திங்கள், 19 டிசம்பர், 2016

ட்ரம்புக்கு வந்த சிக்கல்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரிக்கு வாய்ப்பு

ட்ரம்புக்கு வந்த சிக்கல்! அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரிக்கு வாய்ப்பு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 8ம் திகதி நடைபெற்றது.
இதில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
ஹிலாரி கிளிண்டன் 26 லட்சம் ‘பாப்புலர் ஓட்டு’ எனப்படும் மக்கள் ஓட்டுகளை பெற்றிருந்தாலும், காலேஜ் எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை அதிகம் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்புக்கு 306 தேர்வாளர்களும், ஹிலாரிக்கு 232 தேர்வாளர்களும் வாக்களித்தனர்.
டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் தேர்வாளர்கள் ஓட்டுகள் தான் அதிகாரபூர்வமான ஜனாதிபதியை முடிவு செய்கிறது. இதற்கான தேர்தல் நாளை (20ம் திகதி) நடைபெறுகிறது.
இந்நிலையில் தேர்வாளர்கள் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், ஹிலாரியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பிரசாரம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், பொதுமக்களிடம் இருந்து குடியரசு கட்சி தேர்வாளர்களுக்கு நூற்றுக்கணக்கான இ-மெயில்கள் மற்றும் டெலிபோன் கால்கள் மூலம் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
ஒருவேளை மக்களின் கோரிக்கையை ஏற்று 38 தேர்வாளர்கள் மாற்றி வாக்களித்தால் 270 ஓட்டுகளை பெற்று ஹிலாரி ஜனாதிபதி ஆகி விடலாம். இந்த பிரச்சினையால் டிரம்ப்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் இனவாதத்திற்கு எதிரான அறைகூவல்!

பிரதமரின் இனவாதத்திற்கு எதிரான அறைகூவல்!
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தம்மை தக்க வைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரே ஆயுதமாக இனங்களுக்கிடையே முரண்பாட்டைத் தோற்றுவித்து இனவாதத்தை தூண்டும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்குவார்கள் என்ற மேற்குலக அறிஞர் ஒருவரின் கூற்றுக்கு ஒத்ததாக இன்று எமது நாட்டில் மீண்டும் இனவாத செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயக நீரோட்டத்தை திசை திருப்பும் ஒரு முறை கேடானதும் கவலை தரக்கூடியதுமான விடயமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
அரசியலில் ஓரங்கட்டப்பட்ட சக்திகள் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிடும் அந்த முனைப்பான முயற்சிகளை முறியடிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய கட்டாயம் இன்று அவசரமாக தேவைப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய குந்தகமாக அமைந்து வரும் இந்த இனவாதம் கடந்த காலத்தில் நாட்டை எந்தத் திசைக்கு இழுத்து சென்றது என்பதை நாமறிவோம். கடந்த ஆட்சியின் இறுதிக் கட்டப் பகுதியில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களால் நாடு எதிர்கொண்ட நெருக்கடியான சவால்களை மீட்டுப் பார்ப்போமானால் இன்னொரு தடவை அதுபோன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.
இவ்வாறான நிலையில்தான் கடந்த திங்கட்கிழமை குருதலாவையில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முக்கிய உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் இனவாதத்தைத் தூண்டும் சக்திகள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லையென கடுமையாக எச்சரித்திருக்கிறார். காவியுடை தரித்த சிலர் பௌத்த கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரண்பட்ட விதத்தில் செயற்படுவதாகவும் இது விடயத்தில் அரசாங்கம் விழிப்பாகவும், உன்னிப்பாகவும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருப்பினும் அந்தச் சக்திகளை முறியடிப்பதற்கு தயங்கப் போவதில்லை என அங்கு பிரதமர் சூளுரைத்திருக்கின்றார். இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயக சுதந்திர உரிமை இருப்பது போன்று அவர்களது மத சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டை அரசு கொண்டிருப்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். புத்தரின் அன்பு வழிப் பாதையிலிருந்து எமது மக்களை திசை திருப்பும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இந்த சில காவியுடைச் சக்திகளின் பின்னணியில் இயங்கி வரும் மக்காளல் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகள் குறித்து அரசு விழிப்புடனேயே இருப்பதை பிரதமர் இங்கு சுட்டிக்காட்டத் தவறவில்லை. அத்துடன் பாதுகாப்புத் தரப்பையும் உஷார் படுத்தியுள்ளார்.
தமது சுயநல அரசியல் செயற்பாடுகளுக்காக நாட்டு மக்களை பலிக்கடவாகப் பயன்படுத்துவது போதிமாதவனின் கோட்பாடுகளுக்குப் பொருந்துமா? என்பதை அவர் வழியைப் பின்பற்றும் பௌத்த மக்கள் உணர வேண்டும். எந்தவொரு சமயமும் மற்றைய சமயத்தை கசப்புணர்வுடனும் காழ்ப்புணர்வுடனும் நோக்க முடியாது.
எந்தவொரு மதமும் மானுடத்தை கழுத்து நெறித்துக் கொள்வதற்கு போதிக்கவில்லை. அறப்போதனை சகல மதங்களிலும் நல்லதை மட்டுமே போதிக்கின்றன.
அனைவரும் மனிதர்கள் என்ற அன்பு வழி தன்னைப் போதித்த பௌத்த கோட்பாடுகளை மீறி மற்றுமொரு தடவை நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்யும் தவறான கைங்கரியத்தை முன்னெடுத்து இரத்தக்கறை படிந்த கரங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் நாட்டுக்கு எதனைச் சொல்ல முற்படுகின்றனர்? ஜனநாயகத்தை மீண்டுமொரு தடவை கேள்விக்குட்படுத்தி சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டைக் கொண்டு செல்லும் முயற்சிக்கு வாய்ப்பளிக்க முடியுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
யுத்தத்துக்கு வழிகோலும் சில மதக் குழுக்கள் எம்மிடையே இருப்பது நாடு கண்ட துரதிஷ்டமென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டி இருப்பதையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. திட்டமிட்ட முறையில் இச்சக்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் களுத்துறையில் அரசியலிலீடுபட்டவர்களும் அம்பாந்தோட்டையில் நீலப்படையணியில் இணைந்து செயற்பட்டவர்களுமே இவ்வேலைத் திட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும் இதில் சில பௌத்த துறவிகளும் இணைந்து செயற்படுவதையும் அவர் பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.
கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டே இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இந்தக் குழுவினர் இன்று மீண்டும் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்த முனைகின்றனர். இதனை ஜனநாயக அரசு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது எமது பூமதாவில் இரத்த ஆறு ஓட இன்னொரு தடவை இடமளிக்க முடியாது. இந்தத் தீய சக்திகளின் இலக்கு எந்த வகையிலாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்பதுதான் அதற்காக ஒவ்வொரு சமுகத்தையும் தமது வலைப்பின்னலுக்குள் சிக்கவைப்பதுதான் இவர்களது மறைமுகமான திட்டமாக காணப்படுகின்றது.
அவர்கள் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் ஒன்றை கூறுகின்றனர். தமிழ், முஸ்லிம் மக்கள் முன் போய் வேறுவிதமாகக் கதைக்கின்றனர். அதேசமயம் இனவாதக் குழுக்களைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தூண்டி விடுகின்றனர். இந்த வகையில் பார்க்கின்ற போது, இந்த இனவாதத்தின் உண்மையான ஊற்று தோல்வி கண்ட அரசியலாகவே காணப்படுகின்றது. தமது அரசியல் பிழைப்புக்காக இனவாதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு ஜனநாயக அரசியலில் இடமளிக்க முடியுமா என்பதை தாம் சித்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு இனவாத அரசியலை தோல்வியடையச் செய்வதற்கு மற்றொரு இனவாதச் செயற்பாடு மாற்றீடாக அமைய முடியுமா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. இனவாதம் எந்தக் கோணத்தில் தலையெடுத்தாலும் அதனை முறியடித்தே ஆக வேண்டும்.
எவ்வாறாக இருந்த போதிலும் தவறான பாதையில் பயணிப்போருக்கு சரியான பாதையை காண்பித்தாக வேண்டும் அந்தச் சரியான பாதைக்குள் அவர்கள் வரத்தவறினால் நாடு இருளுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதை உணர்ந்து. இனவாதத்தை முறியடிக்க எத்தகைய ஆயுதத்தையாவது பயன்படுத்தியே தீரவேண்டும் அதற்கமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எச்சரிக்கையை நோக்க வேண்டியுள்ளது. நாம் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமையையும் பாதுகாக்க இதுவொன்றே சரியான வழிமுறையாகும். மற்றொரு தடவை இந்த மண்ணில் இரத்த ஆறு ஓட இடமளிக்கப்படக்கூடாது என்ற விடயத்தில் உறுதியுடனிருப்போமாக!

புதிய அரசியலமைப்பு நாம் அனுமதியோம் -G .L .பீரிஸ்

புதிய அரசியலமைப்பு நாம் அனுமதியோம் -G .L .பீரிஸ் 




இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம்

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.! | Virakesari.lk

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.! | Virakesari.lk: நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான்

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்....
பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!
கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?
மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?
அங்கோர்வாட்_கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.
திருநள்ளாறு_காரி_ஈசன்_கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.
கடல்_நடுவே_ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.
தஞ்சாவூர்_பெருவுடையார்_கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?
தொல்காப்பியமும் #திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை ...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.
சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.
வானியல்_அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.
பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
உலகை_கட்டி_ஆண்ட_தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.
மாதவன் விஷ்வா பானு பிரியா

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! மூத்த ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! மூத்த ஊடகவியலாளரின் உருக்கமான பதிவு


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M. அப்துல் ஜபார் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஊடக துறையில் பல விருதுகளை பெற்றுக்கொண்டவருமான S.M. அப்துல் ஜபார் அவர்கள் புலம் பெயர் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வி ஒன்றிலேயே இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
66 ஆண்டுகள் ஊடக துறையில் பணியாற்றி S.M. அப்துல் ஜபார் அவர்களுக்கு வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு எதுவென்று நெறியாளர் கேள்வி தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய அவர், 66 ஆண்டுகளாக ஊடக துறையில் பணியாற்றி வரும் தனக்கு பல பாராட்டுகளும், 25க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், தன்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு என்று குறிப்பிடும் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பாராட்டை தன்னால் மற்றக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிற்கு சென்ற போது, நிகழ்வின் முடிவில் தனக்கு வெளியில் செல்லவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்று மாலை தலைவர் பிரபாகரனை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மாலை பொழுதானதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன் அவர்கள் தன்னை வந்து சந்தித்ததாகவும், நீங்கள் போய் தலைவரை சந்திப்பது மரியாதை இல்லை. எனவே தலைவரே உங்களை சந்திப்பதற்கு வருகின்றார் என குறிப்பிட்டதாக S.M. அப்துல் ஜபார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பின்னர் புதிய வேன் ஒன்று வந்ததாகவும், இந்த வேன் நிச்சயமாக கொழும்பு வழியில் வந்திருக்காது எனவும், குறிப்பிட்ட அவர், துப்பாக்கி சகிதம் இரண்டு வீரர்கள் வேனில் இருந்து இறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் வேனில் இருந்து தலைவர் பிரபாகரன் கம்பீரமாக இறங்கியதாகவும், அவரை கண்டவுடனேயே ஓடிப்போய் கட்டிப்பிடிக்க ஆசையாக இருந்தாகவும் கூறியுள்ளார்.
எனினும், பாதுகாப்பு காரணம் கருத்தி அது முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார். இருந்தும் தன்னை நெறுங்கிய தலைவர் அவர்கள் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாகவும், அது தன் வாழ் நாளில் மறக்க முடியாத பாராட்டு எனவும் கூறியுள்ளார்.

தமிழ் மொழி மீதான அதீத பற்று...! சிங்கள முதியவர் செய்த காரியம்

தமிழ் மொழி மீதான அதீத பற்று...! சிங்கள முதியவர் செய்த காரியம்



தமிழ் மொழி மீதான அதீத பற்று காரணமாக 64 வயதான சிங்கள முதியவர் ஒருவர் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பலாங்கொடை பகுதியை சேரந்த எம்.சமரதுங்க என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் மொழி மீது கொண்டுள்ள அதீத பற்று காரணமாகவே, குறித்த முதியவர் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்களவர்களுக்கு இரண்டாம் மொழியாக பதிவாகியுள்ள தமிழ் மொழி பரீட்சைக்கு எம்.சமரதுங்க இம்முறை தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1971ஆம் ஆண்டு முதன் முறையாக சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய சமரதுங்க, 6 பாடங்களில் 3 சித்திகளை பெற்றுக்கொண்ட நிலையில், 1972ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது முறையாக பரீட்சை எழுதிய அவர், நான்கு சாதாரண சித்திகளை பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை போக்குவரத்து சபை ஊழியராகவும் கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamil win