மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 மார்ச், 2011

பூமிக்கு அருகில் சந்திரன்.


சோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.சந்திரன்
வழமையான தூரத்தில் இருக்கும் போது,கடலில் ஏற்படும் மாற்றங்களை,நாம் 
கண் கூடாகக் காண்கிறோம்.பௌர்ணமி தினத்தில் கடற்கரையை போய்த் 
தரிசித்தவர்களுக்குத் தெரியும்,கடலின் சீற்றம் எப்படி இருந்தது என்பது பொதுவாக பூரணை தினங்களில் கடலை,நம்பி வாழும் மீனவர்கள் கூட 
கடலுக்குச் செல்வதில்லை,காரணம் கடலின் சீற்றம்.இது வழமையான பூரணை 
நாட்களில் இலங்கை, இந்தியாவில் இருக்கும் மக்களின் நம்பிக்கை.இந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நாள்,பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு 
விசேடமான நாளாகத்தான் இருக்கும். இது சோதிட சாஸ்த்திர ரீதியாக 
வெளியிடப்பட்ட கருத்தும் கூட,நமது சோதிட நிபுணர்கள் சொல்வதை யாரும் 
நம்ப வேண்டாம், அமெரிக்காவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவர் கூறியதையும் 
பாருங்கள்.இது இன்றைய பிரித்தானியா  டெய்லி மெயில் பத்திரிகையில் 
வந்த ஒரு விளக்கம்.இதை இவர் 1980 களில் இப்படியான சுப்பர் மூன் வந்த நேரத்தில் எழுதியது.இதைப் படிக்க நமது வகுப்பறை வாத்தியாரின் வகுப்பில் 
சொல்லியிருப்பதைப் படிக்க,இங்கே போகவும். 

விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை கீழ் வரும் காணொளி விளக்குகிறது 
எது சரி என்பதை நாம்தான் தீர்மானிக்கப்  போகிறோம் எப்போது நாளைக் 
காலையில்.அலைகளுக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருப்பதை ஒத்துக் கொண்டுள்ளவர்கள்,நில நடுக்கம்,எரிமலை வெடிப்பு என்பவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை .இதைப் படிக்க  காணொளியைப்    பார்க்க இதற்கு முந்திய 
இடுகைக்குச் செல்லவும்.  

Do People Act Odd When the Moon Is Full?


வியாழன், 20 ஜனவரி, 2011

கிடைத்த வெள்ள நிவாரணம்.


இதற்கு  முதல் எழுதிய பதிவில் வெள்ள நிவாரணம் படும் பாடு என்பதை எழுதியிருந்தேன், இது எனது பிரதேச மக்களுக்குக்  கிடைத்த வெள்ள நிவாரணம்.கிட்டத்தட்ட ஒருமாதம் வெள்ள நீருக்குள் கிடந்து,பிரண்டு
சாதனைகள் செய்த  மக்களுக்கு,ஒரு வழியாக, புண்ணியவான்கள் மனது வைத்து, வழங்கிய  அரசாங்க நிவாரணம்,மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் ஆணைக்கிணங்க
மண்முனை வடக்கு,பிர தேச செயலாளரின், அனுசரணையுடன்,எமது பகுதி கிராம சேவையாளரால்,வழங்கப்பட்டது.முன்னைய பதிவில் குறிப்பிட்ட,நிவாரணத்திற்கும்,
இந்த நிவாரணத்திற்கும் சம்பந்தம் இல்லை.அந்த நிவாரணப் பணத்திற்கு என்ன நடந்தது
என்பதை நிற்சயம் இந்தப் பிளாக்கில்,கட்டாயம் வெளிவரும்.

இதை நான் வாங்கப் பட்டபாடு,ஐயா,சொல்லில் மாளாது,நான் தான் இதற்கு உரியாள் என்பதை நிருபிக்க,இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டபோதுகூட,
இவ்வளவு கஷ்டப்படவில்லை.பத்துப் பேர் கொண்ட,ஒரு குழுவால்,சரியாக விசாரணை
செய்யப்பட்ட பின்புதான்,இந்தப் பொட்டலம்,எனது கைக்குக் கிடைத்தது.


1 .துவாய்.................................................................150 .00
2 .போத்தல் தண்ணீர் 1500 .மல...........................120 .00..
1பைக்கட்,90 ,கிராம் சொக்கலட் மாறி பிஸ்கட் 30 .00
1 .பைக்கட்,90கிராம் மில்க் கீரீம் பிஸ்கட் ..........30 .௦௦00௦௦
1 .பைக்கட்,70,கிராம் மாறி பிஸ்கட் ....................20 .00
1 .சன்லையிற் சலவை சோப்பு ............................27 .00
1 .பற்பசை சிறியது .................................................35 .00
1 .பல் தூரிகை,..........................................................32 .௦௦௦௦௦௦00௦௦
1 .அங்கர் பைக்கட் 400 கிராம்...............................244 .00
1 .லக்ஸ் சோப்பு ......................................................32 .00
3 .சம்போ பைக்கட் ..................................................15 .௦௦௦௦௦௦00
மொத்தம்..................................................................735.00


கையில் வெள்ள நிவாரண பொட்டலம்,கிடைத்தவுடன்,உடனடியாகப் பிரித்து,அதிலிருந்த
ஒரு தண்ணீர்ப் போத்தலையும்,ஒரு பிஸ்கட் பைக்கட்டையும்,அவ்விடத்திலேயே, சாப்பிட்டு முடித்து,எனது களைப்பைத் தேற்றிக் கொண்டேன்

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு ஒரு வருடச் சம்பளம்,125 கோடி ரூபா, நாள்
ஒன்றுக்கு அவர்களின் சம்பளச் செலவு,.3,42 ,466.௦௦ ரூபா இதை  நான் சொல்லவில்ல,
நமது சக பதிவர் ஒருவரின் பதிவில் வாசித்தது.நீங்களும் பார்க்க  இன்னும் எவ்வளவு செலவுகளை எடுத்துக் காட்டலாம்,ஆனால் அவைகளின் எதிர் விளைவுகளைத் தாங்கக்
கூடியளவு,நமது உடம்பும் தயாரில்லை,குடும்பச் சூழலும்,நல்லதாக இல்லை.

இப்படி நமது நாட்டின் முக்கிய செலவுகளை,எண்ணிப் பார்த்து,நமது நாட்டில் ,வாழுகின்ற
மக்களின் இயலாமையை நினைத்து,மனது நிறைந்த பாரத்துடன்,கையில் இருந்த நிவாரணப் பொருள்களின்,பாரம் தெரியாமல்,எனது வீட்டை நோக்கிய பயணத்தைத்
தொடர்ந்தேன்.