சனி, 13 ஏப்ரல், 2019

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

ஜாதகத்தில் சில கிரக சேர்க்கை தரும் பிரச்சினையும்,அதிர்ஷ்டமும்.

                                                                   

ஜனன  ஜாதகம்  எமது  பிறப்பின் இன்ப,துன்ப  விடயங்களுக்கு  முக்கிய வகிபாகமாக  அமைந்திருக்கிறது.அதை உணர்ந்து தெரிந்து செயற்பட்டால்
நாம்  நல்ல பலனை  அனுபவிக்கவும் பிரச்சினைகளைத்  தவிர்க்கவும் அனுகூலமான திசையிலே  எம்மைத் தயார்படுத்தலாம். ஒருவரின் ஜாதகத்திலே மிகவும் முக்கியமான முக்கிய கிரகம் சூரியன் இவரை பித்தாக
கிரகம் என்று ஜோதிட நூல்கள் குறிக்கின்றன.

பிறப்பு ஜாதகம் மேடம்,சிம்மம்,விருச்சிகம்,அல்லது தனுசாக அமைந்தால்.இந்த ஜாதகருக்கு சூரியன் யோகந் தருபவராக அமைவார்.
சூரியனும் சனியும் சம சப்தமாக பார்த்துக்கொண்டால் தந்தை மகன் உறவில் விரிசல் நிலை இருக்கும்.தந்தை மகனுக்குள் பிரிவு நிலை கொடுக்கும்.ஜீவனஸ்தானம் என்கின்ற 10ம் வீட்டதிபதி எந்தக் கிரகமாக
இருந்தாலும், அந்தக் கிரகம் சூரியனுடன் இணைந்திருந்தால் அந்த ஜாதகர்
தொழில் நிலையில் ஒரே இடத்தில்  நிரந்திரமாக   அமர்ந்து தொழில் செய்யும் நிலை அற்றவராக,அடிக்கடி தொழிலை  மாற்றுபவராகவே இருப்பார்.

சூரியனுக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் அமைந்தால் இரக்க குணம்
கொண்டவராகவும், கருணை நிறைந்தவராகவும்  அறிவாளியாகவும்
இருப்பார்.சூரியனும் புதனும் லக்கனத்திற்கு 1ம்,4ம்,8ம்,12ம்,இடத்தில் அமைவது  புத ஆதித்ய யோகமாகும்.இவர்கள் சிறந்த கல்விமான்களாக
இருப்பார்கள் தொழில் நுட்பட்க் கல்வியியல் விசேட தகமை பெறுவார்கள்..
சூரியன்,புதன் சேர்க்கை,1ம்,4ம்,8ம்,இடங்களில் அமைந்திருந்தால், ஏதாவது
ஒரு துறையில் திறமை பெறுவார்கள்.பட்டப்  படிப்பு அமையவும்இடமுண்டு.
சுக்கிரன் ஒருவரின்  ஜாதக நிலைமையில் பலன் பெற்று இலக்கினத்திலோ,
இலக்கினாதிபனுடனோ சேர்க்கை பெற்று,அல்லது லக்கினத்தை பார்வை கொண்டால் இளமை மாறாத தோற்றம் அமையும்.கறுப்பாக  இருந்தாலம்
எல்லோரையும் கவரும் தோற்றம் இருக்கும்..காதலில் வெற்றி பெறுவார்.


சூரியனுக்கு 11ம் இடத்திற்குரிய  கிரகம்  11ம் இடத்தில் இருந்து  அந்த இடம்,
இடபம்,சிம்மம்,விருட்சசிகம்,கும்பம் என அமைந்திருந்தால் அதிகமான தன
இலாபம் அந்த ஜாதகருக்கு அமையும் நிலையிருக்கும். ஜென்ம லக்கினத்திற்கு கேந்திரங்களில்  10ம் இடம் மட்டுமே சூரியனுக்கு சிறப்புப்
பலன் அமைகின்றது.

புதனும் சுக்கிரனும் இணைந்து 1ம்,4ம்,5ம்,9ம்,10ம்,இடம் அமைந்தால் உலக
அறிவு மிக்கவராகவும்,அதிக நன்மைகளைப் பெறுபவராகவும் பலன் அமையும்.சூரியனும் புதனும் இணைந்து இருந்து இவர்களுடன் சுக்கிரன்
கூட்டணி அமைத்தால் கல்வியில் தடைகள் ஏற்படும்.குருபார்வை அல்லது
குருவின் ஆதிபத்தியம், அமைந்திருந்தால் தடைப்பட்ட கல்வி தொடரும்.ஒரு பெண்ணின் ஜாதக அமைப்பில் 10ம்,அதிபதியுடன் சந்திரனும்,குருவும் சேர்க்கை பெற்று இருந்தால்,தாய் வீட்டுத் சீதனம் தடையின்றிக் கிடைக்கும்.
என்பது ஜோதிட விதி.பொதுவாக  ஜாதக அமைப்பிலே கணவனுக்கு சரராசி
லக்கினமாகி,மனைவிக்கு ஸ்திர ராசி லக்கினமாகவும் கணவனுக்கு  ஸ்திர
ராசி லக்னமாகி, பெண்ணுக்கு உபய ராசி லக்கணமாக அமைவது மிகவும்
சிறப்பான வாழ்க்கைக்கு எடுத்டுக காட்டாகும்.மனைவியின் இலக்கணம் சர  லக்கணமாக அமைந்து,கணவனின் லக்னம் ஸ்திரம் அல்லது உபய லக்கினமாக அமைந்தால்,குடும்பத்தில்  மனைவியின் செயற்பாடு மேலோங்கி இருக்கும்,ஒரு ஜாதகத்தில் கணவனுடைய ஜென்ம லக்கினத்திற்கு 2ம் இடம் தொடக்கம் 6ம் இடம் வரையில் பெண்ணின் லக்கினம் அமைந்தால்,அப்பெண்ணால் குடும்பத்தில் நன்மையையும் வரு
வாயும்,இலாபமும் ஏற்படும்  ஒருவரின் ஜாதகத்திலே எந்த லக்கினமாக
இருந்தாலும்  சூரியன் ரிஷபம்,துலாம்,ராசியில் அமைந்தால் திருமணம் தாமதமாக அமையும்.ஒருவரின் ஜாதகத்தில்  4ம்,இடத்தில் சனீஸ்வரன்
அமைந்து தனது 7ம், பார்வையால்  10ஆம் இடத்தை  பார்வை கொண்டால்
அந்த ஜாதகர் திரி காலம் அறிந்த ஞானியாக இருப்பார் திகழ்வார்.
ஜாதக அமைப்பில் 7ம் இடத்தில் சனிஸ்வரன்  புதன் சேர்க்கை அல்லது
சனீஸ்வரன் சந்திரன் சேர்க்கை இருந்தால்,ஏற்கனவே  மணமான பெண்ணையே, மணந்து வாழக்கூடிய நிலையை உருவாக்கும்.

சந்திரனும்,சுக்கிரனும் பெண்ணின் ஜாதக அமைப்பில் 7ல் இருந்தால் அதிக
வயது கூடிய கணவரை மணம் முடிக்கவேண்டிய நிலைமை அமையும்.ஒரு
பெண்ணின் ஜாதக அமைப்பில் லக்கினாதிபதி,சுகாதிபதி சப்தமாதிபதி
கிரகங்கள் நீசம் பெற்று அமர்ந்து இருந்தால்,சந்தர்ப்ப வசத்தால் தனது கற்பையும் இழக்கவேண்டிய சூழ் நிலையம் அமையும்.

ஜனன இலக்கினம்,ஜனனராசி   இவை  இரண்டும் பெண் இராசியாக
அமைந்தால்,அந்த ஜாதகி மிகவும் அழகுடையவளாகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவளாகவும் இருப்பாள்.  சுபக்  கிரக பார்வை கிடைத்தால் பல
வகையிலும் யோகங்கள் பெறும் நிலை அமையும். ஒரு பெண்ணின் ஜாதக
அமைப்பில் செவ்வாய்,சுக்கிரன் சேர்க்கை  சூரியன் செவ்வாய் சேர்க்கை சிறப்பானது அல்ல.முன்னது பெண்ணின் கற்பு நெறிக்கு களங்கத்தை
ஏற்படுத்தும்.பின்னது குடும்பவாழ்வில் பிரிவினையைக் கொண்டடுவரும்.
சனியும் செவ்வாயும்  பிறந்த ஜாதகத்தில் எங்கு கூட்டணி அமைத்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு எதாவது ஒரு வழக்குப் பிரச்சினை
இருந்து கொண்டே இருக்கும்.பெண்களுக்கு சூரியன் செவ்வாய் சேர்க்கை
தனியாக அமைந்து அந்த  இடம் இலக்கினத்திற்கு 2ம்,7ம்,8ம் இடமாக அமைந்தால் குடும்ப நிலைமையில் சற்று பிரச்த்திணைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை அமையும்.எனவே திருமண பொருத்த இணைவில்
ஆணுக்கும் சூரியன் செவ்வாய் சேர்க்கை அமைந்திருந்தால்,எந்தப் பிரச்சினையும் இருக்காது.பொதுவாக அஸ்வினி ஒருவரின் ஜாதக அமைப்பில் லக்கின அதிபதி,குடும்ப ஸ்தானாதிபதி களஸ்திர ஸ்தானாதிபதி
கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் நிலை பெற்று இருந்து,பாபக் கிரகங்களின் சேர்க்கை பெற்றும்  அமைந்தால் வாழ்க்கையில் அதிகமான
போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.


"சோதிட வித்துவான்" S R T ஐயர் வெள்ளவத்தை.


சோதிடம்,கிரக சேர்க்கை,களஸ்திரம்