வெள்ளி, 6 ஜனவரி, 2017

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!


குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும்.
மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாக வே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச்
செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும்.
நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது.
ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின்
மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும்
குடும்பங்களும் அடங்கும்.
12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித் திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
13. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக்
கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள்.
கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
* மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;
அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி! 

பரீட்சை பெறுபேறுகள்

பரீட்சை பெறுபேறுகள்  இலங்கை போர்க்குற்றங்களை கட்டவிழ்த்து தமிழர்களை கொன்றழித்தது ராஜபக்ச அரசு - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் என்ன நடக்கக் கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் எதிர்பார்த்தார்களோ அது தான் நடந்திருக்கின்றது.
போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த முடியாது என்று இலங்கை அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைப் போரில் அனைத்துப் போர்க்குற்றங்களையும் கட்டவிழ்த்து விட்ட இராஜபக்சே அரசு, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்களை கொடூரமாக கொன்றழித்தது.
தமிழர்கள் படுகொலைக்கு நீதி விசாரணை கோரி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அவ்விசாரணைக்கு இலங்கை தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்ட நிலையில், அவற்றைக் கடந்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
அந்த விசாரணையில் தெரியவந்த குற்றச்சாற்றுகளை விசாரித்து தீர்ப்பளிக்க பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன.
ஆனால், அதற்கு மாறாக பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய இலங்கை நீதிமன்றமே இதுபற்றி விசாரிக்கும் என இலங்கை உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவேறியது.
அதனடிப்படையில் கலப்பு நீதி விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில வாரங்களிலேயே அதை ஏற்க முடியாது என்றும், முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட நீதிமன்றம் தான் விசாரணை நடத்தும் என்றும் இலங்கை அரசு பிடிவாதம் பிடித்தது.
ஆனால், உலக நாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, போர்க்குற்றங்கள் பற்றி எத்தகைய விசாரணை நடத்துவது என்பது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் நோக்குடன், மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை 26.01.2016 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைத்தார்.
ஓராண்டாக விசாரணை நடத்திய இக்குழு நேற்று முன்நாள் அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
அதில் இலங்கை அரசின் விசாரணை மீது வடக்கு மற்றும் கிழக்கு மாநில மக்களும், பிற பகுதிகளில் உள்ள மக்களில் ஒரு பிரிவினரும் நம்பிக்கையின்றி இருப்பதால், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் தான் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதும், ஏற்காததும் அரசின் விருப்பம் இந்த பரிந்துரைகளை ஏற்க முடியாது என்பதால் நிராகரிக்கிறோம் என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித செனரத்ன கூறியிருக்கிறார்.
பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் தான் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இலங்கை நிராகரிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் இராஜபக்சே அதிபராக இருந்த போது, பன்னாட்டு விசாரணை குறித்து அரசுக்கு பரிந்துரைக்க கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம தலைமையில் குழு அமைத்தார்.
பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் தான் போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம குழு பரிந்துரைத்த நிலையில், அதை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
இப்போது வல்லுனர் குழு அளித்த இரண்டாவது பரிந்துரையையும் இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இதன் காரணமாக, இலங்கை அரசின் மீதான போர்க்குற்றங்கள் பற்றி இனி உள்நாட்டு நீதிமன்றமே விசாரணை நடத்தும். இந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது.
அதுமட்டுமின்றி, தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் அனைவரும் தப்பி விடுவார்கள். இதைத் தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது. இலங்கை போர்க்குற்றங்கள் மீதான நீதிவிசாரணை குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் பிப்ரவரி 27&ஆம் தேதி முதல் மார்ச் 24&ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், தனது தீர்மானத்தை தானே மதிக்காத இலங்கையிடம் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்தும்படி மீண்டும் மீண்டும் கெஞ்சுவதில் எந்த பயனுமில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
எனவே, இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் கூட்டத்தில் இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!- ஐ.நா.பேரவை


போர்க்குற்றம் தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!- ஐ.நா.பேரவைஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது,ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்றம் என்ற கொள்கையில் மாற்றமில்லை என்று ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது
தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறையின்போதுஒரு சர்வதேச நீதிபதியையாவது ஏற்றுக்கொள்ளவேண்டு;ம் என்று இலங்கையின் நல்லிணக்கபொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரை அடங்கிய ஆவணம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று நேற்று அமைச்சர்ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தமது பதில்கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அதில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றஉயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் ஹூஸைனின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றுபேரவை வலியுறுத்தியுள்ளது.

சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு?

சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு?

எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பிழையானவையும், பரஸ்பர விரோதமானவையுமாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்கும் ஆணைக்குழுவிற்கு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக பிழைகள் குழப்பங்களுடன் அவசர அவசரமாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இந்த அறிக்கையின் அடிப்படையில் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு கூடுதல் உறுப்பினர்களும் சில உள்ளுராட்சி மன்றங்களுக்கு குறைந்தளவு உறுப்பினர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய உள்ளுராட்சி மன்ற எல்லைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 58937 ஆகும், இந்த உள்ளுராட்சி மன்றத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கை 23 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 68591 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 12 மட்டுமேயாகும்.
உஹன பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத் தொகை 52137 ஆகும், பிரதேச சபைக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 17 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் முஸ்லிம், தமிழ் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் சனத்தொகைப் பரம்பல் பாரியளவில் வித்தியாசப்பட்டாலும், சம எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் எண்ணிக்கையே வழங்கப்பட்டுள்ளது.
குச்சவெளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 31200 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
பதவி ஸ்ரீபுர பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 12703 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
மேலும் மொரவௌ பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 9939 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்,
கோமரன்கடவல பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 8348 ஆகும், இந்த பிரதேச சபைக்கான உறுப்பினர் எண்ணிக்கை 10 ஆகும்.
மிகவும் சனத்தொகை அதிகமான பிரதேச சபைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியின் மொத்த சனத்தொகை 203976 ஆகும், இதற்கான உறுப்பினர் எண்ணிக்கை 35 ஆகும்.
இதன்படி 6182 பேருக்கு ஒர் உறுப்பினர் என்ற அடிப்படையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.இந்த பிரதேசபை இரண்டாக அல்லது மூன்றாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயத்தின் போது பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன.
புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா என்பது பற்றிய விடயங்கள் எல்லை நிர்ணய அறிக்கையில் பரிந்துரை செய்யப்படவில்லை.
எல்லை நிர்ணய அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன, யாரின் தேவைக்கு அமைய இவ்வாறு அவசர அவசரமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.