நீதியைத்தான் கேட்கின்றோம் பழிவாங்க முயற்சிக்கவில்லை
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டு
(ஆர்.ராம்)
(ஆர்.ராம்)
யுத்தத்தின் போது முறையற்ற வகையில் கட்டளை வழங்கியவர்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இழைக்கப்பட்ட தவறுகளுக்கும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். நீதியைத்தான் கேட்கின்றோமே தவிர பழிவாங்குவதற்கு முயற்சிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலரிடம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கையளிக்கப்பட்டது. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இலங்கையின் நீதித்துறையானது கடந்த கால நிலைமைகளிலிருந்த மாறியிருக்கின்றது. குறிப்பாக சுயாதீனமாக செயற்படுகின்றது என்பதால் அவர் அவ்வாறான நிலைப்பாட்டினை எடுத்து கூறயிருக்கலாம். எம்மைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் நடைபெறவுள்ள விசாரணையில் நம்பிக்கையை கொண்டு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினர் விசாரணைப் பொறிமுறையை மறுத்தால் அந்த பொறிமுறையானது என்ன நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அப்பொறிமுறையால் அடைந்துகொள்ள முடியாது.
இராணு வீரர்கள் பலர் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பாக அச்சமடைகின்றனர். ஆசாதாரண காலத்தில் நடைபெற்ற விடயங்களை இரண்டு பிரிவாக வகுத்துக்கொள்ள முடியும். முதலாவதாக பாலியல் குற்றங்கள், சரணடைந்தவர்களை கொலை செய்த குற்றங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது யுத்தத்தை நடத்திச் சென்றமையும் அதன்போது நிகழ்ந்த குற்றங்களுமாக அமைகின்றன.
இதில் பாலியல் துன்புறுத்தல் மாற்றும் சரணடைந்தவர்களை கொலைசெய்த குற்றங்களுக்கு, அதனைப் புரிந்த இராணுவ வீரர்களே பொறுப்புக்கூற வேண்டும். யுத்தத்தை நடத்திச் சென்றமையும் அதன்போது நிகழ்ந்த குற்றங்களுக்கும் யுத்தத்தின்போது கட்டளைகளை வழங்கியவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
யுத்த களத்தில் நின்றவர்கள் கட்டளைகளைத் தான் நிறைவேற்றினார்கள். கட்டளைகளை வழங்கியவர்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நாங்கள் நீதியைத்தான் கோருகின்றோம். பழிவாங்குவதற்கு முயற்சிக்கவில்லை. ஆகவே எமது நியாயமான கோரிக்கையை புரிந்துகொள்ள வேண்டும்.
புதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்ககூடிய வகையிலும் நீதியை நிலைநாட்டக்கூடிய வகையிலும் ஒரு நீதி விசாரணை அவசியம். அந்த விசாரணை சுயாதீனமாக அமைய வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள