ஞாயிறு, 7 மார்ச், 2010

நெஞ்சம் மறப்பதில்லை.!



நமது பாடசாலை நாட்களில்,தினமும் கடவுளை வணங்குகிறமோ?இல்லையோ?தவறாமல் கோயில் திருவிழாக்கள்,கலை விழாக்கள்,இவைகளில் பங்குபற்றாமல் தவற விட்டது கிடையாது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் எமது ஊரில் அருகில்  உள்ள திரோபதை அம்மன் ஆலயம் விசேடமானது,எந்த வருடமானாலும் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு முதல் வரும் மூன்று நாட்கள் அனேகமாக,புதன்,வியாழன்,வெள்ளி விசேடமாகப் பூசைகளும் இடம்பெறும்,அதேபோல் எங்களது திருவிளையாடல்களும் அதிகரித்துக்
காணப்படும்.தொடர்ந்து சனி,ஞாயிறு வரைக் கடைத்தெரு இருக்கும்.பாட சாலை இல்லாத சந்தோசம்,கட்டுப்படுத்த எவரும் இல்லாத சூழல்,பதினாறு பதினேழு வயதுப் பருவம் ஓரளவு கையில் பணம்,பாடசாலை மானவர்கள் குழாம்.எப்படிஇருக்கும்.சந்தோசக் காடு அந்த ஐந்து நாட்களும்,சொல்லி,வேலைஇல்லை.

நான் அந்தக் கோயிலில் ஒரு சிறிய விளையாட்டுப் பொருள் வாங்கி,அதைக் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன்.அதன் பெயர் என்னவென்று தெரியாது,தகரத்தால் செய்யப்பட்டிருக்கும்.இரண்டுவிரல்களால் இயக்கலாம் அமர்த்துப் பட்டவுடன் "டிச்"என்று சத்தம் வரும் பெரிய உருவமும் கிடையாது.எவ்வளவு விரைவாக அமைத்துகிறோமோ ,அவ்வளவு விரைவாக சத்தம் வரும்,எனது நண்பன் ஒருவனுக்கு இந்தச் சத்தம் அலர்ஜியாகிவிட்டது.இதுபோதும் எங்களுக்கு,அவனை வெறுப்பேற்றுவதற்காகவே,தொடர்ந்து "டிச்""டிச்""டிச்"என்று அடித்து அவனை ஒரு வளி பண்ணி விட்டோம்.

அடுத்த நாள் திங்கட் கிழமை,பாடசாலை ஆரம்பம்,பாடசாலை போகும்போது மறவாமல் அந்த "டிச்" "டிச்" "டிச்" சையும் எடுத்துப் போனேன்.இன்றும் எனது நண்பனை கலாய்ப்பதற்குத்தான்.

எங்களது வகுப்பறை அமைந்திருப்பது,ஒரு மண்டபத்தில்,மேடையில் ஒரு வகுப்பு மண்டபத்தில் இரு வகுப்புகள்.மொத்தம் மூன்று வகுப்புகள். எமது வகுப்பறை மண்டபத்தின் வாசலில் அமைந்திருந்தது.ஆசிரியர்கள் இருந்தால் அமைதி அங்கு குடி
கொண்டிருக்கும்,இல்லாவிட்டால் அமிர்தகழி திமிர்த களம்தான்.ஒரு வகுப்பில் நாற்பதுக்கு குறையாத மானவர்கள்,நாங்கள் பத்து பண்ணிரண்டுபேர்,படிப்பிலும் கெட்டிக்காரர்கள்,குறும்பிலும் கெட்டிக்காரர்கள்,இது சில ஆசிரியர்களுக்குப் பிடிக்கும்,
சில ஆசிரியர்களுக்குப் பிடிக்காது.இது எங்களது அந்நேரத்து நினைப்பு.குற்றம் செய்தவன்,
தன் குற்றங்களை மறைப்பதற்காக,சிலரை விரோதியாகப் பார்ப்பது வாழக்கம்தானே.

அந்த நேரம் ,இரண்டு நேர வகுப்புக்கள் நடக்கும். காலையில்  இருந்து மதியம் வரை  ஒருபகுதியாகவும்,மதியம் இருந்து மாலை வரை ஒருபகுதியாகவும்,வகுப்புக்கள் நடக்கும் .காலை நேர வகுப்புக்கள்,நேரம் போவது தெரியாமல் நடக்கும்,மாலை நேர வகுப்புக்கள்
படு கஷ்டமாக இருக்கும்.காரணம்,தொடர்ந்து ஆங்கிலமும் கணிதமும் மாலை நேர
வகுப்பாக இருப்பதாலும்,வரும் ஆசிரியர்கள் இருவருமே கண்டிப்பானவர்கள் என்பதாலும்.

சாப்பாட்டு நேரம் முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் நெருங்கியது.எல்லோரும்
வகுப்பறையை அடைந்து ,அவரவருக்குரிய இருக்கையில் அமர்ந்துவிட்டோம்.நான் இருப்பது "டிச்" "டிச்" "டிச்"பிடிக்காத நண்பனுக்கரிகில் இடது பக்கத்தில் அடுத்து ஒரு நண்பன், வலது பக்கத்தில்,நடுவில் "டிச்" "டிச்" "டிச்"பிடிக்காத நண்பன். ஒரு வரிசையில் ஐந்து பேர் இருப்போம்.மணி அடித்ததும்,ஆங்கில ஆசிரியயை எதிர்பாத்து காத்திருந்தோம்,ஆசிரியை வகுப்பறையை நெருங்கி வந்துவிட்டார்.எழும்பி வணக்கம்
சொல்லுவதற்கு முன்,எனது பக்கட்டில் இருந்த  "டிச்" "டிச்" "டிச்" அருகில் இருந்த அதைப்
பிடியாத நண்பனின் காலடியில் விழுந்து  விட்டது.அதை எடுக்க குனிந்தால் ஆசிரியை
கண்டுவிட்டால் ஒரு கதையும் இல்லை,பொருள் பறிமுதல்,பாடம் முடியுமட்டும் ,வகுப்புக்கு வெளியே அனுப்பி விடுவார். வெளியே நின்றால் பாடசாலை அதிபரின் காரியாலயம் எதிரே,வெளியில் நிற்பதைக் கண்டால்,அடித்துச் சம்பல் போட்டுவிடுவார்,
இந்த இக்கட்டை உணர்ந்த   "டிச்" "டிச்" "டிச்" நண்பன் அதை தனது செருப்புக்கும் காலுக்கும்
இடையில் ஒழித்து வைத்துக் கொண்டான்.சந்தர்ப்பம் கிடைக்கும் போது,எடுத்து தருவதாக சொல்லிக்கொண்டு,.

ஆசிரியர் தனது மேசையருகை நெருங்கியதும், எல்லோரும் ஒருமித்த குரலில் ''குட் ஆவ்ரநூன், ரீச்சர்" என்று சொல்லி முடிப்பதற்குள்,  "டிச்" "டிச்" "டிச் என்ற சத்தமும்
தொடர்ந்து வர,ஆசிரியை அமரவில்லை,குட் ஆவ்ரநூன்,சிற்டவுன் என்றும் சொல்லவில்லை.திரும்பி நின்று தனது மேசைக்கு முன்னால் வந்து நின்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,திரும்பவும் வணக்கம் சொல்லும்படி கூறினார்.மாணவ, மாணவிகள் முகத்தில் கலவரம்.அடுத்து என்ன நடக்கப் போகுது
என்ற பீதி.

மீண்டும்   ''குட் ஆவ்ரநூன், ரீச்சர்"என்று சொல்லி,ஆசிரியையும் பதிலுக்கு,"குட் ஆவ்ரநூன்,சிற்டவுன்"சொல்லி அமரும்போது    "டிச்" "டிச்" "டிச்"என்ற சத்தமும் தொடர்ந்து
வர,ஆசிரியை கடுப்பாகி எல்லோரையும் எழுப்பி நிறுத்தி,"யார் இந்த வேலைசெய்தது?
என்று அதட்ட ,மண்டபத்துக்குள் இருந்த,மூன்று வகுப்பும் அமைதியாகி,ஏதோ நடக்கக்
கூடாத ஒன்று நடப்பதற்கு,கட்டியம் கூறுவது போல் இருந்தது.அடுத்த இரண்டு வகுப்புகளும் எங்கள் வகுப்பையே புதினம் பார்க்கத் தொடைக்கியது, அமைதி என்றும் இல்லாதவாறு குடிகொண்டது.இந்தச் சூழ்நிலை ஆங்கில ஆசிரியரின்,ஆத்திரத்தை இன்னும் அதி கூட்டியது,

எனது நிலையோ திரிசங்கு சொர்க்கத்திற்குப் போனதுபோல்,இருந்தது,என்ன காரணமென்றால்,எனது நண்பனின் நம்பிக்கையான,துரோகக் குணம்தான்.எந்த நேரமும்
என்னை நோக்கி கையைக் காட்டுவான்,பாடசாலை விட்டுப் போகும்போது அவனது துவிச்சக்கர வண்டியில்தான் போகவும் வேண்டும்,இது எனது மனதில்,சிலோ மோசனில்
என்,மனதுற்குள்,அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தது,ஆங்கில ஆசிரியையின் கட்டளையும்,
கோபமான பார்வையும்,வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

நொடிகள்,வினாடிகளாகி,நிமிடங்கள் கரைந்ததுதான் மிச்சம்,ஆங்கில ஆசிரியையின்
கேள்விக்கு,பதில் கிடைக்காததால்,அவமானப் பட்டதாகவே,கருதினார்,பத்திர காளியின்
உருவத்திற்கு மாறுவது,அவரது கண்களில் தெரிந்தது,மீண்டும் அமைதியைக் கிழித்தது,
அவரது குரல்."இந்த,வேலையைச் செய்தவர் யாரென்று,கூறாவிட்டால்,இன்று இந்தவகுப்பில்,பாடம் நடத்தமாட்டேன்,செய்தவரைக் கண்டுபிடித்து,சரியான தண்டனை
வழங்க்கப்போறேன்"என்று கூறி முடிப்பதற்குள் "டிச்" "டிச்" "டிச்" தொடர்ந்தது.ஆசிரியை
பத்திர காளியாகவே மாறிவிட்டார்,

மானவ தலைவனை,அழைத்து பிரம்பு எடுத்து வரக்கட்டளையிட்டார்,நான் பயத்துடன்
எனது நண்பனை நோக்கினேன்,அவன் தன் கள்ளச் சிரிப்பால் என்னைக் கலவரப் படுத்தினான். நான் பயத்தின் உச்சியில் நின்றேன்,நண்பனோ கல்லுளி மங்கனாகக்  காட்சி
கொடுத்தான்.

பிரம்பு வந்தது,அத்துடன் ஆசிரியையும் ஒவ்வொருவராக சோதனையிடத் தொடங்கி
விட்டார்,காரியம் கெடப்போவதை உணர்ந்த நண்பன்,கண் இமைக்கும் நேரத்தில்,அதை எடுத்து,வலது புறம் இருந்த நண்பனின்,புத்தகத்தினுள் மறைத்தான்.நான் நினைத்தேன் ,
இத்தோடு பிரச்சனை முடிந்ததென்று,ஆனால்,அடுத்து அவன் செய்ததுதான் எல்லாவற்றையும்,விடப் பயங்கரமானது.

"ரீச்சர்,இந்தா,இதற்குள் இருக்கு ரீச்சர்" என்று கத்தவும்,ஆசிரியை பாய்ந்து வந்து,அவனை
வெளியில் இழுத்து அடிக்கத்தொடங்கினார்,தொடர்ந்து அதிபர் வரை இவ் விடயம் சென்று,அந்த அப்பாவி மாணவன் கடுமையாகத்  தண்டிக்கப் பட்டான்,நான் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று,நினைத்தேன்.ஆசுவாசப்பட்டேன், ஆனால் சகலதும் அறிந்த நபனோ! எங்களைப் பற்றியோ,நடந்த விடையங்கள் பற்றியோ அவன் மூச்சு விடவில்லை,இன்றும் அவனது
பெருந்தன்மையை, நண்பர்கள் ஒன்று சேரும்போது,சிலாகிப்பதுண்டு.

தற்பொழுது,அடிவாங்கிய  நண்பர் லண்டனில் இருக்கிறார்,அடுத்தவர் 1983 ஜூலைக் கலவரத்தில்
வெலிக் கடையில்,இடம் பெற்ற படு கொலையில் உயிரிழந்தார்.நான் இலங்கையில்
பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.   
  



பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும்,எதையாவது எழுதுங்கப்பா,



அன்புடன்!...


பெருமை சேர்க்கும் படங்கள்.

இந்தப் படங்களைச் சிறைப்பிடித்தவர் ஒரு ஜெர்மனியர்,அவர் இந்தப் படங்களை ஏன்?
எடுத்தார்,என்பதை அறிய இங்கு சென்று பார்த்துப் பெருமைப் படுங்கள்,









































என்னங்க எதுவுமே சொல்லாமல் போறிங்க?எதையாவது சொல்லிட்டுப் போங்க!





அன்புடன்!....

ஒழுக்க நியதிகளைத் துறப்பதால் குழப்பங்கள் அதிகரிக்கின்றன











அன்புடன்!........