வியாழன், 19 ஜனவரி, 2017

புலிகள் அழிக்காததை செய்ய இப்போது தமிழர்கள் துணிந்து விட்டார்களா? - கைமாறுமா வடக்கு?

அண்மைக்காலமாக இலங்கையில் பாரதூரமான பிரச்சினையாகியுள்ள விடயம் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என்பது.
அத்தோடு வடக்கு கிழக்கில் விகாரைகளும் புத்தர் சிலைகளும் உடைக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் யார்? இதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது எதனை?
இந்தப் பிரச்சினையை நோக்கும் போது விடுதலைப்புலிகள் வாழ்ந்த காலத்திலும் வடக்கு வாழ் தமிழர்களும் புலிகளும் செய்யாத விடயத்தை இப்போதைய வடக்கு மக்கள் செய்யத் துணிந்து விட்டார்களா என்ற சந்தேகம் கூட எழுகின்றது.
வெளிப்படையான உண்மை யாதெனில் ஜனாதிபதி மைத்திரியாக இருக்கட்டும், பிரதமராக இருக்கட்டும் நாட்டில் பௌத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருகின்றார்கள்.
எந்த வகையிலும் பௌத்த கொள்கைகளைத் தாண்டி ஆட்சி நடக்காது, இலங்கை நகராது என்பதில் தீர்மானமாக இருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல அரசியல் ரீதியாக முடிவுகள் அனைத்துமே பௌத்தத்திற்கு பின்னர் தான் எடுக்கப்படும், எடுக்கப்பட்டு கொண்டும் வருகின்றது.
இதில் அப்போதைய ஆட்சியாளர்களும் சரி இப்போதைய ஆட்சியாளர்களும் தெளிவாக இருக்கின்றார்கள்.
அது மட்டுமல்ல ஆட்சிக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றவர்களும் கூடதேரர்களுக்கும், பௌத்தத்திற்கும் 

அது மட்டுமல்ல ஆட்சிக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றவர்களும் கூடதேரர்களுக்கும், பௌத்தத்திற்கும் கொடுத்து வரும் முக்கியத்துவம் நாட்டு மக்களுக்கும் தெளிவாக தெரியும்.
இருந்த போதும் ஏன் இலங்கையில் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது என பல்வேறு பட்ட பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றது?

இந்த கேள்விக்கு இலகுவாக கிடைக்கும் பதில் ஆட்சியும் அதிகார மோகமுமே என்பதே. அந்த வகையில் இவை வேண்டும் என்றே உருவாக்கப்பட்டு கொண்டு வரும் பிரச்சினைகளே.
இப்போது வடக்கில் பௌத்தம் அழிகின்றது, கிழக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு வருகின்றது என பேசுகின்றவர்கள் சில காலத்திற்கு முன்னர் சென்று பார்க்க வேண்டும்.
அதாவது விடுதலைப்புலிகள் காலகட்டத்தில் வடக்கு முழுதும் புலிகள் கொடிகட்டி பறந்தபோதும் கூட புத்தர் சிலைகள் உடைக்கப்படவில்லை.
அப்போது எவருமே இப்படியான பிரச்சினைகளை எழுப்பவில்லை பாதுகாக்கவும் துணிய வில்லை. அது சரி அழிக்கப்பட்டால் தானே காப்பதற்கு.
அதேபோல் புலிகள் ஆயுதப்பலத்தில் சிறப்பாக விளங்கிய போதும் புலிகள் எல்லைக்குள் தென்னிலங்கையும், இராணுவங்களும் நுழைய அச்சப்பட்ட காலகட்டத்திலும் புலிகளோ, தமிழர்களோ விகாரைகளை தாக்க வில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் புலிகள் ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் புத்தர் சிலைகளும் பௌத்தமும் அழிக்கப்பட்டு வருகின்றது என பிரச்சினைகளை எழுப்பி அவற்றை காக்க நினைப்பது வேடிக்கையான விடயம்.
அப்போதைய வடக்கு கிழக்கு மக்கள் புலிகளோடு ஐக்கியமாகி இணைந்து வாழ்ந்த போதும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என்பது எத்தனை மெய்யோ அதே அளவு உண்மையே தமிழ் மக்கள் புத்தர் மீது மதிப்பு வைத்துள்ளமையும்.
எத்தகைய நிலையிலும் தாக்க வரும் எதிரியை அழிப்பது மட்டுமே புலிகளின் கொள்கையாக இருந்ததே தவிர எதிரியாக இருந்தாலும் அவர்களுடைய கலாச்சாரத்திற்கோ, நம்பிக்கைகளையோ அழிக்கவோ அடக்கவோ முயற்சி செய்ய வில்லை.
இதனை அப்போதைய இப்போதைய ஆட்சியாளர்களும் கூட ஒத்துக்கொள்ள வேண்டும்.
என்றாலும் இப்போது அவ்வாறான பிரச்சினைகள் தோன்றியுள்ளது இல்லை தோற்று விக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுப்புது விகாரைகளும் வடக்கில் கட்டப்பட முயற்சிகள் நடைபெற்றும் வருகின்றது.
சுதந்திர நாடு இது இந்தவகையில் அனைவருக்கும் இடம் இருக்கின்றது “ஆனால் தன் குடும்பத்திற்குள் இனம் தெரியாத ஒரு நபரை கொண்டு வந்து திணிப்பதை எந்தவொரு மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான்”.,
அதேபோல ஒரு சமூகத்திற்குள் அந்நிய மதத்தை திணிப்பதை மட்டும் மனிதனும், மனிதமும் ஏற்றுக் கொள்ளுமா என்பது கேள்வியே அதனையும் தாண்டி வடக்கு பகுதிகளில் இப்போது பௌத்தம் புகுத்தப்பட தொடங்கியிருக்கின்றது.
இதற்கு காரணங்கள் இரண்டாக இருக்கலாம் அதாவது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள முக்கிய விடயம் பௌத்தம் அதனை சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு இடையில் சிங்கள குடியேற்றங்கள் தோற்று விக்கப்பட்டு ஒட்டு மொத்த இலங்கையும் பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே.
இவற்றினை அடித்தளமாக கொண்டே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றது. இதற்காக தென்னிலங்கை அரசியல் தலைமைகள் நடத்தும் கூட்டு முயற்சியே இவ்வாறான பிரச்சினைகள்.
வடக்கு முழுதும் தமிழர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது புத்தர் சிலைகள் உடைக்கப்பட வில்லை, விகாரைகள் இடிக்கப்பட வில்லை என்ற பதில் இதற்கு தெளிவான சான்றாக அமையும்.
எப்படியாவது வடக்கினை கைப்பற்றும் முயற்சியே இவ்வாறான பிரச்சினைகளின் அடித்தளம். காரணம் இன்றி காரியம் எதுவுமே நடைபெறுவதில்லை. இங்கும் இருப்பது அரசியலே.
அதாவது தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டு இவை நடத்தப்பட்டு வருகின்றது என்பது ஆழ நோக்கின் தெளிவாகும்.
எனினும் இப்படிப்பட்ட நோக்கத்தோடு செயற்பட்டு வரும்போது அது தமிழ் மக்களின் மனங்களில் எந்த விதமான பாதிப்பினை ஏற்படுத்தும்? சகோதரத்துவத்தோடு வாழ நினைக்கும் மக்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைத்தும் பார்ப்பதில்லை.
இவ்வாறு படிப்படியாக மக்கள் மனங்களில் நஞ்சை விதைத்து வரும் செயலினால் கிடைக்கப்போகும் பதில் மட்டும் கலவரமும் கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கும் யுத்தமுமே. அதனையா எதிர்பார்க்கின்றார்கள் என்பதற்கும் விடையில்லை.
நல்லிணக்கம் என பேச்சில் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் நாடு பின்னோக்கியே நகரும் என்பதில் கவனம் எடுத்து அரசு செயற்படுமாயின் உண்மையான சொர்க்க பூமியாக இலங்கை மாற்றம் அடையும் என்பது திண்ணம்.