ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இனத்தாலும் மாகாணத்தாலும் அமைந்த குடித்தொகை -1921

இனத்தாலும் மாகாணத்தாலும் அமைந்த குடித்தொகை -1921

இனவாதம் பேசும் எங்கள் மதிப்புக்குரிய புத்த குருமாருக்கு வட கிழக்கில் 
1921ம் ஆண்டு எத்தனை சிங்கள மக்கள் இருந்தார்கள் என்பதை டொனமூர் அரசியல் யாப்பு சீர் திருத்தத்தின் போது அறிவித்திருந்தார் இது சிங்களம் தமிழ் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வெளியிடப் பட்டது 
இதைக் கண்டுபிடித்தாவது நமது தமிழ் நாட்டாமைகள் பஞ்சாயத்துச் செய்வார்களா?


இன வழியான சனத்தொகை 1921,1926

இன வழியான சனத்தொகை 1921,1926

1928 ஜூன் 26ந்திகதி தொனமூர் அவர்கள் பிரித்தானிய முடிக்குரிய மூன்றாம்  ஜோர்ஜ் மன்னருக்கு எழுதிய டொனமூர் அரசியல் சீரமைப்பு சம்பந்தமான
அறிக்கையில் இலங்கையின் சனத்தொகை பற்றிய அறிக்கையை வெளியிட்டிருந்தார்.அதன் பிரதி


இன்னுமா இந்தத் தமிழ் தலைமைகள் கருணாநிதியை நம்புகிறது? முன்னை நாள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரின் புத்தகத்தில் இருந்து.

இன்னுமா இந்தத் தமிழ் தலைமைகள் கருணாநிதியை நம்புகிறது?
முன்னை நாள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரின் புத்தகத்தில் 
இருந்து. 





ரவி ராஜ் கொலை வழக்கு விசாரணை

ரவி ராஜ் கொலை வழக்கு விசாரணை -01



இலங்கையில் பகடக்காயாக உருட்டப்பட்ட தமிழ் மக்கள். இந்திய உளவு அமைப்பின் சதி

இலங்கையில் பகடக்காயாக உருட்டப்பட்ட தமிழ் மக்கள்.
இந்திய உளவு அமைப்பின் சதி


ரா மற்றும் ஐபி உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர் கள்-
இன்று இந்தியாவின் உளவு அமைப்புகளான ரா மற்றும்
ஐபிக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ராவின் தலைவராக அணில் தஸ்மனாவும் ஐபியின்
தலைவராக ராஜீவ் ஜெயினும் நியமிக்கபட்டுள்ளார்கள்.
வாழ்த்துக்கள்..
நம்முடைய நாட்டில் இரண்டு உளவு அமைப்புகள் உள் ளது,ஓன்று ஐபி எனப்படும் இன்டெலிஜென்ஸ் பீரோ மற்றொன்று ரா எனப்படும் ரிசர்ச் அண்ட் விங்க்ஸ் ஐபியின் வேலை உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான
உளவு வேலைகளிலும் ரா வெளிநாட்டு உளவு வேலை களிலும் ஈடுபடுவதாகும்.
இன்டெலிஜென்ஸ் பீரோ 1933-ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் உருவாக்கபட்டு சுதந்தரத்திற்கு பின்னும் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது.சீனா யுத்த த்தில் கிடைத்த தோல்வியினால் ஐபி யின் செயல்பா ட்டின் மீது அதிருப்தியடைந்த நேரு ஒரு புது உளவு அமை ப்பை உருவாக்க நினைத்திருந்தார், ஆனா ல்அது அவரால் முடியாமல் அவரது மகள் இந்திராகாந்தி மூலம் நிறைவே றியது
ரா அமைப்பு 1968ல் செப்டம்பர் 21 ம் தேதி இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போ தைய ஐ.பி அதிகாரியாக இருந்த ஆர்.என்.காவ் தான் ரா அமைப்பு தொட ங்குவதற்கு காரணமாக இருந்தார். இதனால் அவரின் பெயராலே ராவின் உளவாளிகள் காவ் பாய்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டி ல் 250 பணியாளர்களுடன் தொடங்கப்ப ட்ட ரா-வின் இன்றைய ஆண்டு பட்ஜெட் சுமார் 900 கோடி ரூபாய்.
ரா வோட முக்கிய வேலை அண்டை நாடுகளில் உளவு பார்த்தல், ஆட்சிகவிழ்ப்பு நடவடிக்கைகள்,, கலகக் குழுக் களை உருவாக்குதல் ஆகியவைதான், ‘ரா’வின் செயல்பா டுகள் ஆகும் ராவின் இமாலய சாதனை என்னவென்றா ல்.பாகிஸ்தானை பிரித்து வங்காள தேசம் உருவாக ரா மேற்கொண்ட நடவடிக்கை தான்
முக்தி வாகினி என்கிற போராட்ட குழுவை உருவாக்கி
அதற்கு ஆயுதப்பயிற்சி அளித்துஉள்நாட்டில் கலவரத்தை தூண்டி பிறகு இதையே ஒரு போராக மாற்றி பாகிஸ்தா னை துண்டாடியது ரா.இது தான் ராவின் மாஸ்டர் பீஸ்.
ஆனால் இதே மாதிரி இலங்கையில் செய்ய ஆரம்பித்து
இடியாப்ப சிக்கலில் ரா சிக்கிக்கொண்டதும் மறுக்க முடி யாத தோல்வி தான்
இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் தோ ல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்ன மும் இலங்கையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கி றது. கருணாவை புலிகளின் கூடாரத்திலிருந்து பிரிய
வைத்து பிரபாகரனுக்கு எதிராக அவரின் ரகசியங் களை கருணாவின் மூலம் பெற்று யுத்தத்தில் பங்கு பெற வை த்து புலிகளை ஒடுக்கியதும் ராவின் சாதனையே
இலங்கையில் ராஜபக்சேவின் ஆட்சி சீனாவிற்கு சாதக மாக சென்று கொண்டிருப்பதை தடுக்க நினைத்த ரா அமைப்பு இலங்கை எதிர் கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவிடம் பேசி தேசிய அர சாங்கம் என்று ஆசை காட்டிராஜ பக்சேவின் சொந்த கட்சி யில் இருந்து மைத்ரி சிறிசேனாவை உருவி ஜனாதிபதியாக்கி இலங்கை அரசியலை மாற்றியதில் ராவின் பங்கு பாராட்டு
க்குரியது.
இப்பொழுதும் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் தனி
நாடு கேட்டு போராடும் விடுதலை இயக்கத்தின் பின்னால்
ரா சி.ஐ.டி.எக்ஸ்உளவாளிகள் உள்ளதை மறுக்க முடியாது.
ரா’வின் சிறப்புப் பிரிவான ‘சி.ஐ.டி. எக்ஸ்’ என்பதின் பிரதான வேலையே எதிரி நாடுகளில் ஊடுருவி அங்குள்ள கலக குழுக்களிடம் நட்புறவை ஏற்படுத்திஅங்கு உள்நாட் டு பிரச்சனையை தூண்டுவதே இதன் பிரதான பணியாகும்
அதிகாரபூர்வமாக ராவில் 25,000 பேர் வேலைபார்க்கிறார் கள். இவர்களில் 3,500 பேர் கள உளவாளிகள். அதிகார பூர்வமாக அல்லாமல் எத்தனை பேர் வேலை பார்க்கி றார்கள் என்பது நம்முடைய பிரதமருக்கு மட்டும் வேண் டுமானால் தெரிந்திருக்கலாம்..
இன்னொரு முக்கியமானவிஷயம் என்ன வென்றால் ராவில் முஸ்லிம்கள் இல்லைஎன்று சொல்கிறார்கள். அதனால் தான் பாகிஸ்தானுக்கு இந்துக்களையே முஸ் லிமாக மாற்றி பாகிஸ்தானுக்கு உளவுப்பணிக்கு அனுப் புகிறது ரா அமைப்பு .சமீபத்தில் கூட தீபக் குமார் என்கிற
ரா ஏஜண்டை பாகிஸ்தான் உளவு அமைப்பு கைது செய்து
பாகிஸ்தான் ஊடகங்களில் அவரின் பேட்டியை ஒளிபரப்பியது.
.
ரவீந்தர் கவுசிக் என்று ஒரு பெயரை கேள்விபட்டிருக்கி றீர்களா .இல்லையென்றால் ஏக் தா டைகர் என்கிற இந்திப்
படத்தை பார்த்து இருக்கிறீர்களா..பார்த்து இருந்தால் உங்களுக்கு கவுசிக்கை பற்றி தெரிந்து இருக்கும். சல்மா ன்கானின் கேரியரில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தப்படம்.
இந்த படம் ரவீந்தர் கவுசிக் வாழ்க்கை வரலாற்றை சொல்லிய படம்..
ராஜஸ்தானில் பிறந்த கவுசிக் அடிப்படையில் கவுசிக் ஒரு நாடக நடிகர் 1970 களில் ரவீந்தர் கவுசிக்கின் நடிப்பை லக்னோ தேசிய நாடக விழாவில் கண்ட இந்திய உளவுப்ப டை அதிகாரிகள், அவருக்கு டெல்லியில் வைத்து இரண்டு ஆண்டுகள் டிரைனிங் கொடுத்து முஸ்லிமாக மாற்றி நபி அகமத் ஜாகிர் என்கிற பெயர் சூட்டி பாகிஸ்தானு க்கு அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்த்துக் கொண்டே இந்தியாவிற்காக உளவு பார்த்து தகவல் அனுப்பிக்கொண்டு இருந்தார் கவுசிக்.
அப்பொழுது அமனத் என்கிறபாகிஸ்தான் பெண்ணை காதலித்து திருமண ம் செய்து கொண்டார்.பிறகு காதல்
என்றால் சும்மாவா..
1975 ல் பாகிஸ்தானுக்குள் நுழைந்த கவுசிக் 1979 ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவுக்கு முக்கிய
மான தகவல்களை அனுப்பிக்கொண்டு இருந்தார். கல்யா ணம் முடிந்த பிறகு உணமையிலேயே கவுசிக் முஸ்லி மாக மாறிவிட்டார்.பாகிஸ்தானில் போய் சட்டகல்லூரி யில் படித்து பட்டம் வாங்கிய கவுசிக் பாகிஸ்தான் ராணு வத்தில் துறை ரீதியாக முன்னேறி வந்தார்.
இந்த நேரத்தில் தான் இனயத் மசிகா என்கிற இன்னொரு
உளவாளியை 1983 ல்ரா அனுப்பியது.இதை மோப்பம் பிடித்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இனயத் மசிகாவை கைது செய்து விசாரிக்க கவுசிக்கும் மாட்டிக் கொண்டார். பாகிஸ்தான் கோர்ட் கவுசிக்கிற்கு மரண தண் டனை விதித்தது. பிறகு மேல்முறையீட்டில் மரணதண்ட னை ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள். அதுவரை இவரை பயன்படுத்திக்கொண்ட ரா கவுசிக் பிடிபட்டதும் கவுசிக்கா அப்படி யாரும் இந்தியாவில் பிறக்கவே இல்லை
என்று கூறி விட்டார்கள்.
.பிறகு ஆமாங்க நாங்க தான் பாகிஸ்தானை உளவு பார்க்க
அனுப்பினோம் என்று மேடை போட்டா பேச முடியும்.
பாவம் ஜெயிலுக்குள் இருந்த கவுசிக் டிபி நோயினால் பாதிக்கப்பட்டு ஜெயிலுக்குள்ளேயே 2001 ல்இறந்து போனார். இவருடைய அம்மா அப்பா இருவரும் மகன் போன திசையையே பார்த்துகொண்டு இருந்து கடைசி வரை மகனை பார்க்காமலேயே இறந்து போனார்கள்.
கடைசியில் உளவு வேலையில் சிறப்பாக செயல்பட்டதற் காக இவருக்கு 'கருப்பு டைகர்' என்ற பட்டம் அளிக்கப்ப ட்டது.இந்தியாவிற்காக தன் வாழ்க்கையையே தொலை கவுசிக்கின் குடும்பமோ தற்போது வறுமையில் வாடுகி றது. இதனால் இவருடைய தம்பி ராஜேஸ்வர் ஏக்தாடை கர் படத்தின் தயாரிப்பாளரை போய் பார்த்து ஐயா உங்கப்
படத்தின் கதை என் அண்ணனின் கதையாக உள்ளது.
ஆதலால் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று
கேட்க உங்க அண்ணனா ராஜேந்தர் கவுசிக்கா?ஆமாம்
ராஜேந்தர் கவுசிக்னா யாரு என்று ரா மாதிரியே கேட்க
இது தான் இந்தியா என்று இன்றும் ராஜஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கவுசிக்கின் தம்பி.இப்படி
தான் வெளிச்சத்திற்கு வராமலே சப்ரஜித் சிங் கவுசிக்
மாதிரி ரா உளவாளிகள் இந்த நாட்டிற்காக தங்களின் அடையாளத்தை இழந்து மரணம் அடைந்துள்ளார்கள்.
அவர்களை தியாகத்தை ஒரு நிமிடமாவது நாம் நினைத்து
பார்ப்பதே இந்த தேசத்திற்கு நாம் செய்யும் சிறு தொண்டாகும்

V.
ijayakumar Arunagiri

முதல்வராகிறார் சசிகலா? பன்னீர் செல்வத்துக்கு ஆப்பு ரெடி? அமைச்சர் பரபரப்பு தகவல்!




மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, அவருடைய வெற்றிடத்தை நிரப்புவதற்காக, அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருப்பது அதிமுக வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களிலே தமிழக முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இதனால் அதிமுகாவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட வேண்டும் என்று பன்னீர் செல்வம் உட்பட அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வரும் 18 ஆம் திகதி ஜெயலலிதாவின் சமாதியில் மொட்டை அடித்து தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளோம். அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

ஈழத்து நாட்டார் பாடல்கள்


ஈழத்து நாட்டார் பாடல்கள் 


சினிமாப் பாடல்களைக் கேட்டு புளித்துப் போன உங்கள் காதுகளுக்கு 
செந்தமிழில் விளைந்த தேன் மதுரத் தமிழில்,அதுவும் ஈழத்து மண்ணில் இனிதாய் மலர்ந்த காலத்தால் அழியாத காதர் பாடல்கள்.
இயற்றியவர்:தெரியாது இணைத்தவர் கலாநிதி,இளையதம்பி பாலசுந்தரம் 


தமிழ் மன்னன் இராவணன்

தமிழ் மன்னன் இராவணன் அவனின் வீர வரலாறு படிக்க 

சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை | Virakesari.lk

சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை | Virakesari.lk: சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை