செவ்வாய், 8 செப்டம்பர், 2009

இனிமையை என் சொல்வேன் புதுமை!

Posted by Picasaபுது ரோஜா மலர் கொண்ட மென்மை-கடை
மது ரோஜா தனை வென்ற தன்மை!
இதழ் மீது தந்தாளே பதுமை –அந்த
இனிமையை என் சொல்வேன் புதுமை!

காமனோடு போராடும் நெஞ்சம் –என்
கவிதைகள் சீராடும் மஞ்சம்!
எல்லோர்க்கும் அதன் மீது வஞ்சம் –நான்
என்றுதான் காண்பேனோ தஞ்சம்!

கண்களால் அவளிட்ட மறை -இனிக்
காலமெல்லாம் அதுதானே சிறை!
காதலில் இதுதானோ கரை –வாழப்
போதுமே அவளீந்த இன்ப உரை!

தங்கத்தில் இல்லையொரு பிழை –தமிழ்ச்
சங்கத்தில் பாயுமொரு மழை!
மௌனத்தில் காண்பதும் கலை -அவள்
மொத்தத்தில் தங்கச் சிலை!