மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மோசமான ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி மன்னார்குடி கும்பலிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார்!
=====================================
தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறை எடுத்த நட வடிக்கை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறது. அரசியல் வாதிகளின் கமிஷன் ராஜ்ஜியம் அதிகாரிகளிடம் மாற்றிக் கொடுக் கப்பட்டதன் விளைவு ராமமோகன ராவ் சிக்கிக்கொண்டார் என்கின்ற ஐ.ஏ.எஸ்.வட்டாரம்,
""தமிழக அரசை ஊழல்மயமாக்கியதில் அவருடன் இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பங்கு இருக்கிறது'' என்கின்றது கைமாற்றப்பட்ட கமிஷன் ராஜ்ஜியம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்த அந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மிடம், ""2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பொதுப் பணி, நெடுஞ்சாலை, தொழில், சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து, பத்திரப் பதிவு, எரிசக்தி (மின்சாரம்), மதுவிலக்கு ஆயத்தீர்வை, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, கூட்டுறவு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை உள்பட 20-க்கும் மேற் பட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்களிடம், தினமும் 20 எல் கார்டனுக்கு வந்து விடவேண்டும் என எழுதப் படாத ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். மற்ற துறைகளின் தன் மைக்கேற்ப தொகை தீர் மானிக்கப்பட்டிருந்தது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேரையும் கார்டனி லிருந்து ஜெயலலிதா வெளியேற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மீதும் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப் போதைய தலைமைச்செய லாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் தனது செயலாளர்களான ஷீலா ப்ரியா, ராமமோகனராவ், வெங்கட்ரமணன், ராம லிங்கம் ஆகியோரிடம் ஆலோசித்தார் ஜெய லலிதா. அதில், "ஒவ்வொரு அமைச்சரும் தினமும் கார்டனுக்கு தருவதைவிட இரண்டு மடங்கு சம்பாத் தியத்தைப் பார்த்துள்ளனர்.
அவர்கள் அபரிமிதமான வளர்ச்சியடைவது பின் னாளில் உங்களுக்கு சிக்கலை உருவாக்கும்' எனச் சொல்லி, ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு கலெக்ஷன் புழங்குகிறது'' என்கிற புள்ளி விபரத்தை விவரித்தனர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
அதோடு, கமிஷனுக்கு சத வீதத்தை (பெர்சண்டேஜ்) முடிவு செய்யலாமென்ப தையும் எடுத்துச்சொன்னார் கள். அதனை வசூலித்து தரும் பொறுப்பையும் அதிகாரி களிடமே ஒப்படைத்தார் ஜெ.
ஆரம்பத்தில் 12% கடைசியில் 42%
ஒவ்வொரு துறையி லும் நிறைவேற்றப்படும் திட்டங்களில் 12 சதவீதம் என முடிவு செய்யப்பட்டது. இதில், 10 சதவீதம் கார்ட னுக்கு. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலா ஒரு சதவீதம். அனைத்து துறை களுக்குமான திட்டங்களில் வரும் சதவீதத்தை ராமமோகனராவ் வசூலித்து கார்டனில் ஒப்படைத்து விட வேண்டும்.
டிசம்பர் 2012-ல் தலைமைச்செயலாளராகவும் பிறகு அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இந்த கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதேநேரத்தில், துறைரீதி யாக உள்ள நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாறுதல்கள் உள் ளிட்டவைகளை அந்தந்த அமைச்சர்களே கவனிக்க வேண்டும். அதில் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை ஒவ்வொரு அமைச்சரிடமிருந்தும் வசூலித்து கார்டனில் ஒப்படைக்கும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திடம் தந்தார் ஜெயலலிதா.
சசிகலா, மீண்டும் கார்டனுக்குள் வந்ததற்குப் பிறகு இந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு மாற்றப்பட்டது. துவக்கத்தில் 12 சதவீதமாக இருந்த கமிஷன், கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத மாகவும் அதிகபட்சம் 42 சதவீதமாகவும் உயர்ந்து நிற்கிறது'' என்று சுட்டிக்காட்டி னார் அந்த அதிகாரி.
ராமமோகனராவின் அடேங்கப்பா வளர்ச்சி
""அனைத்து துறைகளுக்குமான டெண்டர் விவகாரங்களை கவனிக் கும் மொத்தப் பொறுப்பும் ராமமோகனராவிடம் இருந்ததால், தொழி லதிபர்கள் அனைவரும் ராவை சந்தித்தே டீலை முடித்துக்கொள்வார்கள்.
டீல் விவகாரங்களை முடிவு செய்வதற்காகவே தாஜ் ஹோட்டலில் நிரந்தரமாக ஒரு ரூம் அவருக்கு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல்தான் ராவுடனான தொழிலதிபர்களின் மீட்டிங் நடக்கும். திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகைக்கேற்ப, நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தைத் தாண்டி தனக்கென 3 சதவீதத்தை அந்த மீட்டிங்கிலேயே முடிவு செய்துகொள்வார் ராவ்'' என்கிறார்கள் தமிழக தொழில்துறையினர்.
பொதுப்பணித்துறையில் மணல் காண்ட்ராக்ட் விவகாரம் தொடங்கி ஒவ்வொரு துறையிலும் இவர் கோலோச்சிய டெண்டர் விவகாரங்களை மத்திய அரசுக்கு சக அதிகாரிகளே போட்டுக்கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதா அரசில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் திட்டமிட்டு, அவைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டி அனுப்புமாறு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சிலரை நியமித்தது பா.ஜ.க.டெல்லி தலைமை.
அந்த வகையில், பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, எரிசக்தி, மதுவிலக்கு, வனத்துறை, தொழில்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நடந்த டெண்டர் விவகாரங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி லாபம் பார்த்திருப்பதாக ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டியுள்ளதாம் டெல்லி.
கூட்டுப் பொறுப்பு
நம்மிடம் பேசிய புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியான புதுவை பாலு, ""ஜெயலலிதா நிர்வாகத்தில் தனி ஒரு அதிகாரி ஊழல் செய்திட முடியாது. ராமமோகனராவ் ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த போதும் சரி, தலைமைச்செயலாளராக இருந்த போதும் சரி ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு அவர் மட்டும் பொறுப்பல்ல.
அரசு ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்களான வெங்கட்ரமணன், சிவ்தாஸ் மீனா, விஜயக்குமார், ராம லிங்கம் உள்ளிட் டோரின் கண்கா ணிப்பை மீறி எந்த ஊழலும் நடந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படிப்பட்ட ஒரு செட்- அப்பைத்தான் ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்தார். அவரை கண்காணிக்க இவரையும், இவரைக் கண்காணிக்க அவரும் என்கிற செட்-அப் அது. இவர்கள் தவிர ஒவ்வொரு துறையின் செயலாளர்களும் ஊழல்களில் பங்குதாரர்கள்தான். அதனால் இது ஒரு கூட்டுப் பொறுப்பு'' என்கிறார் மிக அழுத்தமாக!
ஊழல் ராஜ்ஜிய அதிகாரிகள்
ஜெயலலிதா அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்திய ஊழல் கொள்ளைகள், ஆந்திரா, தெலுங்கானா, கேரள மாநிலங்களில் ரியல் எஸ்டேட்டு களாகவும் வெளிநாடுகளில் முதலீடுகளாகவும் விரிந்துகிடக்
. 200 கோடிகளுக்கு அதிகமான அரசு திட்டங்களுக்கான டெண்டர்களில் எடுக்கப்படும் முடிவுகளின்படி ஜெய லலிதாவை சுற்றியிருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் கமிஷன் சதவீதம் சரிசமமாகவே பிரித்து தரப்பட்டது என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, நெடுஞ்சாலைதுறை ராஜீவ் ரஞ்சன், பால்வளத்துறை நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால், முதல்வரின் செயலாளர்கள் விஜயக்குமார், சிவ்தாஸ் மீனா, வணிகவரித்துறை கமிஷனர் சந்திரமௌலி, பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.செல்வராஜ், கணிம வளத்துறை எம்.டி.வள்ளலார் உள்ளிட்ட 40 ஐ.ஏ.ஏஸ்.கள் ராமமோகனராவின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப் பட்டவர்கள்தான்.
டாஸ்மாக் கமிஷன் அம்மாடியோவ்
உள்துறைச்செயலாளர் அபூர்வ வர்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது டாஸ்மாக். தமிழகத்திலுள்ள மதுபான உற்பத்தி ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் கேஸ் (12 பாட்டில்கள் கொண்ட பெட்டி) லிக்கரும் 1 கோடி பியர் பாட்டில்களையும் கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஒரு லிக்கர் பெட்டிக்கு 60 ரூபாயும், பியர் பெட்டி ஒன்றுக்கு 35 ரூபாயும் பிரிமியர் லிக்கர் பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் மற்றவைகளுக்கு 2 ரூபாயும் கமிஷனாக அரசுக்கு தருகிறார்கள் ஆலை தொழிலதி பர்கள்.
இதில், கார்டனுக்கு 60 சதவீதமும், அதிகாரிகளுக்கு 35 சதவீதமும், மந்திரிக்கு 5 சதவீதமும் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும்.
நத்தம்விஸ்வநாதனுக்கு ஒரு அன்புநாதன் இருந்தது போல, அபூர்வ வர்மாவுக்கும் வட இந்திய அதிகாரிகளுக்கும் மேகநாதன் என்பவர்தான் ஃபைனான்ஷியல் புரோக்கராக இருக்கிறார். மது ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படும் சரக்குகளுக்கு 58 சதவீதம் வாட் வரி விதிப்பு செய்யப் படுகிறது. வணிகவரித்துறையின் விதிகள்படி இந்த வாட் வரியை பிடித்தம் செய்துகொண்டுதான் மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் பணத்தை செட்டில் செய்ய வேண்டும்.
ஆனால், வாட் வரியை பிடித்தம் செய்வதில்லை. இதனால் மாதத்திற்கு சுமார் 2,500 கோடி ரூபாய் வணிகவரித்துறைக்கு வருவாய் இழப்பு. இந்த பணத்தை 2 மாதம், 3 மாதம் ரொட்டேஷனில் விட்டுவிடுகிறார்கள் மதுபான ஆலை அதிபர்கள். இதற்காக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆலை அதிபர்கள் செமையாக கவனித்துவிடுகின்றனர். வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி, "எங்க டிபார்ட்மெண்டுக்கு வர வேண்டிய வரியை பிடித்தம் செய்யாமல் இருப்பது தவறு' என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
பொங்கும் பால்வளம்!
பால்வளத்துறையில், 2014-2016- க்கான ஃப்லிம் டெண்டர் ( பாலித்தீன் கவர் ) 250 கோடிக்கு விடப் பட்டது. கடந்த 30 வருடமாக, இந்த டெண்டரை ஓசூரில் இருக்கும் பத்மா பேக்கேஜ் மற்றும் ப்ளாசம் பேக்கேஜ் என்ற நிறுவனமே எடுத்து வருகிறது. மில்லர் தலைமையிலான போர்டில், அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டு கள் இருப்பதால் அவர்களுக்கு ஆர்ட ரை தரக்கூடாது என முடிவு எடுக் கின்றனர். அதனை சுனில்பாலிவால் நிராகரித்ததுடன், ஓப்பன் டெண்டரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமே கலந்துகொள்ளும்படி சில நிபந்தனை களை மாற்றியமைத்து அவர்களுக்கே கொடுத்துள்ளார்.
இதில் மட்டும் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.ஷீலா பாலகிருஷ்ணனின் சப் போர்ட்டும் சுனிலுக்கு இருப்பதால் ஊழல்கள் தலைவிரித்தாடுகிறது. செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது, அவரது உதவியாளராக இருந்த எழில் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2006-ல் தி.மு.க. ஆட்சியின் போது அவருக்கு செய்தித்துறையில் பணியிடம் தரப் பட்டது. 2014-ல் அவர் ரிட்டயர்டு ஆனபோதும் செய்தித்துறையின் கூடுதல் இயக்குநராக 2 வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.2016-ல் அந்த நீட்டிப்பு முடிந்த போது மீண்டும் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது. எழிலுக்கு இதனை வாங்கித்தந்தவர் வெங்கட்ரமணன். இதன் பின்னணியில், மிகப்பெரிய தொகை கைமாறியது. கேபிள் டி.வி. நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் குமரகுருபரன், கேபிள் டி.வி.கனெக்ஷன் எண்ணிக் கையை குறைத்து காட்டி அரசுக்கு இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இதன் பின்னணியில் விளையாடுவது சுமார் 90 கோடி! இப்படி மேலே குறிப் பிட்டுள்ள ஒவ்வொரு அதிகாரிகளும் அவர்கள் துறை சார்ந்த திட்டங் களில் குறைந்தது 100 கோடி ரூபாய் ஊழல்களின் பங்குதாரர்களாகவே இருக்கிறார்கள் என்று விவரிக்கிறது அதிகாரிகள் தரப்பு.
10-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கு தனிச்செயலாளரை நியமிக்காமல் ஒருவரிடமே பல துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமும், கமிஷன் கலெக்ஷன்தான்.
கலெக்டர்களின் கஜானா
தமிழகத்திலுள்ள 32 மாவட்ட கலெக்டர் களில் கன்னியாகுமரி சஜன்சிங்சவான், திண்டுக்கல் வினய், பெரம்பலூர் நந்தகுமார், மதுரை வீரராக ராவ், திருவண்ணாமலை பிரசந்த் வாட்னேரே ஆகிய 5 கலெக்டர்கள் மட்டுமே நேரடி ஐ.ஏ.எஸ்.கள். மற்ற அனை வருமே கன்ஃப்ர்டு ஐ.ஏ.எஸ்.கள்.. இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த பட்சம் 3 வருடங்களும் அதிகபட்சம் 7 வருடங்களும் கலெக்டர்களாகவே இருக்கிறார்கள்.
ராமமோகனராவ், ஷீலா பால கிருஷ்ணன், வெங்கட்ரமணனின் சிபாரிசுகளில் இவர்கள் கோலோச்சு கின்றனர். வருஷத்துக்கு சுமார் 2 முதல் 3 ஆயிரம் கோடிகளுக்கான நிதியை கையாளுகிறார்கள். இதில் 25 சதவீதம் கலெக்டர்களின் சொந்த கஜானாவுக்குச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து அவர்களை பாதுகாக்கும் உயரதிகாரிகளுக்குப் பத்து சதவீதம்.
கவர்னரிடம் புகார்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவுக்கு புகார் அனுப்பி யிருக்கிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன். அவரிடம் நாம் பேசியபோது, ""தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்கப் படாமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புரளும் முக்கியத்துறைகள் அனைத்திலும் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டு ஊழல் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்.
தமிழகத்திற்கு சென்றால் தடையின்றி ஊழல் செய்யலாம் என்கிற மனநிலையிலேயே தமிழகத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் ராஜ்ஜியத்தை ஒழிக்காமல் ஊழல்களை ஒழிக்க முடியாது'' என்கின்றார் வேல்முருகன்.
மொத்த ஊழலில் கார்டனுக்கு 60% மந்திரிகளுக்கு 5%, அதிகாரிகளுக்கு 35% என பர்சண்டேஜ் பக்காவாக பங்கு வைக்கப்படுகிறது.