மனிதன் பிறந்தது இதில் இருந்துதான்
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
தெய்வ மதன் கலை தெளிவோம்
என் அகத்தே எக்கணமும் இணைந்திருந்து
எழிற் சங்கத் தமிழ் மூன்றின் இதம் அழைந்து
மின்னு விழி நோக்கினிலே உயிர் மருந்து
மெல்லிடையே ஈந்தாயென் தனையுணர்ந்து
பாடுகிறேன் சொற் தமிழில் தேன் கலந்து
பாவாய்; என் பரிசில் இதை நீ உவந்து
தேடரிய செல்வம்மென்றே சொல் மகிழ்ந்து
தித்திக்கும் முத்தமிழ் வாய் இதழ் திறந்து
என்றென்றும் உயிர் வாழ்வேன் உனை நினைந்து
என்னை வந்து நீ அணைப்பாய் இதயம் கனிந்து
அன்றே நான் சொர்கத்தின் பனி நனைந்து
ஆயிரம் பாட்டாக்குவேன் யுன்எழில் வனைந்து
உருவாக்கும் புதுச் சரிதம் உறவு உணர்ந்து
உள்ளம் இரண்டு ஒன்றாகும் இடம் பெயர்ந்து
திருவாக்கும் மணவறையில் நாம் நுழைந்து
தெய்வ மதன் கலை தெளிவோம் தினம் இணைந்து
லேபிள்கள்:
காதல் கவிதைகள். நினைப்புகள். மன்மதன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)