செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்-3


3,வது, அதிகாரம்
துஷ்ட கைமுனு அரசனாபது முதல்;ஸ்ரீ சங்காபன் மரணபரியந்தம்.
கி.பூ-151 -கி.அ-218 
இப்படி எல்லாளன்,இங்கிருந்தரசியியற்ற அங்கே உருகுணையில் மகாநாகனுக்குப்
பின் அவன் வமிசத்தவனாகிய கவன்தீசன் அரசனாகி அரசு செய்து வருகையில்,
அவன் புத்திரருள் மூத்தவனாகிய (GAMMUNU ) கைமுனு என்பவன்,பாலப் 
பிராயந்த்தொட்டு தமிழர் கையினின்றும் இலங்கையை அபகரித்துக் கொள்ள
வேண்டுமென்ற,பேரவாலும்உள்ளக் கடுப்பு முடையவனாயுமிருந்தான்.
ஓர் நாள் அவன் தன் கால்களை மடித்துக் கொண்டு படுத்திருந்ததைக் கண்ட 
கவந்தீசன்,அவனை நோக்கி,"அப்பா,என் பாலா,நீ,நீட்டி நிமிர்ந்து படுக்கலாகாதோ?"
என்று கேட்க,அதற்கு கைமுனு,"தந்தாய்,கால் நீட்டிப் படுக்கப் போந்த; இடம் தேடி 
வைத்தீரோ? ஒரு பக்கத்தை ஆற்றுக்கப்பால்,தமிழர் கட்டிக் கொண்டார்,மற்றொரு
பக்கத்தையோ, சிறிதும் பின்வாங்காத சமுத்திரங் கொண்டது. பின்னே எனக் 
கிடமெங்கையோ"வென் தூத்தரமாய்க் கூறினான். அதைக்கேட்டு தந்தை வெட்கி ,
அப்புறம் போயினான்.சிலநாட் சென்ற பின்,கைமுனு யுத்த வீரர் சிலரைச் சேர்த்துக்
கொண்டு,தந்தையிடஞ்சென்று எல்லாளனுடன் போர் செய்யப் போகத் தனக்கு
விடைதரும்படி கேட்க, அதற்கு உடன்படாது மறுத்தான்.இப்படிச் சின்னாள் இடை
இடையே,விட்டு கைமுனு, மும்முறை போயிரந்துகேட்க,அம்முறையும் அவன்
தந்தை,யுடன்பட்டானில்லை,அதனால் கைமுனு மிகுந்த கோபாவேசனாய்,
உடனே அந்தப்புரஞ்சென்று,பெண்ங்களணியும் ஓர் ஆபரணத்தை வாங்கி,
அதை ஓர் தூதனிடம் கொடுத்து,"என் தந்தை,ஆண் பிள்ளையல்லனாக,இதை
அவன் அணியத்தகும்."என யான் சொன்னதாகச் சொல்லி,தந்தையிடம் கொடுத்து,
வாவென்று  அனுப்பினான்.அம் மரியாதைக் குறைவான செயலுக்காக
கவந்தீசன்,தன்மைகனைத் தண்டித்தல் வேண்டுமென்று முயல,கைமுனு
அதற்கஞ்சி அவ்விடம் விட்டு மலை நாடு தேடி யோடித்,தந்தை இறக்கும்
வரையில்,ஊருக்கு மீளுவதில்லை என்னும் விரதத்தோடு,அங்கிருந்தான்,
இவ்வகைப் படிவின்மை காரணமாக,அவனுக்கு,அவன் தந்தையே "துஷ்டன்"
என்னும் பட்டப் பெயரைக்கொடுத்தான்.இது நிகழ்ந்து சில நாளில்,கவந்தீசன்
இறந்துபோக, "நெயக்குடமுடைந்தது  நாய்க்கு வாய்ப்பான "பான்மைபோல்,
கைமுனு,தன் எண்ணங்களை முடித்தற்கு நல்ல சமயமாயிற்று.உடனே
அவன் போரில் வல்ல,கஜதுர கபதாதிகளுடன் ஓர் சேனையச் சேர்த்துக்கொண்டு,
மகாவலி கங்கையைத் தாண்டி *உச்சித புரத்தை யடைந்து,அதனை வனைந்தான்.
அப்படி வளைந்தும், அவ்வரண்,அதி தீரராற் காக்கப்பட்டிருந்தமையால்,
அநேக மாசங்கள் வரையில் அவன் அப்பட்டனத்தை,கைப்பற்ற இயலாதவனாக,
இருக்கும்,நாளில், ஓர் நாள்,அவன் யானைகளில் ஒன்று அந்நகரத்து,இரும்புக்
கபாடங்களில் ஒன்றைத் தகர்த்து,உள்ளே நுழைய,அவ்வழியாய் மற்றைய
சேனாவீரரும் பிரவேசித்து,உள்ளிருந்த காவல் வீரரை வாளுக்கிரையாக்கித்,
தங்கொடியை யுயர்த்தினர்.இவ்வாறு துஷ்ட கைமுனு கீழ்த்தரமான பல
இடங்களைக் கவர்ந்து கொண்டு,அநுரதபுரத்தை நோக்கிச் சென்று, அதற்கயலிலுள்ள
வோரிடத்தைப் பிடித்து,அதைத் தனக்குப் பாசறை ஆக்கி, அதை மேலும் பலபித்தற்
பொருட்டு அங்கு 32 ,உப அரண்களையும் அமைப்பித்தான்.