கொழும்பு,புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால்,முன்னாள் சனாதிபதி வேட்பாளரும்,பாதுகாப்பு உயர் அதிகாரியுமான,ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பதிமூன்று
புத்த பிக்குகளை,சீருடை அணியாதவர்களால்,சீருடை அணிந்த போலீசார் வளைத்து காவலில் நிற்க,குண்டுக்கட்டாகத் தூக்கி,தனியார் பஸ்ஸில் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
இது சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த.பிக்குகளின் வழக்கறிஞர்,பி.பகல் 2 -30க்குத்தான்,
கோட்டை நீதிமன்ற நீதிபதியால்,மக்களுக்கு அசௌகரியமாக நடந்து கொண்டவர்களை,அகற்றுமாறு
பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்ததாகவும்,ஆனால் பி.பகல் 01 -30 க்குமுதலே, பிக்குகள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்ட தாகவும்.முன்பு கடத்தியவர்கள் யார் என்றும்,கடத்திக் கொண்டு செல்லப்பட்ட
பிக்குகள் எங்கு வைக்கப் பட்டுள்ளார்கள் போன்ற விசயங்கள்,நீதிமன்ற தலையீட்டின் பின்னரே வெளியிடப்
பட்டதாகவும் கூறினார்,
வழமைபோல பத்திரிகைத் தர்மமும்,பொலிசாரால் கடுமையாகக் கடைப்பிடிக்கப் பட்டது,என்ன செய்வது,
நானும் மட்டக்களப்புக்கு பிரயாணம் செய்வதற்கு,அந்த இடத்திற்குப் போகவேண்டிய சூழ்நிலை,போனதால்
ஒரு உண்மையை அறிந்து கொண்டேன்.
காலில விழுந்து கும்பிடுபவர்களும் அவங்கதான் காலில பிடிச்சி தூக்கி ஏறியிறவங்களும் அவர்கள்தான்.
ஒரு நேரடி ரிப்போர்ட் தந்திருக்கன், உங்கள் என்னத்தை பின்னூட்டமாக எழுதுங்கள்.
அன்புடன்,!...