உடுபிடவை,இவையெல்லாம் இலவசமாய் யான் இடுவேன்
தங்கத் தமிழகத்துத் தமிழ் மக்களே,நீங்கள்
எங்கள் குடும்பம் கோலோட்ச வாக்கிடுங்கள்.
வீதிக்கொரு டாஸ்மார்க்,விடிய விடிய டிவி.
வீக்கிக்கு ஒரு தமிழ்ப்படம்,இடை இடையே இசைவிழா
எடுத்ததற்கெல்லாம் தந்தி கடிதம்,
இதைவிட என்னவேண்டும் உனக்கு
படிக்கக் கவிதை,பாராட்ட என் படைப்புக்கள்,
திட்டித் தீர்க்க திகட்டாத தேன் தமிழ்
மட்டிட முடியாத மக்கள் சொத்து
காட்டிட முடியாது கணக்கு.
இலவச மின்சாரம் இடயிடையே கரண்ட் கட்.
இளைப்பாறவும்,இன்னல் வரும்போது பேசவும்
இலங்கைப் பிரச்சினையும் ஈழத் தமிழனும்,
இவை போதும் எனக்கு.