ஞாயிறு, 14 மே, 2017

யார் மனிதா பிமாணி?

யார் மனிதா பிமாணி: 👇👇👇


ஆஷ் துரை vs வாஞ்சிநாதன்:
T Arulmony
நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி' எஸ்கோர் ஆஷ்.
ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அந்த விடுதியின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதில் இறந்துபோனார்.
ஆஷ், டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்கிறார். 1892ல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கவிதை எழுதும் பழக்கமும் கொண்டவர். பின்னர் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறார்.
முதல் பணி, இன்றைய ஒரிசா மாநிலத்தில், அன்றைய கஞ்சம் மாவட்டத்தில். பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910 திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணியில், தென்னிந்தியாவின் கடைகோடிக்கே வந்து சேர்கிறார் ஆஷ்.
இதற்காக தமிழ், தெலுங்கு முதலியனவும் கற்று தேர்ந்திருக்கிறார். இதற்கிடையிலேயே சேரன்மகாதேவி, சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி முதலிய இடங்களிலும் அதிகாரியாக பணியாற்றி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
17 ஜூன் 1911, காலையில் ரயில் பயணத்தில் ஆஷும் அவரின் காதல் மனைவி மேரியும் கொடைக்கானலுக்கு தன் பிள்ளைகளை பார்ப்பதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர்...
சரியாக 10.38க்கு மணியாச்சி சந்திப்பை தொடர்வண்டி நெருங்கியது. வறண்ட கிராமத்திலிருந்து வெளியில் தனியாக விடப்பட்ட மணியாச்சி சந்திப்பு அது. கிராசிங் ரயிலுக்கு காத்திருந்தது ஆஷ் பயணப்பட்ட வண்டி. முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தனர் ஆஷ் தம்பதியினர்.
அந்த சமயம், குடுமி வைத்து நல்ல மிடுக்குடனும் பச்சை கோர்ட்டு அனிந்த ஒரு இளைஞனும், கூடவே மற்றொரு மனிதரும் முதல் வகுப்பு பெட்டியருகில் வேகமாக வந்தனர். பதட்டத்துடனும் ஆவேசத்துடனும் இவர்கள் இருந்தனர். திடீரென, ஆஷ் துரையை நோக்கி தன்னுடைய பெல்ஜியத் தானியங்கித் துப்பாக்கியை நீட்டுகிறார் அந்த இளைஞன். அதிர்ந்து போகிறார் ஆஷ்.
எதிர்பாராத நொடியில் ஆஷ் துரையின் நெஞ்சில் துப்பாகியால் சுடுகிறார் அந்த இளைஞன். ஆஷ் சுயநினைவினை இழக்கிறார். இரயில் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. கங்கைகொண்டான் அருகில் கொண்டு செல்லும் போது தன் உயிரையும் விடுகிறார் ஆஷ் துரை.
அந்த இளைஞன் நடைமேடையில் ஓடி, பின், அந்த ரயில் நிலையத்திலேயே தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார். அவர்தான் வாஞ்சி நாதன்.
எதற்கு இந்த கொலை....??? ஏன் இந்த வெறிச்செயல்...???
ஆம்.. வரலாற்றை அறியாத கூட்டம் வரலாறு படைக்க முடியாது...!
காரணம் இதுதான்... 👇👇👇
''குற்றால அருவியில் குறிப்பிட்ட
ஒரு குலத்தவரே குளிக்க முடியும்,
ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும்
குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர்
ஆஷ்.''என்பது நம்மில் எத்தணை பேருக்கு தெரியும்???
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய
கலெக்டர் ஆஷ் துரை சனாதன வெறியன் வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஆஷ் துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது. ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை...
அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது என்றும்
சொல்லுகிறார்...
அதற்க்கு ஆஷ் துரை, ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வா என்றார். சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார்....
துரை, "மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம், பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க ...
அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டு கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்....
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த
திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார். மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரை யெனும் காப்பாற்றலாம்என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை.
ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியோட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார்...
என்ன விடயம் என்னவென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த
மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.
அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான்
சென்றாகவேண்டும். சரியாய்
அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும்
வண்டி இப்பாதை வழியே போகக் கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்...
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என
எச்சரிக்கிறார்கள்...
வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும் தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள்...
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்...
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள்,
தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்...
குதிரையோட்டியின் பக்கதிலே அமர்ந்து கொண்டார்...
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது...
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்...
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்க முடியாது" என்கிறார்கள்.
வழிவிட சொல்லிப்பார்த்தார் ஆஸ் துரை...
பார்ப்புகள் மறுக்கவே...
வண்டியைக்கிளப்பு என்று வண்டியோட்டிக்கு உத்தரவிடுகிறார்...
மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத் தோல் ஆஸ் துரை அவர்களின் குதிரைச் சவுக்கால் புண்ணாக்கபடுகிறது...
அந்த பெண் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லபட்டு குழந்தையுடன் காப்பாற்றப்பட்டாள்...
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய
கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும்
இருந்தான் அவன் பெயர் தான் வாஞ்சிநாதன்.
அப்போது அவன் எடுத்த சபதம்தான்
ஆஸ் துரையை ஜூன் 17, 1911 இல் ரயிலில் கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதில் யார் மனிதாபிமான மிக்கவர்...
ஒரு மனித உயிர், மனித ஆத்துமா எவ்வளவு விளையேறப்பெற்றது...
இதை உணர்ந்த மனிதர் யார்...??
இதுவும் லான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில்
அரசு ஆவணகாப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது..