சனி, 24 டிசம்பர், 2016

அன்று அராஜகம் புரிந்தோர் ..................


அன்று அராஜகம் புரிந்தோர் ..................


ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ்

 ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ் 


ஜெனிவா யோசனை தொடர்பான ட்ரம்பின் தீர்மானம் பெப்ரவரியில்!!


ஜெனிவா யோசனை தொடர்பான ட்ரம்பின் தீர்மானம் பெப்ரவரியில்!!



இலங்கைக்கு எதிராக போர் குற்றம் சுமத்தப்பட்ட ஜெனிவா யோசனை தொடர்பாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
யோசனையை திரும்ப பெறும் அதிகாரம் அமெரிக்க ஜனாதிபதிக்கு உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உலக இலங்கையர் பேரவை என்ற சிங்கள அமைப்பும் யோசனையை திரும்பபெறுமாறு டொனால்ட் ட்ரம்பிடம் கோரியுள்ளதாக சிங்கள வார பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெனிவா யோசனையை அமெரிக்க ராஜாங்க திணைக்களமே மனித உரிமை பேரவையில் முன்வைத்தது.
ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், யோசனையை கொண்டு வர காரணமாக இருந்த ஹிலரி கிளின்டனுக்கு சார்பான அதிகாரிகளின் அதிகாரம் குறையும் என தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படி இருந்த போதிலும் ஜெனிவா யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
நமது தமிழ் தலைமைகள் இது சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள்?.முள்ளிவாய்க்காலில் மொத்தமாக இறந்தவர்கள் எத்தனைபேர் என்பதே தெரியாத தமிழ் தலைமைகள்.இவர்களை நம்பி இருக்கும் தமிழ் மக்களின் நிலைமை என்னவாகப் போகிறது? இன்னமும் தீர்வு தீர்வு என்று தமிழ் மக்களை திசை திருப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள் 

குடிசன மதிப்பீடு  வட கிழக்கு


1921ஆண்டு .      கிழக்கு                          வடக்கு

தமிழர்                 103251          53.55%           353801       95.19%

சிங்களர்                3794            1.97%            8794            1.02%

முஸ்லீம்               75992          39.41%           13095           3.49%         


ஏனையோர்        9784            05.07%            1139           0.3%


மொத்தம்          192821          100.%           374829        100%


இன்றைய நிலைமை என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும்.ஒன்று ஏதாவது செய்யுங்கள் இல்லாவிட்டால் ..............................

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

#MGR 
மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே நிலவிய உறவானது ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.
தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர். ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப்போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும் திறமையும் வீர வல்லமையும் தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார்.
அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும் கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன். அவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்சியில் அடக்கு முறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன். ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி.ஆர். புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் நெஞ்சம் கரைகின்றது.
கால வெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக படிந்துள்ளன. 1982 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும் முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இம்மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.
பிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங் கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. பிரபாகரன் மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும்.
உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20 கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ. சண்முகம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.
பிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆரை நான் சந்தித்த போது, “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதி வரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.
தன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும்.
தமிழீழ விடுதலைப் போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர். உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின் உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தள நாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வர வேண்டியிருந்தது.
அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச் சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார். அதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான், “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன்.
ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள். தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீது திரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக் கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.
“என்ன? உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பி விட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக் கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என் மீதோ தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று.
1984 ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழகமெங்கும் விடுதலைப் புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர். அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும் நெஞ்சத் துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத் தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டு கொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவு செய்தார்.
அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது. இதற்கிடையில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும் அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது.
அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.
1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம்
2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப்படும்.
3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.
இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத் துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக் காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16 ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்து விட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஆறு மாத காலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’ என எம்.ஜி.ஆர் கூறிய பொழுது பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது.
“கேவலம், மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை. நாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக் கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
இந்தியப் பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர். கூறினார்.
ஆசை வார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்க முடியாது என்பதை பிரதமர் இராஜீவிற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறு பக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச் செயலாளர் வீரமணியும் நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை.
கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக் கொடி காட்டினோம். முன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வர முடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் உட்பட ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம்.
சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சினையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.
தமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப் புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்து கொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன் தமிழகத்திலிருந்த பயிற்சி முகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடிவிட்டு அனைவரையும் தாயகம் அனுப்பி விட்டு தானும் புறப்படத் தயாரானார்.
1987 ஆம் ஆண்டு சனவரி 4 ஆம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப் போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.
ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு.
• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள். எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.
• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கிய போது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்த போது முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்ட போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்ட மன்றத்திலேயே “ஈழத் தமிழர்களோ விடுதலைப் புலிகளோ தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்ட மன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.
• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும் பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் எம்.ஜி.ஆர். தான்.
• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர். தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தி, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது. பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே வேண்டா வெறுப்போடு அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.
• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர். ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணா விரதம் இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும் திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.


 “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் அஞ்சலியை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.
• அது மட்டுமல்ல, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக அவர்களைக் கைது செய்து அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது. நியாயமாக ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று சைனைடு அருந்தி பலியானார்கள்.
அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும் இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால் அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும் அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.
இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைக் காண தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிக்கை விட்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். இதனை 11.10.1987 நாளேடுகளில் காணலாம்.
• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீர மரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப் புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில் பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.
• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்தி விட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ நெடுமாறன முயற்சியால் கூட்டப்பட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
“சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து தமிழக மக்கள் கடைகளை அடைத்து தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இதனை 16.10.1987 நாளேடுகளில் காணலாம்.
• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.
• உடல் நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தனது இரங்கல் செய்தியில், “ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என் மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது.
தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை, வெளிப்படுத்திய கொள்கை உறுதியை நன்றியுள்ள தமிழினம் வெளிப்படுத்த வேண்டும். ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும் இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை, அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.

நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

t
நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறியோடு நடந்து கொள்வதை மக்கள் காணக் கூடியதாக உள்ளது. அதே வேளை, அரசியல் தலைவர்களும் இத்தகைய பௌத்த மதத் தலைவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
பௌத்த மதத்தைச் சேர்ந்த எல்லா தலைவர்களும் இவ்வாறு செயற்படுவதில்லை. ஒரு சில பௌத்த மதத் தலைவர்களே இனவாதத்திலும் மதவாதத்திலும் தோய்ந்தெழுந்திருக்கின்றார்கள். அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்புக்களில் உள்ள அமைச்சர்கள் சிலரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட இவர்களுடன் அணி சேர்ந்து இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்கமளித்து வருகின்றார்கள்.
மதமும் அரசியலும் வேறு வேறானவை. ஆயினும், மதத் தலைவர்கள் அரசியலை வழி நடத்துகின்ற போக்கு காலம் காலமாக இலங்கை போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதிகார பலம் கொண்ட அரச தலைவர்கள் தமது பொறுப்புக்களில் இருந்து வழி தவறிச் சென்று விடாமல் தடுத்து நெறிப்படுத்துவதற்காகவே மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டிய மதத் தலைவர்களின் அரசியல் தலையீடு அத்துமீறிச் செயற்படுகின்ற போக்கு இலங்கையின் அரசியலில் படிப்படியாக அதிகரித்து பௌத்த மதத் தலைவர்கள் முழுமையான அரசியல்வாதிகளாக மாறியிருக்கின்றார்கள். இவர்கள் பௌத்த மதத் துறவிகளுக்குரிய அங்கிகளுடன் மத குருக்களாகவும் அதே வேளை முழு நேர அரசியல்வாதிகளாகவும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.
மத குருவாகின்ற ஒருவர் ஆசாபாசங்களையும் லௌகீக வாழ்க்கை முறைகளைத் துறந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது பௌத்த மதத்தின் விதியாகும். உணவையும் அவர்கள் மற்றவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கென்று எதுவுமே இல்லாதவராக இருத்தல் வேண்டும். ஆனால் இலங்கையில் அவர்கள் முற்றும் துறந்தவர்களைப் போன்ற வேடத்தை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளாகவும் அனைத்து வசதிகளையும் அனுபவிப்பவர்களாகவும் மாறியிருக்கின்றார்கள்.
பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக எதையும் செய்யத் துணிந்தவர்களாகவும் எத்தகைய ஒரு நிலைமைக்கும் கீழிறங்கிச் செல்லக் கூடியவர்களாகவும் மாறியிருக்கின்றார்கள். மத குருவின் தோற்றத்தில் இருந்து கொண்டே அந்தத் தோற்றத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாத வகையில் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் வெறுப்பூட்டுகின்ற பேச்சுக்களை பேசுவதைத் தங்களுக்குரிய பண்பாகக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு இன மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்பட்டு, அதனை அந்த மக்கள் பேணி வருகின்ற போதிலும், இலங்கையில் உள்ள பௌத்தர்கள் மட்டுமே இந்த
மதத்திற்கு உரித்துடையவர்களாகவும் அதனை அவர்கள் மட்டுமே பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் கொண்டிருக்கின்றார்கள் என்ற பாவனையில் செயற்படுகின்றார்கள். தாங்கள் இல்லாவிட்டால் பௌத்த மதமே அழிந்து போய்விடும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகள் உண்மையிலேயே புனிதம் நிறைந்த பௌத்த மதத்திற்கு இழுக்கையும் அவப் பெயரையும் பெற்றுக் கொடுப்பதற்கே வழி வகுத்திருக்கின்றன. அவர்கள் இதனை உணரத் தவறியுள்ளார்கள் அல்லது வேண்டுமென்றே அந்த சமயத்திற்கு முரணான வகையில் செயற்பட்டுக் கொண்டிருப்பது அவர்களின் சுயலாபம் கருதிய கபடத்தனத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றது.
பௌத்த மத குருக்கள் அல்லது பௌத்த மதத் தலைவர்கள் என்ற பொறுப்பான நிலையில் உள்ள ஒரு சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். பௌத்த மதத்தின் உன்னதமான கொள்கைகளைப் பின்பற்றியும் நெறி தவறாமலும் மனிதாபிமான பண்பு நிறைந்த எத்தனையோ பௌத்த மத குருக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் உள்ள எல்லா இன மக்களுடைய மனங்களிலும் உயர்வான ஓரிடத்தில் இருந்து பணியாற்றி வருகின்றார்கள்.
அவர்களுடைய உண்மையான செயற்பாடுகளுக்கு இனவாத, மதவாத அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களின் போக்கு உண்மையிலேயே இழுக்கை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. மதவாதம் கொண்ட அரசியல்வாதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்குகின்ற ஆதரவானது இனவாத, மதவாத கடும்போக்காளர்களான பௌத்த மதத் தலைவர்களின் போக்கிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன மக்களுடைய அரசியல் ஆதரவை அமோகமாகப் பெற்றிருந்தாலும் கூட பௌத்த மத அமைப்புக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே செயற்பட்டு வருகின்றார்கள். இந்த வழி முறை காலம் காலமாக அவர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. பௌத்த மத பீடாதிபதிகள் கூறுகின்ற கருத்துக்கள் அல்லது அவர்கள் விரும்புகின்ற அரசியல் போக்கு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பொதுவான நன்மைக்கு உகந்ததாக இல்லாதிருந்தாலும் கூட அவற்றை மறுத்துரைத்துச் செயற்படுவதற்கு இந்தக் கட்சிகள் ஒரு போதும் முனைவதில்லை.
பௌத்த மத பீடாதிபதிகள் மட்டுமல்ல, ஞானசார தேரர் போன்ற தீவிரச் செயற்பாடுடைய தனிப்பட்ட அல்லது அமைப்பு ரீதியான செயற்பாட்டு வல்லமை கொண்டவர்களின் கருத்துக்களையும் அவர்கள் ஒது போதும் புறந்தள்ளுவதில்லை. அவர்களுடைய மனம் கோணாத வகையிலேயெ சிங்கள அரசியல் தலைவர்கள் நடந்து வருகின்றார்கள். இதனை அவர்கள் மரபு ரீதியான நடைமுறையாகப் பின்பற்றி வருவதையும் காண முடிகின்றது.
இந்தப் போக்கானது இனங்களுக்கிடையில் ஒரு மோசமான யுத்தத்தினால் சீரழிந்துள்ள நல்லிணக்கம், சகிப்புத் தன்மை என்பவற்றை மேலும் மோசமடைவதற்கே வழி வகுத்துள்ளது. அடி மட்டத்தில் உள்ள மக்கள் மத ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ பிளவுபட்ட மனப்பாங்கைக் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் வேறு வேறு மொழியைப் பேசி, வேறு வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வந்த போதிலும் அவர்கள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டிருக்கின்றார்கள்.
ஒருவருடன் ஒருவர் இணங்கிச் செல்கின்றார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இணைந்து வாழ்கின்றார்கள். ஆனால், அவர்களின் மனிதாபிமானத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அரசியல்வாதிகளும் சுயநலப் போக்கு கொண்ட மதவாதிகளுமே குழப்பியடித்து அதில் அரசியல் ரீதியாகக் குளிர் காய்ந்து வருகின்றார்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். ஆனால், இனங்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்கே கொண்டாட்டம் என்ற நிலைமையே அரசியல் ரீதியாகக் காணப்படுகின்றது.
இது சுயலாப நோக்கம் கொண்ட அரசியல் பண்பாகத் தலையெடுத்து படிப்படியாக வளர்ந்தோங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது. பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரையடுத்து, மட்டக்களப்பில் உள்ள அம்பிட்டியே சுமணரத்தன தேரர் அரசியலில் இன்று பேசு பொருளாக மாறியிருக்கின்றார். தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு எதிராக இனவாதத்தைக் கிளப்புவதிலும் வெறுப்பூட்டுகின்ற கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் செய்து வசை பாடுவதிலும் அவர் முன்னணியில் இருக்கின்றார்.
முறையற்ற வகையில் காணிகளைக் கைப்பற்ற முயற்சித்த சிங்களக் குடும்பங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழ் கிராம சேவை அதிகாரியிடம் முறை கேடாக நடந்து கொண்டதுடன் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் அடாவடியாக பௌத்த விகாரை அமைப்பதற்கும் அவர் முயன்றிருந்தார். அவருடைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரிடமே கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொண்டிருந்தார்.
பகிரங்கமான அவருடைய இந்தச் செயற்பாடுகளுக்கு சட்டம் எதுவுமே செய்யவில்லை. நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும் இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள பௌத்த மத குருக்களுக்கு எதிராகப் பாய்வதில்லை. அவர்களையும் அவர்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் சட்டங்கள் கை கட்டி வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது.
அம்பிட்டிய சுமணரத்தின தேரரின் செயற்பாடுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த பதட்ட நிலைமையை சீர் செய்வதற்காக நீதி அமைச்சரும் புத்த சாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். பதட்ட நிலைமையைத் தணித்து, சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்குவதே அவருடைய விஜயத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.
ஆனால், சட்டத்தையும் ஒழுங்கையும் துச்சமாக மதிப்பவரும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் தூண்டு கோலாக இருப்பவருமாகிய ஞானசார தேரரையும் அமைச்சர் தம்முடன் அங்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்தச் செயலானது அமைச்சருடைய விஜயத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது என்றே கூற வேண்டும். முறையற்ற விதத்தில் சுமணரத்தன தேரர் நடந்து கொண்டிருந்ததை நாடும் உலகமும் நன்கு அறிந்துள்ள போதிலும் அவருடைய செயலை நியாயப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மட்டக்களப்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்திருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபான்மையினராக உள்ள சிங்கள மக்களைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இல்லாத காரணத்தினால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமணரத்தின தேரர் நடந்து கொள்வதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முனைப்புடன் செயற்படுவதாகக் கூறப்படுகின்றது.
மோசமான யுத்தத்தினால் நலிவடைந்துள்ள இனங்களுக்கிடையிலான உறவை சீர் செய்வதற்கு நல்லிணக்கம் அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியும் அதற்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்தும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரையிலான ஒரு வாரத்தை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க வாரமாகக் கொண்டாட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இது ஆரம்பமாகவுள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் சமாதானம், ஒற்றுமை, சகோரதத்துவத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவித்தல் வெளியாகியுள்ள சந்தர்ப்பத்திலேயே நீதி அமைச்சரும் புத்த சாசன அமைச்சருமாகிய விஜேதாச ராஜபக்ச இனவாதச் செயற்பாட்டில் முன்னணி வகிக்கின்ற பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாக மட்டக்களப்பில் சென்று ஆராய்ந்துள்ளார்.
மட்டக்களப்பு சுமரணத்தன தேரரின் செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்ற வகையிலேயே அமைச்சர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளார். பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளே அங்கு இனங்களுக்கிடையில் பதட்டத்தை உருவாக்கியது என்பதைத் தெரிந்து கொண்டும் கூட அது குறித்துக் கவலைப்படும் வகையிலோ அல்லது அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலோ அவர் கருத்து வெளியிடவில்லை.
அவருடைய விஜயத்தின் போது தமிழ் ஊடகவியலாளர்களை ஒரு நிகழ்வில் பிரசன்னமாகியிருக்கக் கூடாது எனத் தெரிவித்து வெளியேற்றியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அமைச்சரின் இந்தச் செயலானது பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதை உறுதிப்படுத்துவதுடன் நில்லாமல், உள் நோக்கம் ஒன்றுடனேயே அவர் மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தாரோ என்று எண்ணுவதற்குத் தூண்டியிருக்கின்றது.
மட்டக்களப்பில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்கென நாடாளுமன்ற பிரதிநிதிகள் இல்லாத நிலையில், சிங்கள மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற பௌத்த பிக்குகள் இனவாத, மதவாத ரீதியில் செயற்படுவதனால்தான் இங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக மட்டக்களப்பில் உள்ள தமிழர்கள் நாட்டில் ஒருவித மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியிருக்கின்றார்.
புத்த சாசன அமைச்சர் என்ற ரீதியில் இனவாத, மதவாத நோக்கில் செயற்பட்டிருந்தாலும் கூட அவ்வாறு செயற்படுகின்ற பௌத்த பிக்குகளைப் பாதுகாக்க வேண்டிய கடமைப் பொறுப்புக்காக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனால் இந்த நாட்டின் நீதி அமைச்சர் என்ற வகையில் அவருடைய இந்தக் கருத்து விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. புத்தசாசன அமைச்சர் என்ற ரீதியில் அவர் பௌத்த மக்களுக்காகச் செயற்பட வேண்டியவராக இருக்கலாம். ஆனால் நீதி அமைச்சர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர் நீதியாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்..
நீதி அமைச்சர் என்ற வகையில், அவர் நீதியான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும். இந்தக் கடமையும் பொறுப்பும் அவரைச் சார்ந்திருக்கின்றது. அதனை அவர் தவிர்க்க முடியாது. இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெத்த பிக்குகள் மட்டக்களப்பில் நடந்து கொண்ட சம்பவம் குறித்து பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு புத்த சாசன அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவைச் சார்ந்திருக்கின்றது.
அதே வேளை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு சூழலில் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அவரைச் சார்ந்திருக்கின்றது. இந்த நிலையில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் மாறுபட்ட நிலையில் மட்டக்களப்பு விஜயத்தின் போது அவர் செயற்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதல்ல.
பொறுப்பு கூற வேண்டியதும் நானே, பொறுப்பு கூறப்பட வேண்டிய சம்பவத்திற்கு நீதி வழங்குவதும் நானே என்ற இரட்டை நிலைப்பாட்டிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச காணப்படுகின்றார். குற்றம் புரிந்ததும் நானே நீதி வழங்குவதும் நானே என்றதொரு நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் அமைச்சரின் நடவடிக்கை எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
இந்த நிலையிலேயே மட்டக்களப்பு சம்பவங்கள் தொடர்பில் நீதி அமைச்சரின் செயற்பாட்டையும் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களையும் நீதி அமைச்சரின் நீதியற்ற செயல் எனச் சுட்டிக் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கண்டனம் வெளியிட்டிருக்கின்றார். இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமும் அதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கையாளப்பட்ட இராஜதந்திர வழி முறைகளும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாறாத கசப்பான வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக நல்லுறவைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. அது மட்டுமல்லாமல் யுத்தம் ஒன்று மூள்வதற்குரிய காரணங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து கண்டறிந்து வெளிப்படையாக அதற்கான பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். அதனை அந்த அரசு செய்யவில்லை. மாறாக யுத்தத்தில் கிடைத்த வெற்றியையே அரசியலுக்கான முதலீடாக்கி வெற்றி வாதத்தின் மீது ஆட்சியைக் கொண்டு நடத்தியது.
அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசம் செய்தும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியும் யுத்தத்தின் மூலம் கிடைத்த ஆயுத ரீதியான வெற்றியை அனைத்து மக்களினதும் அரசியல் வெற்றியாக மாற்றியிருக்க வேண்டும். அத்தகைய அரசியல் மூலோபாயச் செயற்பாட்டையும் முன்னைய அரசு செய்யவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாக்கி அவர்களை மேலும் மனம் நோகச் செய்கின்ற நடவடிக்கைகளையே அந்த அரசு முன்னெடுத்திருந்தது.
இதன் காரணமாகத்தான் யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களின் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. எதேச்சையான அதிகாரப் போக்கில் சென்ற அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கமும் வெற்றி வாதத்தின் நிழலில் இனவாத, மதவாத அரசியல் போக்கை ஊக்குவிக்குமானால் இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது ஏட்டளவிலேயே எஞ்சியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
அது மட்டுமல்லாமல் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரும் கூட நாளடைவில் பொய்த்து பொல்லாத ஆட்சி நடத்தும் அரசாங்கம் என்ற அவப்பெயருக்கு இந்த அரசாங்கம் ஆளாகவும் நேரிடலாம்.

Ravi Raj Murder case: All accused released

Ravi Raj Murder case: All accused released

அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன! அதிர வைக்கும் நாஞ்சில் சம்பத்

அம்மா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளன! அதிர வைக்கும் நாஞ்சில் சம்பத்.



அ.தி.மு.க-வில் நான் இணைந்த உடனே எனக்குப் பொறுப்பும் கொடுத்து, காரும் வழங்கியவர் புரட்சித் தலைவி. அவர் இல்லாத இந்த இயக்கத்தில் எனது இயக்கம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என தழுதழுக்கிறார் நாஞ்சில் சம்பத்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின், சசிகலாவின் அரசியல் என்ட்ரி குறித்து நாஞ்சில் சம்பத்திடம் வினவிய போது அவர் தெரிவித்ததாவது,
ஜெயலலிதா இல்லாத இந்த வெற்றிடத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சூன்யமாகப் பார்க்கிறேன். ஒருவர் இறந்த பின் ‘யாரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம்’ என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. எனக்குத் தெரிந்து இப்போதுதான் அது உண்மையாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. இந்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரும் இல்லை.
பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்களே?
அதை பொதுக்குழு தான் தீர்மானிக்க வேண்டும். ‘இதற்கு எதிராகவும் நான் இல்லை, யாருக்கு ஆதரவாகவும் நான் இல்லை’ என்பதுதான் என் மனநிலை.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு போட்டுள்ளாரே?
இந்த மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்மங்கள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, அம்மாவை யார் பார்த்தார்கள் என்ற விவரங்கள்கூட தெரியவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்கு என அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, படிப்படியாக நோய் வந்தது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.
அதன் பிறகு ‘தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் சரியாக தெரிந்துகொள்கிறார், வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், திடீரென அம்மா இந்த நிலைக்கு ஏன் ஆளானார் என்பது குறித்து சாதாரண பொதுமக்களுக்கு எழுகின்ற கேள்விகள் எனக்குள்ளும் எழுகின்றன.
சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா வழக்கு போட்டிருப்பதன் மூலம், உண்மைகள் ஊர்வலம் வருமானால் எனக்கு மகிழ்ச்சிதான்.
அ.தி.மு.க-வின் எதிர்காலம் எப்படி உள்ளது?
லட்சக்கணக்கான விளிம்பு நிலை மக்களின் அன்பைப் பெற்ற இயக்கம் அ.தி.மு.க. அதைச் சரியாக வழிநடத்திச் சென்றால் எக்காலத்திலும் அந்தக் கட்சிக்கு ஊனம் ஏற்படாது. அது வழி நடத்தக் கூடியவர்களின் வல்லமையைப் பொறுத்தது.
தீபாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க-வில் குரல்கள் எழுகின்றனவே?
அவர் பேட்டியை நான் பார்த்தேன். வார்த்தைகளை அளந்து பேசுகிறார். அவரிடத்தில் முதிர்ச்சி தெரிகிறது. அவருக்கும் முதல்வராக இருந்த அம்மாவுக்கும் இருந்த உறவு முறை இரத்த சம்பந்தம் உடையது. அ.தி.மு.க என்ற இயக்கத்தில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இருப்பது எனக்கே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. சிலர் வெளிப்படையாக இறங்கிவிட்டார்கள். என்னைப்போன்று பொறுப்பில் இருப்பவர்கள் அப்படி செய்ய முடியாது.
கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோ மீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியுள்ளார்களே?
ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருந்த போது, கலைஞர் மீது கணைகளை வீசியிருந்தார் வைகோ. ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலின்போது, ஒரு மலிவான விமர்சனத்தை கலைஞர் மீது வைத்தார். பிறகு மன்னிப்பு கேட்டார்.
இப்போது அ.தி.மு.க-காரர்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார். சம்மன் இல்லாது ஆஜராகும் மனிதராகத் தன்னை அவரே தாழ்த்திக்கொண்டார். தமிழக அரசியலில் அவர் கேலிப் பொருளாகி விட்டது வேதனையைத் தருகிறது.
அந்த தி.மு.க தொண்டர்களின் உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், அந்த அசம்பாவிதம் அரங்கேறி இருக்கக்கூடாது.
அதன் பிறகு தி.மு.க-வின் பொருளாளர், செய்தி தொடர்பாளர்கள் இதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் வைகோ இதைக் கண்டித்து பேட்டி கொடுப்பது அநாகரிகத்தின் உச்சம்.
ஒரு அருவருக்கத்தகுந்த அரசியல்வாதியாக மாறிப்போனார் வைகோ என்பது துரதிர்ஷ்டவசமானது.
ஓ.பி.எஸ் முதல்வராக இருக்கும்போதே, சசிகலாவை முதல்வராக சிலர் முன்மொழிகிறார்களே?
ஓ.பி.எஸ் அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். ஒரு அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புள்ளது, அதை மறந்து விட்டு அந்த அமைச்சர் பேசுகிறார்.
முதல்வர் டெல்லி சென்ற அன்றைக்கு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருப்பது முதல் அமைச்சருக்குப் பின்னடைவு.
மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை.
உதயகுமார் ஆசையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
ஓ.பி.எஸ் அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த அன்றே, சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஒரு அமைச்சர் கருத்து சொல்கிறார். ஒரு அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புள்ளது, அதை மறந்து விட்டு அந்த அமைச்சர் பேசுகிறார்.
முதல்வர் டெல்லி சென்ற அன்றைக்கு இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்திருப்பது முதல் அமைச்சருக்குப் பின்னடைவு.
மாநில நிர்வாகத்துக்கு தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை சக அமைச்சரே இப்படி மட்டம் தட்டுவது இதுவரைக்கும் எங்கேயும் நிகழ்ந்தது இல்லை.
உதயகுமார் ஆசையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்பதை அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
- Vikatan

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தெரிவாகியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தெரிவாகியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தெரிவாகியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவரான பிரதீப் குப்தா என்பவர், தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்று கொண்டார். இதன் மூலம் மேயராக தெரிவாகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
குப்தா மேயராக தெரிவாகுவதற்கு முன்னர், தென் சான் பிரான்சிஸ்கோ நகர கவுன்சில் உறுப்பினராக, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 31ல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013 நவம்பரில் முழு உறுப்பினராக தெரிவானார்.
தென் சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் திட்டக்குழு உறுப்பினராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த நகரத்தின் துணை மேயராகவும் குப்தா பணியாற்றியுள்ளார்.
பிரதீப் குப்தா கூறுகையில், மேயராக தேர்வாகியுள்ளது பெருமையளிக்கிறது. நகரத்தின் முன்னாள் மேயர் மார்க் அடிகோ துவக்கிய பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கவுன்சிலில் பல குழுக்களை சேர்ந்த சிறந்த மக்கள் உள்ளனர். அவர்களில் நகரத்திற்கு பல ஆண்டுகள் சேவை செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.