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”
“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார் : “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”
நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
ஒரு நிருபர் கேட்டார் : “ ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
“இல்லை..”
இன்னொரு நிருபர் கேட்டார் : “சீனியர் வக்கீலா ..?”
“இல்லை..”
.
வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி , கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
நிருபர்களைப் பார்த்து கேட்டார் :
“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”
நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .
அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”
ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார் : “எங்கே..?”
நிருபர்கள் சற்றே குழம்பி ..
“மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”
ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”..என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு , சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
“அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”
.
திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !
.
ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு , நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார் : “ இவர்தான் என் அப்பா ...பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார் . இதோ .. இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது ... கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார் .. இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து , இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன் ...!”
நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .
ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே .. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும் .. நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் .. நான் வரட்டுமா ..?”
ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார் .
அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .
.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”

உலகில்‘கல்வி வல்­ல­ர­சாக’ பின்­லாந்து உயர்ந்­தது எப்­படி?

மைத்­தி­ரி–மஹிந்­த இணையும் காலம் நெருங்­கி வருகின்றது

வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கான அடிப்படையை ஆராய்வது அவசியம்




வீதிப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை உச்ச அளவுக்கு அதிகரிப்பதன் மூலம் வீதி விபத்துகளைக் குறைத்துக் கொள்ள முடியுமென அரசாங்கம் காரணம் கூறிக் கொண்ட போதிலும், அவ்வாறான நம்பிக்கை அடியோடு தென்படவில்லை.
யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பல்வேறு இடங்களிலும் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ள வீதி விபத்துகளையும் அதனால் ஏற்பட்ட மரணங்களையும் பார்க்கின்ற போது அதிர்ச்சி ஏற்படுகின்றது. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு விபத்திலேயே பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்தும் உள்ளனர். அதே தினத்தன்றும் மறுநாளும் வட பகுதியில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசமான வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தையும் தாண்டி விட்டது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விட அதிகம்.
ஆகவே அபராதத் தொகையை அதிகரிப்பதனால் மாத்திரம் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி விட முடியுமென்ற நம்பிக்கை தவறானது என்பது இங்கு நன்கு புரிகின்றது. வாகன விபத்துகள் அதிகரித்திருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை நன்கு ஆராய்ந்து அதற்கான பரிகாரங்களைத் தேடுவதே இப்போது முக்கியமானதாகும்.
வீதிப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட விடயங்களில் கடந்த காலத்தில் ஏராளமான தவறுகள் நடந்து விட்டன. அரசாங்கங்களின் பொறுப்பற்ற தன்மையும், அதிகாரிகள் மத்தியில் இலஞ்சம் சாதாரணமாகிப் போனதுமே இதற்கான முக்கிய காரணங்கள்.
பதினெட்டு வயதை நிறைவு செய்த எந்தவொரு நபரும் வாகனம் செலுத்தப் பழகிக் கொண்ட பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற நடைமுறை இலங்கையில் உள்ளது. சாரதி லைசன்ஸ் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர் சாதாரணமான அறிவாற்றல், மனிதநேயம், குற்றம் நாடாத சுபாவம் போன்றவற்றையெல்லாம் கொண்டதொரு பிரஜையா என்றெல்லாம் ஆராயப்பட வேண்டிய நடைமுறை இலங்கையில் கிடையாது. குறைந்த பட்சக் கல்வியறிவும் கொண்டிருக்காத, குற்றச் செயல்களில் ஊறிப் போன சமூகக் கட்டமைப்பிலிருந்து வந்த ஒருவர் கூட சாரதி லைசன்ஸ் பத்திரத்தை இலகுவாகவே பெற்றுச் செல்ல முடியும்.
இதுவே எமது நாட்டிலுள்ள நடைமுறை. மேற்கு நாடுகளில் இவ்வாறெல்லாம் கிடையாது. சாரதி லைசன்ஸ் கோருவோரின் அடிப்படைக் குணாம்சங்கள் அங்கே பரிசீலிக்கப்படுகின்றன. வீதியில் நடமாடும் உயிர்களை அற்பமாக எண்ணுகின்ற சாரதிகள் அங்கெல்லாம் லைசன்ஸ் பெற்று விட முடியாது. இலங்கையில் உள்ள வாகனமோட்டிகளில் பெருமளமானவர்கள் வன்முறை சுபாவம் நிறைந்தவர்கள். முச்சக்கரவண்டி செலுத்துகின்ற ஒருவரில் இருந்து ஆடம்பரக் கார் ஓட்டுகின்ற ஒருவர் வரை இவ்வாறான வன்முறை சுபாவம் நிறைந்திருக்கின்றது.
சாரதி பயிற்சியில் நன்கு தேறியமைக்கான செயன்முறைப் பரீட்சையையும் இவர்கள் முறையாகப் பூரத்தி செய்திருப்பார்களா என்பது சந்தேகமே!
அதிகாரிகள் மட்டத்தில் இலஞ்சம் ஊறிப் போனதால் ஏற்பட்ட மோசமான விளைவுகள்தான் இவை. இலஞ்சத்தை இத்தனை மோசமாக வளர விட்டதற்கான பொறுப்பு கடந்த அரசாங்கங்களுக்கே உரியது. மக்கள் நடமாடுகின்ற வீதியில் வாகனம் செலுத்துகின்ற ஒருவர் வாகனமோட்டும் திறனை மாத்திரம் கொண்டிருந்தால் போதாது. வீதியில் நடமாடும் உயிர்களை மதிக்கின்ற ஜீவகாருண்யப் பண்பையும் கொண்டிருப்பது முக்கியம்.
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற வீதி விபத்துகளில் கூடுதலாக முச்சக்கரவண்டிகளும், தனியார் பஸ்களுமே சம்பந்தப்பட்டுள்ளன. குற்றமிழைப்பதில் பரிச்சயமாகிப் போனோரிடமிருந்து நல்லொழுக்கத்தையும் ஜீவகாருண்யத்தையும் நாம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக அரசாங்கம் இவ்விடயத்தில் உதாசீனமாக இருந்து விடவும் முடியாது.
இவற்றுக்கெல்லாம் அடுத்ததாக வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துப் பொலிஸார் கொண்டுள்ள கடமைப் பொறுப்பை இவ்விடத்தில் சுருக்கமாக ஆராய வேண்டியிருக்கிறது.
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் தொடர்பாக மக்கள் மத்தியில் பொதுவாக நல்லபிப்பிராயம் என்றுமே இருந்ததில்லை. அவர்களது கடமையில் நேர்மைத்தன்மை உண்டென்ற நம்பிக்கை மக்களிடம் கிடையாது. போக்குவரத்துப் பொலிஸ் பிரிவானது இலஞ்சத்தில் ஊறிப் போனதென்று மக்கள் பொதுவாக நினைக்கின்றனர். அதற்காக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேர்மையற்றவர்களெனக் கூறி விட முடியாது. கூடுதலானவர்கள் முறைகேடாக நடந்து கொள்வதனால், நேர்மையான உத்தியோகத்தர்களும் பாவத்தைச் சுமக்க வேண்டியுள்ளது.
போக்குவரத்துப் பொலிஸார் மீது இவ்வாறு களங்கம் பதிக்கப்பட்டிருப்பதனாலேயே சாரதிகள் துணிச்சலுடன் குற்றமிழைக்க முற்படுகின்றனர். எந்தவொரு குற்றத்தையும் இலஞ்சத்தின் மூலம் மூடிமறைத்து விடலாமென சாரதிகள் நினைக்கின்றனர். எனவே போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் மீதான களங்கம் அகற்றப்படுவது முக்கியம். உயரதிகாரிகள் இனிமேலாவது அதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பது பிரதானம்.
நெடுஞ்சாலைகளிலும் சிறு வீதிகளிலும் எப்போதும் போக்குவரத்துக் குற்றங்கள் நடந்தபடியே உள்ளன. காதைப் பிளக்கும் பேரொலியுடனும், புகையைக் கக்கியபடியும் வாகனங்கள் செல்கின்றன. சில வாகனங்கள் எல்லை மீறிய வேகத்துடன் தறிகெட்டு ஓடுகின்றன. மஞ்சள் கோடு கடவையை அலட்சியப்படுத்தியபடி செல்கின்ற வாகனங்கள் ஏராளம். போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவித்தபடி, போட்டி போட்டபடி அசுர வேகத்தில் தனியார் பஸ்கள் செல்வதை நாம் தாராளமாகவே காண்கிறோம்.
ஆனால் இக்காட்சிகளெல்லாம் போக்குவரத்துப் பொலிஸாரின் கண்களுக்குத் தென்படுவதில்லை.
சமிக்​ைஞ விளக்குகள் பொருத்தப்பட்ட சந்திகளில் எங்காவது மறைந்து நின்றபடி சிவப்பு விளக்கை அலட்சியம் செய்தவாறு வருகின்ற வாகனங்களைக் கண்டுபிடிப்பதில் மாத்திரமே இவர்களின் கடமைப் பொழுது கழிகின்றது. கொழும்பில் உள்ள சில சந்திகளில் ஒரே தடவையில் நான்கு பொலிஸார் இதற்காக நிற்பதுவும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி.
இவ்வாறான ஏராளமான குறைகளின் மத்தியிலேயே வீதி விபத்துகள் பெருகிச் செல்கின்றன. விபத்துகளுக்கான அடிப்படையை ஆராயாமல் அபராதத் தொகையை அதிகரிப்பது பலனைத் தருமென்று நம்ப முடியவில்லை. அநியாய மரணங்களைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly Share

ePaper: | Online edition of Daily News - Sri Lanka

ePaper: | Online edition of Daily News - Sri Lanka

ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை: பிரதாப் ரெட்டி உருக்கம்



மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது.
அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே....
''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் அவரது ஆற்றலை கண்டு நான் வியந்து போயிருக்கிறேன்.
எனக்கு அவரிடம் நல்ல பரிச்சயம் உண்டு. இதற்கு முன்பும் பல முறை நான் அவரை சந்தித்திருக்கிறேன். அதில் ஒன்றை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின், ஹெச்.எம் மருந்துவமனையில் பணியில் இருந்தேன். ஒரு முறை உடல்நலக்குறைவாக காரணமாக என்னிடம் ஜெயலலிதா வந்தார்.
துணைக்கு அவரது தோழிகள் சிலரும் இருந்தனர். எப்போதும் அவரது முகத்தில் அந்த புன்னகை தவழும். என்னை மட்டுமல்ல சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தாலும் அந்த புன்னகை மலரும். காலங்கள் ஓடி முதலமைச்சர் பதவி வரை அவர் உயர்ந்தாலும் என்னை பார்த்தால் அதே முக மலர்ச்சியுடன்தான் பேசுவார்.
இந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நான் அவரது சிகிச்சை முறைகளை தீவிரமாகவே கண்காணித்துக் கொண்டிருந்தேன். சொல்லப் போனால், இந்த இரண்டு மாதங்களும் சென்னை நகரை விட்டு நான் வெளியே எங்கேயும் செல்லவில்லை.
என்னால் முடிந்த வரை அவருக்கு அளிக்கப்படும் மருத்துவத்தை நேரில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். எங்கள் சக்திக்குட்பட்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்து விட வேண்டுமென்பதுதான் எனது எண்ணம். அவரை விரைவில் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன், ஒரு முறை நான் ஹைதரபாத்துக்கு போக வேண்டியது இருந்தது. அதுவம் ஒரு நாள் பயணம்தான். புறப்படுவதற்கு முன்பு கூட அவரை சென்று சந்தித்தேன். நலமாக இருந்தார். என்னை பார்த்ததும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார். அவரிடம் பேசி விட்டுதான் நான் புறப்பட்டேன்.
அந்த சமயத்தில் தொலைக்காட்சியில் அவர் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஹைதரபாத்தில் இருந்து நான் திரும்பும் போது நீங்கள் எழுந்து நடமாடுவீர்கள்' என்று கூறினேன்.
ஹைதரபாத்தில் இருந்து திரும்பியதும் ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்கிற எண்ணமும் எனக்குள் இருந்தது. வந்ததும் அது குறித்து முடிவெடுக்கலாம் என்று யோசித்தவாறு புறப்பட்டேன். நம்பிக்கையுடன்தான் ஹைதரபாத் புறப்பட்டேன். ஆனால், அங்கிருந்து திரும்பியதும் ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரெஸ்ட்' என்றதும் நொறுங்கிப் போனேன். இத்தனைக்கும் இதயநோய் நிபுணர் ஒருவர் அவரை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்.
கார்டியாக் அரெஸ்ட் வந்தது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவரது இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை தென்படவில்லை.
கார்டியாக் அரெஸ்ட் என்றதும் அடுத்த நொடியே எங்கள் மருத்துவக்குழு சிகிச்சையை தொடங்கி விட்டது. இதனை மருத்துவத்துறையில் 'கோல்டன் ஹவர் 'என்று நாங்கள் குறிப்பிடுவோம். ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அறையில் இருந்து இரண்டு அறைகள் தாண்டிதான் 'எக்மோ ' சிகிச்சை அளிக்கப்படும் அறை இருந்தது.
கார்டியாக் அரெஸ்ட் தாக்கிய பல நோயாளிகள் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு பிழைத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நமது மேடம் சி.எம். விஷயத்தில் அது நடக்கவில்லை. ஜெயலலிதா ஜென்டில் வுமேன், சிகிச்சைக்கு அருமையாக ஒத்துழைத்தார். கருணைமிக்கவர், நோய் தந்த வலியை எளிதாக தாங்கிக் கொண்டவர்.
என்னை பொறுத்த வரை ஜெயலலிதா ஒரு அபூர்வமான பெண். அன்பானவர். அவரது கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள மட்டுல்ல தமிழக மக்கள் மட்டுமல்ல அவரது திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் மனுஷி மறைந்தாலும் நமது உள்ளத்தில் என்றும் வாழ்வார்.
பிரதாப் ரெட்டி
- Vikatan

உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்..!!

உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்..!!


இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.
கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.
தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படியானதொரு அறிவு கிட்டியது என்றும், அது குமரிக்கண்டம் எனப்படும் லொமூரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களே என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.
அதனை மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸ்சான்டர் கெந்தர்தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர். அவருடைய கூற்றின் படி எகிப்தியர்கள் வாழ்ந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து வேறு ஓர் சமூகம் அங்கு வந்து குடியேறி உள்ளது.
அந்த சமூகம் குமரிகண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமூரியாவில் இருந்து வந்த சமூகம் என்றும் கெந்தர்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எகிப்துக்கும் இந்தியாவிற்கும் கடல் வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களை கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதன் படி எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல ப்ரெந்தர் ஸ்தோதியார் என்ற ஆய்வாளர் Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள். 1927ஆம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை சேர்ந்தவையுடன் ஒத்துப்போகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடுத்து நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் எனும் மக்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என ஒக்ரான் Autran என்ற தொல் பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். (நைல் நதி என்பது நீல நதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து திரிபு படுத்தப்பட்டு வந்த ஓர் சொல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதும் ஒருவகையில் தமிழர் மரபே அப்படியான ஓர் வழக்க முறையில் உருவாக்கப்பட்டதே எகிப்திய மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறப்படுகின்றது.
இங்கு பெரிய அளவில் எழுப்பப்படும் அடக்கம் செய்யப்படும் இடமான சமாதியே பெரும் இடு (சுடுகாடு) பெருமிடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் பிரமிடு ஆக மாறிப்போனது என்ற கருத்தையும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
அதேபோன்று Edward pokoke என்ற வரலாற்று ஆய்வாளர் Indian in Greece என்ற நூலின் ஊடாக சிந்து வெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் எனவும்..,
சிந்து வெளியில் இருந்து, பெர்சிய வளைகுடாவை கடந்து Oman Hadramont, Yeman கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிஸினியா போன்ற பகுதிகளுக்கு பரவிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Heinrich Kari Brugsh என்பவர் தனது History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலை நாட்டினர் என்று கூறியுள்ளார்.
பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில் பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என Adolf Erkman என்ற ஆய்வாளர் தனது Life in ancient Egypt உன்ற நூலின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை கருத்தை Bengsch Bey என்ற எகிப்து நாட்டு வரலாற்று ஆய்வாளரும் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIliane Hornbergar என்ற பிரான்ஸ் ஆய்வாளரும் அறிஞருமான ஒருவர் எகிப்தின் முதல் வம்ச மன்னன் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்த தமிழர் ஒருவரே என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சான்றுகள் உலகம் இப்போது வியந்து கொண்டிருக்கும் எகிப்தியர்களின் அறிவியல் என்பது தமிழர்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றது.
குறிப்பாக மர்மங்கள் அனைத்திற்கும் காரணமாக தமிழர்களே இருந்து வருகின்றார்கள், அந்த வகையில் பிரமிட்டுக்குள்ளே உறங்குவது தமிழ் மன்னர்கள் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழரே தமது காலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தான் என்றும் உறுதியாகின்றது. என்றாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகம்.
எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும் அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று..,

'உலகில் தமிழ் பழமையான கலாச்சாரம்' பகிரங்கமாக கூறிய பிரதமர்!

சிங்களம் மற்றும் தமிழ் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
சமாதானத்தோடு கூடிய நல்லிணக்கம் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். கலாச்சாரங்கள் வளர்ச்சியடைய வேண்டும். அதே போன்று இனவாதம் காணப்படுமாயின் எமக்கு எப்போதும் முன்னேற முடியாது.
சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்களைப்போல் இந்த உலகில் பழமையான கலாச்சாரங்கள் எதுவும் இல்லை என்பதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளத்திலும் முறையற்ற கருத்துகள் கூறப்படுகின்றன. ஓர் இணையத்தளத்தில் ஏன் இந்த நாட்டிற்கு வேற்று மதங்கள் வந்தன என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
மேலும் அப்படி வருவதை விடவும் எமக்கு கற்களும், மரங்களுமே போதும் அந்நிய கலாச்சாரங்கள் எதற்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நல்ல வேளையாக அந்த காலத்தில் இனவாதம் காணப்பட வில்லை, அப்படி இருந்திருந்தால் அப்போதே நாடு அழிந்து போயிருக்கும்.
நல்லிணக்கம் மிக்க சகவாழ்வோடு இலங்கையும் முன்னேற வேண்டுமென்றால் கலாச்சாரங்களின் வளர்ச்சியும் அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.