வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தமிழ் கடல் திரு நெல்லைக் கண்ணன் ஐயா அவர்களின் பேச்சு

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தமிழ் கடல் திரு நெல்லைக் கண்ணன் ஐயா அவர்களின் பேச்சு கேட்டுப் பாருங்கள்

திங்கள், 26 செப்டம்பர், 2016

பயனில்லாத ஏழு?ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
 தரித்திரம் அறியாய் பெண்டீர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீரா  தீர்த்தம்
பயனில்லை ஏழும்தானே   

விவேகசிந்தாமணி 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கண்ணீர் விட்ட ஒரு திரைப் படம் கர்ணன்
கண்ணீர் விட்ட ஒரு திரைப் படம் கர்ணன் நான் மாணவனாக இருந்தபோது
எதுவும் அறியாத வயது என்றாலும்,எதோ ஒன்று பாடசாலை மாணவர்கள் அனைவரையும் அன்று அழ வைத்த திரைப் படம்.இன்னும் என் நெஞ்சில் நிறைந்துள்ளதுநீங்களும் பாருங்கள் பழைய நினைவுகள் என்றும் பசுமையானது.

இலங்கையில் மனிதஉரிமைகள்

1.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

பாராளுமன்றத்தினால் 1996ம் ஆண்டின் 21ம் இலக்க மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1996ம் ஆண்டில் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

2.இலங்கையில் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவை நிறுவுவதன் நோக்கம் யாது?

பரிஸ்கோட்பாடுகளின் அடிப்படையில் தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இது தாபிக்கப்பட்டது.

3.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “மனிதஉரிமைகள்” என்பது எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது?

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயம் ஆகியவற்றின கீழ் முன்மொழியப்பட்ட உரிமைகளே இவையாகும்.்

4.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் “அடிப்படை உரிமைகள்” என்றால் என்ன?

அடிப்படை மனிதஉரிமைகள் எனப்படுபவை, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட சட்டங்கள் ஆகும்.

5.இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான செயற்பாடுகள் யாவை?

• அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளும் புலனாய்வும்
• இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைஉரிமைகளுடன் அரசின் நடைமுறைகள் ஒத்திசைந்து செல்வதை உறுதிப்படுத்தல்
• அடிப்படை உரிமைகளுடன் இணங்கிப் போகக்கூடியவாறு சட்டவாக்கங்கள், நிர்வாக நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல்
• இலங்கையின் சர்வதேச மனிதஉரிமைகள் கடப்பாட்டிற்கு உட்பட்டதாக தேசிய சட்டங்களையும் நிர்வாக நெறிமுறைகளையும் உருவாக்குவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு சிபாரிசு வழங்கல்
• சர்வதே மனித உரிமை உடன்படிக்கைகளையும் ஏனைய சர்வதேச கருவிகளையும் ஏற்று அங்கீகரிப்பது என்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கல்
• நாட்டில் மனிதஉரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல்

6.ஆணைக்குழுவுக்கு ஒருவர் எத்தகைய முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்?

அரசியலமைப்புச் சட்டத்தின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அல்லது அவை மீறப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தால் முறைப்பாடு தெரிவிக்கலாம்.

7.ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டைத் தெரிவிக்கக்கூடிய நபர்கள் யார்?

• பாதிக்கப்பட்ட நபர்
• குழுவினர்
• பாதிக்கப்பட்ட நபரை அல்லது குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் நபர் அல்லது குழுவினர்

எந்த மொழியிலும் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாமா?

சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் முறைப்பாட்டைத் தெரிவிக்கலாம்.

8.சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்காவிட்டாலும் அது தொடர்பாக ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா?

ஆம், தன்னுடைய சொந்தப் பிரேரணையின் அடிப்படையில் ஆனைக்குழு அடிப்படை மனிதஉரிமை மீறல் தொடர்பான சம்பவங்களை விசாரணை செய்யலாம்.

9.உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆற்றுப்படுத்த முடியுமா?

ஆம், சிலவேளைகளில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும்.

10.முறைப்பாடு ஒன்றில் எத்தகைய தகவல்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும்?

• எத்தகைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• யாருடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• மீறலுக்குக் காரணமானவர்கள்
• எந்தவிதமாக உரிமைகள் மீறப்பட்டுள்ளன?
• எப்பொழுது, எவ்விடத்தில் மீறல்கள் இடம்பெற்றுள்ளன?
• எத்தகைய பரிகாரங்களை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

11.விசாரணைகள் இடம்பெறும்பொழுது சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டாயமானதா?

இல்லை. சட்டப் பிரதிநிதிகளைக் கூட்டி வருவது கட்டயமல்ல

12.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் ஆணைக்குள் உள்ளடங்காத முறைப்பாடுகளின் நிலை என்ன?

அரசாங்கத்தினால் தாபிக்கப்பட்ட உரிய பரிகார நிறுவனங்களுக்கு இந்த முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்படும்.

13.காலம் கடந்த மிகவும் பழைய அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளமுடியுமா?

தகுந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டே காலம் கடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

14மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் சேவைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமா?

ஆம், அனைத்து சேவைகளையும் ஆணைக்குழு இலவசமாகவே வழங்குகின்றது.

வியாழன், 15 செப்டம்பர், 2016

நண்பனையும் நேசி!

நண்பனையும் நேசி!-உன்
பகைவனையும் நேசி!
நண்பன் உன் வெற்றிக்குத் 
துணையிருப்பான்.
பகைவன் உன் வெற்றிக்கு 
காரணியாக இருப்பான்! இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சை-2016  முடிவுகள் 

முடிவுகளைப்  பார்க்க மேலே உள்ள லிங்கை  அழுத்தவும்

புதன், 14 செப்டம்பர், 2016

மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் வல்லரசு நாடுகளை பின்தள்ளிய இலங்கை!

மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் வல்லரசு நாடுகளை பின்தள்ளிய இலங்கை!உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் எவை என்ற பட்டியலை Happy Planet Index வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப்பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.
ஆனால் இலங்கை 28வது இடத்தில் இருக்கிறது. முதல் 30 இடங்களிலுள்ள நாடுகளின் பட்டியல் வருமாறு,
1 Costa Rica11 Jamaica21 Peru
2 Mexico12 Norway22 Palestine
3 Colombia13 Albania23 Brazil
4 Vanuatu14 Uruguay24 Switzerland
5 Vietnam15 Spain25 Tajikistan
6 Panama16 Indonesia26 Guatemala
7 Nicaragua17 El Salvador27 Belize
8 Bangladesh18 Netherlands28 Sri Lanka
9 Thailand19 Argentina29 Venezuela
10 Ecuador20 Philippines     

World Report 2015: இலங்கை Events of 2014

 World Report 2015: இலங்கை Events of 2014

World Report 2015: இலங்கை

Events of 2014கல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய அறிக்கை -2015.

திங்கள், 12 செப்டம்பர், 2016

இலங்கை வங்கி முகாமைத்துவப்  பயிலுனர் 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மாரியப்பன் தங்கவேலு!

குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காது!.-குளச் 
சேற்றில் முளைத்த செந்தாமரை நீ யடா!
உன்னையும் விடவில்லையே தமிழன் பெற்ற சாபம் - உன்
அம்மாவின்  ஆசி! அந்தம் வரைக் காப்பாற்றும் !

குடத்திலிட்ட  விளக்காய் ஒளிந்திருந்தாய் -ஆனால் !
குவலயம் அதிரவெல்லோ தீக் கற்றையாய் ஒளிர்ந்தாய் 
காலின்றியும் பாரதப் பெருமை காப்பேனேயென்று  -ஒரு 
காலூன்றி உயரப்  பாய்ந்து தமிழ் பெருமை சேர்த்தாய் 

சூரியனை ஒருநாள் ஒளித்து விட்டாயுன் புகழால் -யேதும் 
புரியாதவனையும் சேர்த்து அணைத்து விட்டாயெழிதால் 
மாரியப்பன் தங்கவேலு மறக்குமோ தங்கத் தமிழனை -யுனை 
வாரியனைத்திடும் தமிழுலகமே!வந்திடு தமிழகமே.!வியாழன், 8 செப்டம்பர், 2016

பஸ் டிக்கட் !!

பஸ் டிக்கட்!! 

ஒரு பஸ் டிக்கட்டின் பின்புறம் எழுதப் பட்டிருந்த வாசகங்கள்.

கல்லூரி மாணவியின் பார்வையில் இளைஞர்கள்

அதிகமாகப் பேசினால் -அறுவை 
சிரித்துச் சிரித்துப் பேசினால்-ஜொள்ளு 
பேசாமல் இருந்தால் -ஜடம் 
அளவாகப் பேசினால் -ரோபோட்
 தமிழில் பேசனால் -ஞானப் பழம்
ஆங்கிலத்தில் பேசினால்-பீட்டர் 
படித்துக் கொண்டு இருந்தால் -கிறுக்கு 
படிக்காமல் இருந்தால்-மக்கு 
சண்டைபோட்டால் -ரௌடி 
சண்டை போடாவிட்டால்  பயந்தாங்க்கொள்ளி 
அக்கா என்று கூப்பிட்டால். -சின்ன பையன் 
தங்கச்சசி என்று கூப்பிட்டால்-பாச மலர் 
 
டிகட்டுக் குரியவர் எழுத்தாளர் ராஜேஷ் குமார். 

நான் சொல்லவில்லை !

நான் சொல்லவில்லை !
வரிக்கவிதைகள் 

எழுத்தாளர் ராஜேஷ் குமார்.

1." எல்லோருக்கும் உதவி செய்து ஏமாந்து விடாதே!
எல்லோரிடமும் உதவியைப் பெற்று ஏமாற்றி விடாதே !!

2."நமது வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் இல்லையென்றால்,இனிப்பான வாழ்க்கையை உணர முடியாது"

3."எதற்கும்,
 துணிவு இல்லாதவன்.
எதையும்,
எதிர்பார்க்கக் கூடாது."

4".காதலும் சிகரெட்டும் ஒண்ணுதான்,இரண்டுமே உதட்டோடு உறவாடி இருதயத்தைப் புண்ணாக்கிவிடும்."

5."உன்னால் முடியாது என்று என்னி நீ கைவிட்ட ஒரு விசயத்தை,இந்த உலகத்தின் ஏதாவது ஒ ரு நாட்டின் ஒரு மூலையில் இருக்கும்  யாராவது  ஒருவன் ஏற்கனவே செய்து  முடித்திருப்பான்."
இந்த உலகில் எதுவுமே சுலபமில்லை -ஆனால் எல்லாமே சாத்தியந்தான்.

6."பூமிக்கு அடியில் இடம் பிடிக்க பூமிக்கு மேல்
 நடக்கும் போராட்டம்தான்
-வாழ்க்கை"

7"காதல் என்பது பபிள்கம் மாதிரி!
ஆரம்பத்தில்  டேஸ்ட் அப்புறம் வேஸ்ட்
 கடைசியில் துப்பவேண்டியதுதான்."

8."நதிபோல
நகர்ந்து கொண்டே இரு!
ஒரு நாள் கடல்போல்
பெறுவாய் பலன்.
நகர்ந்தால் கடற்கரை,
நின்றால் சாக்கடை."

9."நம் நாட்டில் நல்ல அரசியல் வாதிகளும்,தலைவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள்,கடற்கரையோரங்களிலும்
முற் சந்திகளிலும் சிலைகளாக நிற்கிறார்கள்."

10"பணத்தால் வாங்கமுடியாத,
தகுதி
உன்னிடம் வரும்போதுதான்
உண்மையிலேயே
நீ,
மதிப்பு மிக்க மனிதன்."

11,"அனுபவம் ஒரு மனிதனுக்கு
எப்படிக் கிடைக்கிறது என்பது
முக்கியமில்லை.
அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான்
என்பதே முக்கியம்."

12."பலர்
செய்வதைச் சொல்வதில்லை,
சிலர்
சொல்வதைச் செய்வதில்லை.
இந்த இரண்டும்,
இல்லாதவர்கள்
இந்த உலகிலேயே
யாருமில்லை."

13."சிறிய தவறுகள் மன்னிக்கப் படாத போது,
அவைகள்,
பெரிய தவறுகளாக  மாறி,
விஸ்வரூபம் எடுப்பதைத்
தவிர்க்க முடியாது.

14."நாம் தேடும் விஷயங்கள்
தேடும்போது கிடைப்பதில்லை.
அது கிடைக்கும்போது
நமது தேடல்
அதுவாக இருப்பது இல்லை"