திங்கள், 19 டிசம்பர், 2022

நகைச்சுவை. 

பரதேசவாசம்.(வெளிநாட்டு வாசம்)

பல வகையான சாதக அமைப்புகள் வெளிநாட்டு வாழ்க்கை  விபரங்களை தெளிவு

படுத்தியுள்ளது,இது "சாதக சிந்தாமணி" எனும் சோதிட நூலின் விளக்கம் இப்படி உள்ளது.  சோதிபூராடமசு வினியிலிராகிருக்கச் 

சொல்லுமகம் பூசமதில் சனியிருக்கு மேனும் 
மேதில்பூரட்டாதி ஆயிலியம் அதனில் 

இராகுநிற்கச் சித்திரையில் சனியிருந்திட்டாலும் 
மோதியபத்துடையோனும் அங்கிசத்து ளோனும் 

ஓங்குசர ராசிதனில் உகந்திருக்கு மேனும் 
கோதிலாச்சரராசி வியத்தில்பல மின்றி 

கொடும்பகைஞருடன்சாமி கூடில்பர தேசம் . ( 431 ) 

( இ - ள் . ) சுவாதி , பூராடம் , அசுவனி நட்சத்திரக் 
கால்களில் இராகு இருக்க , மகம் , பூச நட்சத்திரக் கால்களில் 
சனி இருந்தாலும் பூரட்டாதி , ஆயிலிய நட்சத்திரக் கால்களில் 
இராகு இருக்க , சித்திரை நட்சத்திரக்காலில் சனி இருந்தாலும் , 
பத்தாமிடத்திற்கு அதிபதியும் அவன் அங்கிசத்தில் 
இருப்பவனும் சர இராசியில் இருந்தாலும் சர இராசி அல்லது 
பன்னிரண்டாமிடத்தில் பலமின்றி பாவக்கோளுடன் 
இலக்கனாதிபதி கூடி இருந்தாலும் வேறு நாட்டிற்குச் செல்வான்.