வியாழன், 8 டிசம்பர், 2016

பழமொழியும் ஆன்மீகமும்.....

பழமொழியும் ஆன்மீகமும்.....
1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.
6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
7. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
8. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்
10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!
11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா


Image result for ஞாபக சக்தி


18சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு  முன் பாடலாகச் சொன்னதை நம்பாத தமிழனுக்கு இன்று விஞ்ஞானம் மூலம் நிரூபித்துள்ளார்கள்,இனிமேலாவது
சித்தர் பாடல்களைப் படித்துப் பயனடையுங்கள்

உதாரணத்துக்கு ஒரு

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா

 பாடல்,யூகி முனிவர் சொல்லியது

சொல்லுவேன் மானிடருக்கு நாழி யொன்றில் 
சுவாசமது முந்நூற்றோ டறுபதாகும்
வெல்லுவேன் இருபத்தோராயிரந்தான் 
விளங்கி நிற்கும் சுவாசமது அறுநூறாக
புல்லுவேன் கலை மூன்று நாடி மூன்றாய் 
புகழான மாத்திரையும் செப்பலாகும் 
மல்லுவேன் நாடியது சரியாயோடில்
மானிடர்க்குப் பிணியுமது மருங்கிடாதே

இதன் விபரம் சுவாச பந்தனம் செய்துவந்தால் (பிராணாயாமம்) எப்போதும்
இளமையுடன் இருக்கலாம்.ஒரு நாளைக்கு ஒரு மனிதன் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு தரம் சுவாசிக்கின்றன,அதில் பதினாலாயிரத்து நானுறு  சுவாசம் மூலாதாரத்துடன் சேரும் மீதி ஏழாயிரத்து இரு நூறு சுவாசம் வீணாகி விடுகின்றது வேகமாக சுவாசிப்பதால்.   வீணாகும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி  சரியான முறையால் சுவாசித்தால் காலனையும் வெல்லலாம்
இன்னும் எவ்வளவோ கொட்டிக் கிடக்கிறது தமிழனுக்கு இவைகளை படிக்கத்தான் நேரமில்லை.

யந்திரம்,மந்திரம் எல்லாம் இதற்குள் அடக்கம்",சிவாயநம"என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சும்மா மூச்சை விடும்போது எடுக்கும் நேரத்தை விட  ,சிவாயநம"என்று மூச்சை விட்டால்
நமது சுவாசம் சரியான இடம் போய்ச்  சேரும்.இதை அன்றிருந்த மனிதருக்கு
விளங்கவைக்க உபயோகிக்கப்பட்டதுதான் கடவுள் சக்தி இவைகளை
விளக்க  இந்த பதிவு போதாது நிறுத்தி விஞ்ஞான விளக்கத்திற்குப் போவோம்.

இன்றைய தமிழ் வின் செய்தி 
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, மூக்கினூடுடாக சுவாசிக்கையில் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பயத்துக்குரிய துலங்கல் திறன் அதிகரிப்பதாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றது.
அதேநேரட் வாய்வழி சுவாசம் மேற்படி இயல்புகளை இல்லாது செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ் ஆய்வானது Neuroscience எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுவாசிக்கும் சந்தமானது மனித மூளையில் மின் செயற்பாட்டை தூண்டி, அது உணர்ச்சி சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும், ஞாபகத்தை தூண்டும் செயற்பாடுகளையும் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
இவ் ஆய்வில் வெளிச்சுவாசத்தை மேற்கொண்டவர்களை விட, உட்சுவாசத்தை மேற்கொண்டவர்கள் விரைவாக பயந்த முகங்களளை பொண்டவர்களாக மாறியதை இனங்காணப்பட்டிருந்தனர்.
அத்தோடு இவர்கள் விரைவாக ஒரு பொருளை ஞாபகப்படுத்தும் திறனைக் கொண்டிருந்தனர்.
நாம் உட்சுவாசிக்கும் போது olfactory cortex, amygdala மற்றும் hippocampus இலுள்ள நரம்புக் கலங்கள் தூண்டப்படுகின்றன. அதனாலேயே மேற்படி செயற்பாடுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கருத்து.
இவ் ஆரய்வுக்கென 60 பேர் பரிசீலிக்கப்பட்டிருந்தனர். நாசி வழி சுவாசத்தை மேற்கொண்டவர்களே மேற்படி இயல்புகளை காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் வின்