ஞாயிறு, 20 மார்ச், 2011

சிந்திய தமிழ்.இதுதான்  நீதி.

போராடியவன்,
சிறையில்,
கைதியாக.

போராடச் 
சொன்னவர்கள்,
அரச சபையில்,
அதிதிகளாக.

பார்த்திருந்தவர்களோ,
பாவம்,
அகதிகளாக,
தாய் நாட்டில்.


கருணாநிதி
பெயரிலும் நிதி  
படைப்பதும் நிதி 
இலங்கைத் தமிழருக்கு 
மட்டும் செய்வது,
இவர் அநீதி.
கஷ்டம் வரும் போதெல்லாம்,
கைகொடுப்பது,
இலங்கைத் தமிழன்.
ஜெயலலிதா 
ஜெயம் இவர் சொந்தம்,
மூன்று மூளைக்குச் 
சொந்தக்காரர்.
மூன்றும் சேர்ந்து 
வேலை செய்வதால்,
வெற்றியில் கிடைப்பது,
தோல்வியில் மறைந்து விடும்.
அன்பை பகையாக்கும்,
அளவிடமுடியச் சக்திக்குச்
 சொந்தக்காரர்.


மகிந்த ராஜ பக்ச 
சிங்கள  மக்களின்
ரட்சகன்.
சிக்கிய மக்களுக்கு 
ராட்சசன்.
மேல் நாட்டின் 
வேண்டா விருந்தாளி.
ஆசியாவின் 
அமைதிப் 
பூங்கா. 
சொன்னதையும் செய்வார்,
சொல்லாததையும் செய்வார்.
தமிழ் மக்களின்,
கண்ணீர் இவர்
சொத்து.

காதல் பரிசு.
உன் பிறந்த நாளுக்கு,
அன்று, நான் தந்த பரிசு,
வாங்கும்போது,
சொன்னாய்,
"என் உயிரிலும் மேலாய்,
இதை நான் மதிப்பேன்."

திருமண நாள் உனக்கு,
இன்று,
தெருவிலே கிடந்தது,
நான் தந்த,
பரிசு மட்டுமா,
நானுந்தான். 
தமிழன் 

இந்தியாதான் இவனுக்கு,
எல்லாம்.
இந்த இனத்துக்கு,
எமனே,
இந்தியாதான்.

வெட்கம் 
உலகை வென்று,
ஒரு குடையில்,
ஆண்டு.
இன்று,
ஆள்பவருக்கு,
ஒரு குடை,
பிடிப்பது.

அமைதி 
இலங்கையில் அமைதி 
இருப்பவர்கள் எல்லோரும் 
சமாதியானால்தான்
வரும்,
 அமைதி.


குறை?
ஆண்ட  பரம்பரை,
மீண்டும் ஒரு முறை,
ஆளநினைப்பதில்,
என்ன குறை?

ஆண்டபரம்பரையில்,
வந்தவர்கள்,
குறுக்கே நிற்பதுதான்,
பிரச்சினை.