'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
புதன், 17 பிப்ரவரி, 2010
மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்
மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்
மத்தியில் இந்தப் பாடல்கள் பிரபல்யம். ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம் ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள். மிகவும் மனவருத்தமான விஷயம் இந்தத் தலை முறையுடன் இது அழிந்து விடும். நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.தற்போது
அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்,இயந்திர மயப்படுத்தல்,கட்டாயக் கல்வி முறை இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.
கீழ்வரும் பாடல்கள் தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.
கச்சான் அடித்த பின்பு -நடுக்
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலு மயிர்-தலை
ஓரம் எல்லாம் வழுக்கை
கண்ணுமொரு பொட்டை-இரு
காதுகளும் செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல-அவர்
கூன் வளைந்திருப்பார்
முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
மூணு பல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்-ஒரு
காலுமெல்லோ முடமவர்க்கு
நாணற்பூப்போல -தலை
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல -இந்தக்
குமர்தானோ வாழுறது
தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
தக தகவென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.
அத்தர் புனுகாம்
அழகான பவுடர் மணம்
இஞ்சி தின்ற குரங்குபோல -
இவருக்கேனோ இச்சொகுசு.
பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
பவுசாக நடந்திட்டாலும்
அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
ஆறுநாட் பட்டினியாம்.
சங்கிலியும் தங்கமில்லை -
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்-
இருக்கிறது இரவல் தானாம்
லேபிள்கள்:
களத்து மேடு,
நாட்டார் பாடல்கள்,
மட்டக்களப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை!
பதிலளிநீக்குஎவ்வளவு அழகான எதுகை மோனை ஆற்றொழுக்குப் போல்; மேலும் இடுங்கள்.
இனிமேல் இவை அழிந்துவிடுமென்பதே கவலை.
அன்றைய நாட்களில் முல்லைத்தீவுக் கடற்கரையோரம்; உடப்பு மீனவர்கள் கரைவலை இழுக்கும் போது
மிக அருமையான" அம்பா" பாடுவார்கள்.
இந்த எழுதா இலக்கியமெல்லாம் என்னாகுமோ எதிர்காலத்தில்; நினைக்கவே வேதனையாக உள்ளது.
எங்க பாஸ் இருக்கிரிங்க
பதிலளிநீக்குநாங்களும் உங்க இடம்தான்
http://ulavan.net/topsite/index.php?a=join
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.எழுதா இலக்கியங்கள் இன்னும் ஓர் ஆயிரம் உண்டு,நிச்சயம் பதிவிடுவேன்,காத்திருங்கள்,உங்கள் வருகையை எதிர் பார்த்திருக்கிறேன்
பதிலளிநீக்குAn interesting discussion is definitely worth comment.
பதிலளிநீக்குI think that you should write more on this topic, it might not
be a taboo subject but generally people don't discuss these subjects. To the next! Many thanks!!
Review my webpage; maha mrityunjaya mantra
அழகான பாடல்
பதிலளிநீக்குஅழகான பாடல்
பதிலளிநீக்கு