சனி, 22 அக்டோபர், 2022

எனது பிள்ளைகள்!



ஒளிப்படத்தில் ஒளிந்திருக்கும் ஆயிரம் கதைகள்

அளியவில்லை மனதை விட்டு அத்தனையும் சதிகள்- பழி

முடித்து பட்டம் பெற்றவர்கள்,வாழ்வார்களா பார்ப்போம்,

இடித்துரைப்பேன் இவர்கள் வாழ்க்கை இனி.


 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

பதினாறு பேறு.


பெரும் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் பதினாறு பெரும் பேறுகளாவன:
  1. அன்பான துணை
  2. கபடற்ற நட்பு
  3. கலையாத கல்வி
  4. குறையாத வயது
  5. குன்றாத வளமை
  6. கோணாத செயல்
  7. சலியாத மனம்
  8. பரவசமான பக்தி
  9. பிணியற்ற உடல்
  10. போகாத இளமை
  11. மாறாத வார்த்தை
  12. தடையற்ற கொடை
  13. தவறாத சந்தானம்
  14. தாழாத கீர்த்தி
  15. துன்பமில்லா வாழ்வு
  16. தொலையாத நிதி 


நன்றி விக்கிபீடியா.

சனி, 15 அக்டோபர், 2022

குலத்தளவே ஆகும் குணம்..!




நீரளவே யாகுமாம் நீராம்பல்,தான் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு--மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் த

குலத்தளவே ஆகும் குணம்.           ,                      (நல்வழி)


ஒரு குளத்திலுள்ள தண்ணிரின் மேல்மட்டம்,அது வரைதான்  நீராம்பல் வளரும். 

ஒருவனது கல்வி, பாடசாலைக் கல்வி(அறிவு,அடுத்தவர்களை மதிக்கும் பண்பு. தர்மம்,விவேகம்).

அவன் படித்த புத்தகங்கள் அளவேயாகுமாம். ஒவ்வொருவரும் அனுபவிக்கும்,

செல்வம் அவரவர் தவத்தின் அளவேயாகும். தான் பிறந்த குலத்தளவே யாகுமாம்,

குணம்.