கடந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பத்மனாதன் குருபரேஷன் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவர் தொழில்நுட்பப் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம் தற்போது தெரியவந்துள்ளது.
விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை ராகுல வித்தியாலயத்தின் ஆர்.ஜி.நிசல் புன்சர என்ற மாணவரும், வர்த்தகப் பிரிவில் ஆனந்தா வித்தியாலயத்தின் முதித்த அக்கலங்க ராஜபக்ச என்ற மாணவரும், கலைப் பிரிவில் விகாரமகாதேவி பெண்கள் வித்தியாலயத்தின் யு.டபிள்யூ.அமந்தா பரமியும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆங்கில மொழி மூலப் பரீட்சையில் கண்டி பெண்கள் பாடசாலையின் ஆர்.இந்தீவரி கலைப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தப் பரீட்சையில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 550 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.