புதன், 28 டிசம்பர், 2016

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை - சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை - சுரேஸ் பிரேமச்சந்திரன்


ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் மறுதலிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இன்று(28) யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளதுடன் இதன்போது இவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக அங்கம் வகிப்பதாகவம், இருவரும் சமஷ்டி அமைப்பு முறை வேண்டுமென்றோ, அல்லது வடகிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்றோ எந்தவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
பௌத்த மதத்திற்கு தான் முதலிடம் என்பதனை எதிர்க்கவில்லை என மகிந்த அமரவீர தெளிவாக தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என்று சொல்லி, இரா.சம்பந்தன் போன்ற தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது, கொடுத்து வைத்த விடயம் எனவே, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் காலத்தில் ஒன்றுமில்லாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அரசியல் தீர்வுக்கு தயாராக இருப்பதாக சொல்கின்றார்கள்.
வழிகாட்டல் குழுவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான தமிழ் மக்களின் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனும், சுமந்திரனும் இந்த வழிகாட்டல் குழுவில் இருந்தால், வழிகாட்டல் குழுவில் ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இருவரும் சட்டம் தெரிந்தவர்கள், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லக்கூடியவர்கள். ஏன் வழிகாட்டல் குழுவில் எந்த விடயங்களையும் கேட்காவிடின், வழிகாட்டல் குழுவில் இருவரும் என்ன செய்கின்றீர்கள் என மீண்டும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றும், அந்த பேச்சுவார்த்தையில் பேசப்படும் விடயங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டது.
ஆனால், அரசாங்கத்துடன் பேசி என்னென்ன விடயங்கள் அரசியல் சாசனத்தில் வர வேண்டுமென்ற விடயங்கள் வெளிவந்திருக்க வேண்டும்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏமாற்ற கொழும்பு முயன்றால், அரசை முடக்கும் போராட்டம் என்றால், இதுவரையில் அரசாங்கம் ஏமாற்றவில்லை என தெரிவிக்கின்றார். சுமந்திரன் வடகிழக்கு இணைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கின்றார்.
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைக்கப்படமாட்டாது என கூறுவது அனைத்தும் பொய்யானதா? இதுவரையில் நீங்கள் ஏமாற்றப்படவில்லையா? ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதம் கிடைக்கவில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் சந்திக்க வேண்டுமாயின் ஏற்புடைய ஒரு நாளில் சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
உண்மையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்ன விடயங்களைச் சொல்ல வருகின்றார்.
ஆளும் கட்சியில் உள்ள பெரும்பான்மையான அமைச்சர்கள் ஒற்றையாட்சியினை மாற்ற முடியாது.
வடகிழக்கு இணைப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது. என கூறுவதன் பின்னர், வழிகாட்டல் குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக இருவர் இருக்க வேண்டியதன் தேவை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி, எமது குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் உடனடியாக அரசாங்கத்துடன் பேசிய பின்னர் வழிகாட்டல் குழுவில் இணைவதைப் பற்றி யோசிக்கலாம்.
வுழிகாட்டல் குழுவில் இருந்து அனைத்தும் மறுதலிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டல் குழுவில் இணைவதன் நோக்கம் என்ன? வழிகாட்டல் குழுவின் ஊடாக வடகிழக்கு இணைப்பினைச் சாதிக்க முடியுமாயின் ஏன் இதுவரை அந்த விடயம் பேசப்படவில்லை.
அத்துடன் 40 கூட்டங்கள் நடைபெற்றதாக கூறப்பட்ட போதிலும் ஏன் இந்த விடயங்கள் பேசப்படவில்லை. கடந்த மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடுவதாக கூறியிருந்த போதிலும், அந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இடைக்கால அறிக்கையின்றியே, விவாதம் நடைபெறப் போகின்றதா? பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனூடாக விவாதம் நடைபெறப் போகின்றதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
விவாதம் 6 உப குழுக்களின் அறிக்கை மீதானதா? அல்லது இடைக்கால அறிக்கை வெளியிடப்படப் போகின்றதா? வடகிழக்கு இணைப்பு, பௌத்தத்திற்கு முதலிடம், ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயங்களை வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விவாதத்திற்கு போவதா? ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுத்தவரையில் அவ்வாறு போவதாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வழிகாட்டல் குழுவில் இருந்து விலகி அரசுடன் திடமான பேச்சுவார்த்தையினை நடாத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை கோரவிடின், மறுதலித்த அரசாங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதாகவே இருக்கும்.
இவ்வாறு மறுதலிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டல் குழுவில் இருப்பது அரசாங்கத்தினைப் பாதுகாப்பதற்கா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
மேலும் அரசைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே, வழிகாட்டல் குழுவில் இருந்து வெளியேறி அரசாங்கத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டு என அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!

இறைவன் ஆசீர்வதிக்கட்டும்!


 இது எமது ஜனாதிபதியின்முகநூல்   பக்கத்தின்  இன்று பதிவேற்றப்பட்ட 
ஒரு படம் இந்தப் படத்திற்கு  பலபேர் கருத்து எழுதி இருந்தார்கள் அதில் ஒரு பௌத்த துறவியின் கருத்தைப் பாருங்கள்.
இந்தப் படத்துக்கு இப்படி கருத்து எழுதிய மத போதகர் புதிய அரசியியல் 
யாப்புக்கு என்ன எழுதுவார்.நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள் 


உத்தேச அரசியல் அமைப்புக்குத் தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவதென்பது சிறந்த விடயம்

உத்தேச அரசியல் அமைப்புக்குத் தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு 
வழங்குவதென்பது சிறந்த விடயம் 5000 விளையாட்டு ஆசிரியர்கள்

                                      5000 விளையாட்டு ஆசிரியர்கள்

A H 1N 1 முதல் வைரஸ் நோயாளி இலங்கையில்


A H 1N 1 முதல் வைரஸ் நோயாளி இலங்கையில்