வியாழன், 3 அக்டோபர், 2019

வியாதி நீங்காத பலன்.

வியாதி நீங்காத பலன் 




எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு,திடீரென  சுகயீனம் ஏற்பட்டதாக அறிந்து,அருகிலிருக்கும் அவர்களது வீட்டிற்கு சென்றோம், அங்கு சென்றபோது, கொஞ்சம் வயதானவர்கள்தான் ,   சுகயீனப் பட்டவரின் மனைவி  ஆசுவாசமாக பஞ்சாங்கத்தைப்
புரட்டிக் கொண்டிருந்தார். போன நாங்கள்தான் என்னையும் சேர்த்து  செம டென்ஷனில் இருந்தோம். ஒரு வழியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு .ஆறுதலாக அவர் மனைவியிடம்  வினவியதில்  கிடைத்த செய்திதான்  இன்றைய பதிவு.

ஆயில்முப் பூரஞ் சோதி  யாதிரை பரணி கேட்டை
ஏயுநற் சதையும் பக்க மீராறு நான்காறொன்பான்
 காய் கதிர் செவ்வாய் காரி வாரங்கள் கலந்த நாளில்
நோய்கொளில் மரணம் என்று நவின்றனர் நூல்கள்வல்லோர்

நட்சத்திரம்: ஆயில்யம்,  முப்பூரஞ்,  சோதி,  ஆதிரை,  பரணி,  கேட்டை,  சதையம்.

திதி: துவாதசி,  சதுர்த்தி,  சஷ்டி,   நவமி.

கிழமை: ஞாயிறு,  செவ்வாய்,  சனி.

உதாரணம் ஞாயிற்றுக் கிழமை,திதி துவாதசி , நட்சத்திரம் ஆயில்யம்

இப்படி அமைப்புள்ள நாள்களில்  வியாதிவரில்  மரணம் ஏற்படும் என்று
சூடாமணி உள்ளமுடையான் என்ற சோதிட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது