செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-2

அநுரத புரத்திலுள்ள எல்லாளன் சமாதி .

இரண்டு தமிழர்கள் கொலை செய்யப் பட்டதற்கே எல்லாளன் என்ற சிற்றரசன்,தமிழகத்தில் இருந்து படைதிரட்டி  வந்து சண்டையிட்டது 
பழைய வரலாறு. ஆயிரக் கணக்கில் தமிழர்கள்,துடி துடித்துச் சாக 
கொலை செய்யத் தூண்டியவனுடன், சேர்ந்து கைகுலுக்கி, சேர்ந்து  
வாழுங்கள் என்று கடிதம் எழுதியது இன்றைய தமிழகத்தின், 
,சாதனையுடன் கூடிய வரலாறு. என்ன நடந்ததது இன்றையத் 
தமிழருக்கு 
முதலிருந்து  படிக்க.. 
௨.அதிகாரம்
தேவப்பிரிய தீசன் அரசனானது முதல்; எல்லாளன் வெற்றிபரியந்தம்.

முத்த சிவராஜனுக்குப்பின்,அதாவது கி.பூ. 307ம் வருசத்தில் அவன் மகன் 
(Devananpiatissa ) தேவப்பிரியன் என்னும் பட்டப்பெயருடைய தீசன் அரசனானான்.
இவன் சிம்மாசன மேறியவுடன்,பூமியில் புதைந்து கிடந்த பொன், வெள்ளி,
இரத்தினாதிகள் வெளி யெழும்பின வென்றும், மூங்கில்கள் தாமே வளர்ந்து 
புஷ்பங்கள், மிருகங்கள், பலவர்ணப் பஷிகள் முதலியவற்றை ஈன்றன 
வென்றும் சிங்கள் புராணம் கூறும்.இது மங்கள வருணனையன்றி,
உண்மையாய் நடந்ததன்று.