மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,எவ்வளவு இலகுவாக கவிஞர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.ஆனால் மனிதர்கள்தான் தங்களால் முடியக்கூடிய இலகுவான எந்த
உதவிகளையும், வேலைகளையும் அடுத்தவர்களுக்குச் செய்ய நினைப்பதுமில்லை,அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை.காரணம் தேவைகள்
அதிகரித்து,வருமானத்தைத் தேடி ஆலாவாகப் பறப்பதிலே அவன் வாழ்நாள் முடிந்துவிடுகிறது.
அப்புறம்,எப்படி, அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்பட நேரம் இருக்கப்போகிறது.அப்படியானால் மனிதன் எப்போது தெய்வமாகின்றான்,.தனது தேவைகளைக் .
குறைத்து,விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற மனச் சாந்தி கிடைக்கும் வரை,மனிதன் என்பவன்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்...
ஆ... ஆ...ஆ...
ஒஹோ ..ஹோ...
இந்தப் பாடலை இசைவடிவமாக இங்கே கேட்கலாம்.ஸ்ரீனிவாசின் குரலில்.
கண்ணதாசன் ,விஸ்வநாதன், ஸ்ரீநிவாஸ் இவர்களின் கூட்டணியில்
சுமைதாங்கி என்ற படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.மனித மனங்களை வளம்படுத்தும் பாடல் வரிகள்,மனதைத் தொட்டுச் செல்லும் M.S. விஸ்வநாதன் இராமா மூர்த்தி இசை.மந்தகாசமான மனதை மயக்கும் P.B. ஸ்ரீனிவாசின் குரல்,மொத்தத்தில் இன்னிசை மழை.நீங்களும் கேட்டுப் பார்த்து ரசியுங்கள்
இங்கு பாடுபவர் சுரேந்தர்.