செவ்வாய், 27 டிசம்பர், 2016

இமயமலையில் நடக்கும்இந்துக்களுக்கான ஒரு இமாலய சாதனை-

இமயமலையில் நடக்கும் இந்துக்களுக்கான  ஒரு இமாலய சாதனை-
மோடி அரசு எத்தனையோ சாதனைகளை செய்து வருகிறது.அதை எல்லாம் விட இமயமலையில் தேவபூமியான
ரிஷி கேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடை ந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு பூகம்பங்களை யும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இரு வழிசா லைகள் தான் மிக முக்கியமானது.
இந்து மதத்திற்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு
இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இமயமலையில் காற்று ஒலித் துக் கொண்டிருக்கும் ஓம் என்கிற சத்தத்தை விட அங்கு செல்லும் மக்கள் ஒலிக்கும் ஹர ஹர மகாதேவா
என்கிற சத்தம்தான் காற்றின் ஒலியையும் கட்டுப்படுத் திக் கொண்டு இருக்கிறது.
இந்த ஹர ஹர மகாதேவா கோஷம் இமயமலையில் மட்டுமல்ல அது இந்தியா முழுவதும் இனி கேட்க வேண் டும் அதற்கு நிறைய பக்தர்களை வர வழைக்கவேண்டும்
என்று நினைத்த மோடி அரசு உத்தர காண்ட் மாநிலத்தி ல் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியா வின் கடைசி கிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் 900 கிலோமீட்டர் தூரத்திற்கு இருவழி சாலைகளை 12,௦௦௦ கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த
கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது இந்தசார் தாம் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் 5000 க்கும் மேற்ப்ப ட்டவர் கள் நிலச்சரிவில் சிக்கி இறந்துபோனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.
இதற்காக 13 பைபாஸ் ரோடுகளை மறு சீரமைத்து 2 சுரங்கப்பாதைகளை அமைத்து 25 பாலங்களை உருவா க்கி 3 மேம்பாலங்களை கட்டி 154 பஸ் நிறுத்தங்களை ஏற்ப டுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப்பா க்கி இமயமலைஎங்கும் 11,000 அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்மஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு.இதற்கான துவக்க விழா இன்று ஆரம்பிக்கிறது.7 பகுதிகளாக நடைபெறும் இந்த
வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிடும்.
.
இந்த பாரத நாட்டில் தான் எத்தனை மத நம்பிக்கைகள். எத்தனை யாத்திரைகள்.யார் தொடங்கி வைத்தார்கள்
எப்பொழுது தொடங்கி வைத்தார்கள் என்றே தெரியாமல்
இந்த மண்ணில் காலம்காலமாக இன்றும் மக்களை
இயக்கி வைத்துக்கொண்டு இருக்கும் இந்த நம்பிக்கை களை வழி நடத்தி செல்வதே ஒரு அரசாங்கத்தின் உண் மையான கடமையாகும்.
அந்த விதத்தில் மோடி அரசாங்கம் இந்துக்களின் எண்ண ங்களை செயலாக்கி கொண்டே வருகிறது. இந்துக்களின்
புண்ணியபூமி தனுஸ்கோடியில் புயலினால் அழிந்து 52 வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்தி ற்கு நான்கு வழி சாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.
இதெல்லாம் விட உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்ப டுத் தப் போகும் பேரிடரிலும் அழியாத இரு வழிச் சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது.கடும் பனி சூழ்ந்த மலைகளை
குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும்
பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே 10,000 அடி
உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய
இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய
வேலையா? சொல்லுங்கள்.
இந்த இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்
தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது.இந்த சோட்டா சார் தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத் தில் இமயமலை த் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோ த்ரி,கேதார் நாத், பத்ரிநாத் என்ற நான்குபுண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்ல து சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள்
.
இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும்.இந்த சார்தாம் யாத்திரை யில் இரண்டு உள்ளது.ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும்.இந்த யாத்திரையை ஓவ் வொரு இந்துவும்தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறை யா வது மேற்கொள்ள வேண்டும் என்று இந்துதர்மம் சொல்கிறது.இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும்.
இதே மாதிரி வட இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத் தில் இமயமலையில்ஒரு சார் தாம் யாத்திரை உண்டு இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும்.இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே ஈடுபட்டு ள்ளார்
இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோ த்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தி ல் உள்ளது. இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமா கவே உள்ளாள். . கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும்..யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத் திலிருந்து 3293 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து 3415 மீட் டர்உயரத்தில் அமைந்துள்ளது கங்கோத்ரி கோயில் தான் கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம் . இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள் ளது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.
அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அதோ ட பாரததேச மெங்கும் அமைந்துள்ள 12 ஜோதி ர்லிங்கங்க ளுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான்.கடல் மட்டத்தி லிருந்து 3553 மீட்டர் உயரத்தில் பனி மூடிய சிகரங்களுக்கு நடுவில், மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்து ள்ளது.இங்கு தான் ஆதிசங்கரர் முக்தி அடைந்த இடம் உள்ளது பரசு ராமர் வழி பட்ட தலம்.இது.
அடுத்து கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் நர நாராயண சிகரங்களுக்கி டையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையி ல் பத்ரிநாத் அமைந்துள்ளது. ஆழ்வார்களா ல் மங்களாசாச னம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்க ளுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளது.இங்கு தான் வியாசர் குகை விநா யகர் மகாபாரதம் வடி த்தது போன்ற இந்து தர்மத்தி ன் ஆதார சம்பவங்கள்அரங்கேறிய இடங்கள் உள்ளது.
இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்தி லிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள்..ஒரு
வருட யாத்திரியில் குறைந்தது 30 லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரை யை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்க மாக இருக்க முடியும்.இதை தான் மோடி அரசு செய்து வருகிறது..

ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் !

ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் !


2017ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்

2017ம் ஆண்டுக்கான  சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்

உங்களுக்குரிய பலன்களை இந்த லிங்கில் சென்று பாருங்கள்  
தனுசு ராசிக்குரிய பலன்கள் 

ராஜன் செல்லையா விடுதலைப்புலி அல்ல - இலங்கை பத்திரிகை நிறுவகம்


ராஜன் செல்லையா விடுதலைப்புலி அல்ல - இலங்கை பத்திரிகை நிறுவகம்

நோர்வேயை சேர்ந்த ராஜன் செல்லையா, அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரண்டு நாள் ஊடக அமர்வில் பங்கேற்றமை தொடர்பில் இலங்கை பத்திரிகை நிறுவகம் (Srilanka Press Institute) சார்பாக கருத்தை வெளியிட்டுள்ளது.
ராஜன் செல்லையா, விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரசாரகராக கருதப்பட்டு வந்தார். அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் அவர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் ராஜன் செல்லையா ஊடகவியலாளர் என்ற வகையில் நோர்வே அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட நான்குபேர் கொண்டு ஊடகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
அவர், ஒஸ்லோவில் உள்ள அரச ஒலிபரப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்தநிலையில் அவரை புலியாக காட்டுவது நியாயமற்ற செயல் என்று இலங்கை பத்திரிகை நிறுவகத்தின் சுகுமார் ரொக்வூட் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவின் நிபுணர்களும் இந்த ஊடக அமர்வில் பங்கேற்றனர். ராஜன் என்று அழைக்கப்படும் ராஜகுலசிங்கம் செல்லையா, பிரான்ஸில் இருந்து செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி அலைவரிசையுடன் தொடர்புப்பட்டிருந்ததாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் அடிப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளது..! சீ.வி.விக்னேஸ்வரன்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பல குடும்பங்களின் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு சிறிய ரக மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,
பொதுவாகவே மீன்பிடித்தொழில், இறால் கூடு கட்டுதல், நண்டுக் கூடு கட்டுதல் போன்ற தொழில்கள் ஆண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காணச் செய்து பல குடும்பங்கள் குடும்ப தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் பெண்கள் தமது குடும்பத்திற்குத் தலைமை தாங்கி வாழ்வாதார தேடல்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக வலிந்து ஈடுபட வேண்டி வந்துள்ளது.
பெண்கள் பொதுவாகவே மென்மையானவர்கள். அவர்களின் உடல்வாகும் மென்மையான தொழில்களுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பையே கொண்டது.
இவ்வாறான பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோட்ட வேலைகளுக்குச் செல்கிறார்கள், மண்வெட்டி வேலைகள் செய்கின்றார்கள்.
மீன்பிடிக்கக்கூடச் செல்கின்றார்கள். உடல் வெயிலில் வாடி, மழையில் நனைந்து, பனியில் கூதல் எடுத்து எல்லாத் தட்ப வெப்பங்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய தொழில்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இங்கு அவர்கள் செய்கின்ற தொழில்களை சற்று இலகுவாக்கும் நோக்கிலேயே இந்தச் சிறியரக மிதவைகளை காரைநகர், ஊரிக்காடு மற்றும் அராலித்துறைப் பகுதிகளில் இறால்ப் பிடிப்புத் தொழிலில் ஈடுபடும் விதத்தில் ஒவ்வொன்றும் சுமார் ரூபா 107,500.00 மற்றும் ரூபா 74,025.00 பெறுமதிகளில் வள்ளங்களைக் கொள்வனவு செய்து இன்று வழங்குகின்றோம்.
இப்பயனாளிகள் தெரிவு மகளிர் விவகார அமைச்சு மற்றும் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் சிபார்சின் பெயரில் காரைநகர் பிரதேசசபை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஆராயப்பட்டு அவர்களின் தேவைப்பாடு மற்றும் உண்மைத்தன்மை, குடும்ப நிலவரம் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டே இன்று இந்த உபகரணக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்றது.
தரும் உபகரணங்களை பயனாளிகள் உரியவாறு பாதுகாத்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று வழங்கப்படுகின்ற இந்த சிறியரக வள்ளங்கள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 22 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டில் உலை ஏறுவதற்கு உதவுகின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.
இவ்வள்ளங்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் அவற்றின் உதவியுடன் தங்கள் தங்கள் குடும்ப வருமானங்களைப் பெருக்குவதற்கு முயற்சி செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் - சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் - சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்



தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
26 வருடங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க இலங்கை இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள், அமெரிக்காவின் வெளிநாடுகள் தொடர்பான கொள்கையற்ற செயற்பாடுகள் காரணமாக வீணாகி போனதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க அமெரிக்க எடுத்த முயற்சி காரணமாக இலங்கை பாரதூரமான பிரச்சினை எதிர்நோக்கிய விதம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர் விபரமாக விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புலிகள் போரில் தோற்காது போயிருந்தால், புலம்பெயர் தமிழர்களை சர்வதேச ராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு தேவையான வகையில் மாற்றியதாக புத்தக ஆசிரியர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த புத்தகம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது. மேலும், விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் வைத்து கொண்டு அவர்களை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக பயன்படுத்த அமெரிக்கா இறுதி வரை முயற்சித்தது எனவும்,
புலம்பெயர் தமிழர்களுக்கு உயிரூட்டியதாக விமர்சித்துள்ள நூல் ஆசிரியர் , அமெரிக்கா எப்போதும் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க புலிகளின் பெயரில் சர்வதேச இராஜதந்திர அமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்க அமெரிக்க முயற்சித்தது.
நந்திக்கடல் களப்பில் சிக்கியிருந்த பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்களை காப்பற்றி அவர்களை இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லும் திட்டமும் அமெரிக்காவிடம் இருந்தது. இதற்கான அவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பையும் பயன்படுத்தினர்.
இந்த புத்தகத்தை எழுத அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தனக்கு நெருக்கமான சிலரும் அக்கறை காட்டியதாக கூறியுள்ள நூல் ஆசிரியர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடப்பவற்றையும் விமர்சித்துள்ளார்.
போருக்கு பின்னர் இலங்கையின் பயணத்தில் முன்னோடிகளாக புலம்பெயர் தமிழர்களுக்காக அவர்கள் விரும்பியபடி ஈழத்தை உருவாக்கி கொடுக்க அமெரிக்கா முயற்சித்தது.
இலங்கை இராணுவம் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்ததால், புலம்பெயர் புலிகளை சர்வதேச இராஜதந்திர சக்தியாக மாற்ற அமெரிக்கா தனது வெளிநாட்டு கொள்கையை அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியது.
மேற்குல நாட்டு அரசாங்கங்களில் உதவியுடன் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைத்து நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் சக்தியாக உருவாக்கும் ஆரம்ப முயற்சித்து தோற்று போனது.
புலிகள் தோல்வியடைந்தன் காரணமாக 26 வருடங்களாக நாட்டை காப்பற்ற செயற்பாடுகளை முன்னெடுத்த இராணுவ தலைவர்களையும் நாட்டு மக்களும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என முத்திரை குத்த அமெரிக்கா முயற்சித்ததாகவும் நூல் ஆசிரியர் கூறியுள்ளார்.
இதற்காக அமெரிக்கா சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் பெயரில் செயற்பட்டு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளை ஆக்கிரமிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை போல், இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்களை துரும்புச் சீட்டாக பயன்படுத்திக்கொண்டதாகவும் தயா கமகே தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தை இலங்கையில் உள்ள விஜித யாப்பா அச்சகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பரவலாக்கலை மக்களிடம் தவறாக உருவகப்படுத்தும் பிரசாரங்கள்!

அதிகாரப் பரவலாக்கலை மக்களிடம் தவறாக உருவகப்படுத்தும் பிரசாரங்கள்!


அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை மெதுவாக நகர்ந்தாலும் நிதானமாகவே நடைபெறுகிறது. இயற்கையாக, வினை என்ற ஒன்றிருந்தால் அதற்கு எதிர்வினையும் இருக்கத்தான் வேண்டும்.
அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையும் இந்த விதிக்கு தப்பாதது ஆச்சரியமில்லைதான். வினை நிதானமாகவும், உத்வேகம் குறைந்ததாக இருந்தாலும் எதிர்வினையோ ஆத்திரமூட்டுவதாகவும், உணர்ச்சிமயமாகவுமே காணப்படுகிறது.
இந்த எதிர்வினை பிரசாரத்தை முன்னின்று நடத்துவது வேறு யாருமல்ல. கூட்டு எதிர்க்கட்சி என தம்மைக் கூறிக் கொள்ளும் மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் அணிதான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பின்னாலிருந்து இயக்க, அரசியலில் அவரை அண்டிப் பிழைக்கும் ஒரு சிறு குழு தனது தாராளமான பொய்கள், ஏமாற்று வித்தைகள், அச்சுறுத்தல்கள் மூலம் சொந்த நலன்களை அடையும் நோக்கத்தில் மக்களை ஏமாற்றும் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கிறது.
அதேநேரம், கடந்த அரசாங்கத்தின் கடைசிக் காலப் பகுதியில் காளான்களாக முளைத்த ஒருசில குழுக்களும் மஹிந்த அணிக்கு உறுதுணையாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மறுபக்கம், இவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்களை ஊதிப் பெருப்பிப்பதில் பரபரப்பு மிக்க செய்திச் சந்தையில் சர்ச்சைக்குரிய சம்பவங்களை நம்பி வாழும் ஊடகங்களும் கைகொடுக்கின்றன.
தனது பிரசாரப் போரில் மஹிந்த அணி சரித்திரத்தையும் விட்டு வைக்கவில்லை. சமகால சரி்த்திரத்தின் கற்றுக்கொண்ட பாடங்களும் கிடைத்த அனுபவங்களும் அலட்சியப்படுத்தப்படும் அதேவேளை தமது இனவாத, மதவாத பிரசாரத்துக்கு பழைய சரி்த்திரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
21ம் நூற்றாண்டு சமூகத்துக்குத் தெரியாத இராவணன் போன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் அவ்வப்போது அந்த அணி நிரூபிக்கத் தவறவில்லை.
அவர்கள் கேட்கிறார்கள் அரசியல் சாசனத்தில் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்? என்ன அவசரம்? பெரும்பான்மை இனம் ஆரம்பத்திலிருந்தே அரசியல் சாசனத்தை எதிர்த்தே வந்தது.
இப்போது அதை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே மாற்ற வேண்டும் என்கிறது. பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஒரு எதேச்சாதிகார நடவடிக்கையாகும்.
சரி, மஹிந்த அணிக்கும், அவர்களுடைய துணைக்குழுக்களுக்கும் கவலையளிக்கக்கூடிய நான்கு முக்கிய விடயங்கள் தற்பேதைய அரசியல் சாசன சீர்திருத்த செயல்முறையில் இருக்கின்றன.
அரசின் தன்மை, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை, அதிகாரப் பரவலாக்கம், மனித உரிமைகள் என்ற அந்த நான்கு அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் முக்கிய விவாதப் பொருளாக தற்போது பேசப்பட்டு வரும் நிறைவேற்று முறைமையைப் பற்றி முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன கூறியது நினைவுக்கு வருகிறது.
ஆணைப் பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதைத் தவிர நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் எதையும் செய்ய முடியும் என அவர் அப்போது கூறியிருந்தார்.
மஹிந்த ரஜபக்ச உட்பட்ட 1994ம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகளுமே அதை நீக்குவதாக வாக்குறுதி அளித்த போதிலும் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை.
18வது திருத்த சட்டத்தின் மூலம் அந்தப் பதவியில் இரண்டு தடவைக்கு மேல் நீடிக்கவே வழி செய்யப்பட்டது.அரசின் தன்மை அல்லது அரசமைப்பு முறைமை என்ற விடயத்தில் பல்வேறு கட்சிகளும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருக்கின்றன.
கூட்டாட்சி தெற்கின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் அதேநேரம் ஒரே நாடு என்ற கருத்தியல் அடக்கி ஆளும் தன்மையைக் கொண்டிருப்பதாக வடக்கிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இவை சமகால அனுபவங்களின் அடிப்படையில் கூறப்படும் கருத்தே தவிர வேறொன்றுமில்லை.
தற்போது பல நாடுகளின் அரசமைப்பை எடுத்துக் கொண்டால் அது கூட்டாட்சியையும், ஒற்றையாட்சியையும் கொண்டதாகவே பல அம்சங்களில் கணப்படுகிறது.
பிரித்தானியாவில் ஒற்றையாட்சி அரசமைப்பு இருந்தாலும் ஸ்கொட்லாந்திலும், வட அயர்லாந்திலும் கூட்டாட்சி முறைமையே உள்ளது.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் கூட்டாட்சி அரசியலமைப்பு முறைமையாக இருந்தாலும் மாகாண சபைகள், சட்ட மன்றங்களைக் கலைக்க மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பொறுத்த மட்டில் ஒள்றையாட்சியின் அம்சங்கள் அதில் கலந்திருப்பதைக் காணலாம்.
இலங்கையின் விடயத்தில் கூட்டாட்சி ஒற்றையாட்சி எனப் பெயரிடுவதை விடுத்து அரசமைப்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதில் அனைத்து சமூகங்களின் கருத்தொற்றுமையைப் பெற்றுக் கொள்வதுதான் மிக நன்றாக இருக்கும்.
அடுத்த மிக முக்கியமான அம்சம் அதிகாரப்பரவலாக்கமாகும். அது அரசமைப்பை மலிவானதாக்கி இலகுவாக எட்டக்கூடிய தூரத்துக்கு அண்மித்ததாக மக்களைக் கொண்டுவரும் ஒரு ஜனநாயக நடவடிக்கை எனக் கூறலாம்.
மேலும், 30 வருட யுத்தத்தின் பின்னர் அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யவும் அதிகாரப் பரவலாக்கல் உதவக்கூடும்.
இது தொடர்பான பல்வேறு யோசனைகள் பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு சமூகத்தின் தீர்வை இன்னொன்றில் திணிக்கக்கூடாது.
அதிகாரப் பரவலாக்கம் உதட்டளவிலேயே பேசப்படுகின்றது. செயலில், பெரும்பான்மையினத்தை விழுங்கும் பாம்பாகவும், நாட்டைப் பிரிக்கும் ஒரு செயல்முறையாகவுமே அதற்கு விளக்கம் கொடுக்கப்படுகின்றது.
அதிகாரப் பரவலாக்கம் என்பது மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதாக இருக்க வேண்டும்.
இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கான பரஸ்பர அதிகாரங்கள் கொண்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பற்றி பேசப்படுகின்றது.
இதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அது சாத்தியமானதா என ஆய்வு செய்வது பிரயோசனமாக இருக்கும்.
கடைசியாக மனித உரிமைகள், விவகாரம் முன்பு போல ஆட்கடத்தல்கள், சட்டத்தை மீறுகின்ற கொலைகள், தண்டனைக்கு தப்பும் வசதி, இன, மத பாகுபாடுகள் என்பன இடம்பெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால ஏற்பாடுகள் என்பன நீக்கப்படுவதும் முக்கியம்.
ஜயதிலக டி சில்வா

நான் 3 முறை இறந்து விட்டேன்' தூக்கி வீசிவிட்டார்கள் என்னை! - மாவை உருக்கம்.

நான் 3 முறை இறந்து விட்டேன்' தூக்கி வீசிவிட்டார்கள் என்னை! - மாவை உருக்கம்.




ஜோசப் பரராஜசிங்கத்தின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி. ஜோன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், எங்களோடு கூடவே இருந்து வழிகாட்டியாகவும் தலைவனாகவும், போராளியாகவும் நண்பனாகவும்
இருந்த ஜோசப் பரராஜசிங்கம், பிரார்த்தனை ஒப்புக் கொடுக்கின்ற புனிதமான தினத்திலே நேரத்திலேயே கொல்லப்பட்டார்.
அவருக்கு அஞ்சலி செலுத்த இதுவே இது உகந்த நாள். புத்தாண்டு வாழ்த்துக்களையும் இந்த நாளிலே எஞ்சியிருக்கும் நம்மவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
அழிக்கப்பட்ட தினத்திலும் மக்கள் பீனிக்ஸ் பறவைகள் போல எழுந்து நிற்கிறார்கள். என்ன இலட்சியத்துக்காக இலட்சக் கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டனவோ அந்த ஆத்மாக்களுடைய பலம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.
எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அதற்காக நாங்கள் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் நானும் 3 முறை இறந்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டவன்தான்.
அண்மையிலே நாரந்தன்னை வழக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் இறந்து விட்டோம் என்றுதான் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்தார்கள்.
நாலாம் மாடியிலே நான் மூர்ச்சித்து வீழ்ந்த பொழுது மரணித்து விட்டேன் என்று கூறிவிட்டார்கள்.
மூன்றாவதாக ஆனையிறவு இராணுவ முகாமிலும் நான் மரணித்து விட்டேன் என்று தூக்கி வீசப்பட்டேன். இவை சிறிய சம்பவங்கள்தான்.
எங்களுடைய மக்கள் தங்களுடைய உயிர்களைப் பலி கொடுத்து இத்தனை ஆண்டுகளாக இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த சூழலோடு ஒப்பிடுகின்ற பொழுது என்னுடைய உயிர் மீண்டும் தப்பியிருக்கக் கூடியது பெரிய அர்ப்பணம் என்று கூற வரவில்லை.
தமிழர் தாயகத்தின் அழகான மண்ணிலே நாம் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு எதிராக தந்தை செல்வாவோடு, அமிர்தலிங்கம் அவர்களோடு,
தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தன்னை இளவயதிலிருந்து இணைத்துக் கொண்டு போராட்டங்களிலும் மகாநாடுகளிலும் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுப்பதிலெல்லாம் பங்குபற்றி வந்தவர்தான் ஜோசப் பரராஜசிங்கம்.
எங்களோடு உழைத்த பலர் இப்பொழுது எம்மிடையே இல்லை. இலட்சியத்துக்காக இனத்தின் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக எமது இளைஞர் சமுதாயம் இந்த மண்ணிலே இருந்து வந்திருக்கின்றது.
ஜோசப் பரராஜசிங்கம் மனித உரிமைகளுக்காக இராணுவ, அரச படுகொலைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுத்தார். பல நாடுகளுக்குச் சென்று பல தூதர்களிடம் குரல் கொடுத்திருக்கின்றார். கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தில் ஒன்று பட்டுழைத்தவர். கட்சியின் பண்பைக் கட்டிக் காத்தவர்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் நம்முடைய இனத்தின் விடுதலைக்காக உழைத்தவர்.
குற்றவாளிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரின் வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்டிருக்கின்றது.
தனித்தனியாக, கூட்டமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது நாங்கள் திருப்தி கொள்ளவில்லை. அதனால் இன்னமும் நாங்கள் கவலையடைந்திருக்கின்றோம்.
பழைய தீர்ப்புக்கள் இலங்கையின் நீதித்துறையை கேள்விக் குள்ளாக்கியிருக்கின்றது. இரத்தத்தில் இந்த மக்களின் உணர்வு இன்னமும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கின்றது என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சா.வியாளேந்திரன், கே.கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், பி.இந்திரகுமார், மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, த.கலையரசன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் யோசப் பரராசசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.
கடந்த 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்களினால் யோசப் பரராசசிங்கம் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.