வெள்ளி, 4 செப்டம்பர், 2009

தினசரி ஹோரை
நல்லவரோ கெட்டவரோ தாங்கள் செய்யும் காரியம்,அல்லது ஆரம்பிக்கும் செயல் நல்ல முடிவைத் தரவேண்டும்,நன்றாக முடிய வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.இது மனிதர்களின் சுபாவம்.இது தொன்று தொட்டு நடை முறையில் உள்ள ஒரு நடவடிக்கை.இதையே ஜோதிடத்தில் சுப வேளையில் காரியங்களை ஆரம்பித்தல் .இதை பல முறைகளில் வகுத்துக் காட்டியுள்ளார்கள்.நல்ல கிழமைகளில் (திங்கள், புதன், வெள்ளி,) காரியங்களைத் தொடங்குதல். அட்டமி, நவமி, அமாவாசைகளை தவிர்த்தல். ஆராய்ந்து அதன்படி செய்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் கூடுதலானவர்கள் எதையுமே கவனியாமல் ஆரம்பித்து அல்லல் படுகிறார்கள். காரணம் இவையெல்லாம் மூட நம்பிக்கை என்ற மேம்போக்கான எண்ணம், அல்லது எப்படி இவைகளை அறிந்து கொள்வது என்ற தெரியாத்தனம். சோம்பல் இவைகள் தான் இதற்கு அடிப்படை. மற்றவைகள் யாவும் இரண்டாம் பட்சம்.பல வகையான சுப நேரங்களை அறிவதற்கு ஜோதிடத்தில் இருந்தாலும் இலகுவான ஒருமுறை இந்த தினசரி சுபகோரை இதில் எந்த விதமான மந்திரமும், மாயமும் இல்லை .நேரத்தையும் கிழமையும் அடிப்படையாகவைத்து கணிப்பிடுவது. சுப கிரகங்களான சுக்கிரன், புதன், குரு,சந்திரன் ஹோரைகளில் எது செய்தாலும் நன்மை அளிக்கும் என்று சோதிட நூல்களில் விளக்கப்பட்டுள்ளது

ஒரு நகைச் சுவைக் கதை ஓன்று இதற்கு ஏற்றால் போல.மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒரு சிவன் கோயில் அதில் பக்தர்கள் சென்று வழிபட்டு தங்கள் தேவைகளை இறைவனிடம் வேண்டி, அப்படி அது நடந்தால் இறைவனுக்கு நான் என்னசெய்ய நினைத்திருப்பதாகவும் வேண்டி வணங்கி செல்வார்கள்.இது இந்து மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ள ஓன்று . அன்றும் வழைமைபோல் மக்கள் தங்கள் வேண்டுதல்களை இறைவனிடம் வைத்தார்கள், வேண்டுதல் நிறைவேரியவர்கள் அதற்குரிய நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொண்டு சென்றார்கள். இப்போது நமது கதையின் நாயகன் கோயிலுக்கு வந்தார் "இறைவா, நான் பெரிய கஷ்டத்தில் இருக்கின்றேன் இதிலிருந்து மீளவேண்டும் என்றால் எனக்கு நாளை குலுக்கப் போகும் பெரிய தொகை அதிர்ஷ்ட இலாபச் சீட்டு எனக்கே கிடைப்பதற்கு அருள்புரிய வேண்டும் .எனக்கு கிடைத்தால் இந்தக் கோயிலுக்கு நான் பெரிய கட்டிடம் ஓன்று கட்டித்தருவேன், கிடைக்க அருள் செய்யாவிட்டல் எனது ஒரு கரத்தை உன் முன்னால் வெட்டி எறிவேன் என்று சபதம் செய்துவிட்டுச் சென்று விட்டான்.அதிர்ச்டலாபச் சீட்டு குலுக்கும் நாளும் வந்தது குலுக்கப் பட்டது பரிசும் வெல்லப்பட்டது. நமது கதநாயகன் பெரிய கத்தியுடன் கோயிலில் இறைவன் முன் ஆஜரானான். இறைவா! என்னை ஏமாற்றி விட்டாய் நான் கேட்டதை நீ தரவில்லை அனால் நான் சொன்னதை செய்கிறேன் என்று ஒரு கரத்தை வெட்டி எறிந்துவிட்டு, இறைவனிடம் மீண்டும் சொன்னான் "அடுத்த சீட்டுளிப்பில் எனக்கு பரிசு கிடைக்கவில்லை என்றால் எனது அடுத்த கரத்தையும் வெட்டி விடுவேன்" என்று பயங்கர சபதம் செய்துவிட்டு சென்றான்.

சீட்டு குலுக்கும் நாளும் வந்தது, அதிர்ஷ்டம் பார்க்கப் பட்டது. நமது கதையின் நாயகன் கையில் கத்தியுடன் கோயிலை நோக்கி புறப்பட்டார். இதை இறைவனும் அன்னை பராசக்தியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வழைமைபோல இறைவனிடம்" என்னை ஏமாற்றி விட்டாயே இறைவா! இன்று நான் எனது மறு கரத்தையும் உனக்காக தறிக்கப் போகிறேன்" என்று அழுதான். இவனது நிலையைப் பார்த்த அன்னை "சுவாமி தங்கள் மீது இவ்வளவு பக்தி வைத்துள்ள இவனை நீங்கள் இரட்சிக்கக்கூடாத தயவு கூர்ந்து கருணை செய்யுங்கள்" என்றார் இறைவன் இரன்குவதாக தெரியவில்லை.மீண்டும் அன்னை பராசக்தி, தாய் அல்லவா இறைவனை நோக்கி "நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு விடை கொடுங்கள் நான் உதவி செய்கிறேன்" என்றார். இறைவன் பராசக்தியைப் பார்த்துச் சொன்னார் " அருள் செய்யலாம்தான், ஆனால் அதற்கு உரிய முயற்சிகள் அவனிடம் இல்லையே " இதை விட இன்னும் என்ன முயற்சி அவன் செய்ய வேண்டும்" என்றுபராசக்தி பரமசிவனைப் பார்த்துக் கேட்டார்கள். முதலில் அவன் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வாங்கட்டும், பின்பு அவனுக்கு அதிர்ஷ்டம் வழங்குவதைப்பற்றி சிந்திப்போம் என்றாராம்.
எப்படி இருக்கிறது நம்மவர்களின் வேண்டுதல்கள். எதையும் சரிவரச் செய்யாமல் இக்கட்டில் மாட்டிவிடுவதில் வல்லவர்கள்.இதைப்போல்தான் எதையும் சரியாகச் செய்யாமல் ஜோதிடத்தையும், இறை வணக்கத்தையும் குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

விசயத்திற்கு வருவோம் எந்த நாளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்பதை கவனித்து விட்டு, அட்டவணைக்கு செல்வோம்

சூரிய ஹோரை :
உத்தியோகம்,வியாபாரம் சம்பந்தமாக ஒருவரின் உதவிகளை பெறவும், பெரிய தொழில் அதிபர்களை, பெரிய உத்தியோகஸ்தர்களை சந்திப்பதற்கும், சொத்து சம்பந்தமான பதிவுகள் செய்வதற்கும் இது உகந்த நேரம்.

சந்திர ஹோரை:
வியாபாரம், பெண்கள்,பிரயாணம் இவைகளைப் பற்றி பேசவும் காண்பதற்கும் இந்த ஹோரை ஏற்றது.தேய்பிறை சந்திரனனால் தவிர்ப்பது நலம்

செவ்வாய் ஹோரை:
மனதில் உள்ளவற்றை மறைமுகமாக வைத்திருத்தல் நன்மையளிக்கும்.இவ்வோரையில் எதையும் செய்யாமல் விடுவது நலம் .

புத ஹோரை:
எல்லாவித எழுத்து சம்பந்தமான வேலைகளுக்கு,ஆரம்பிக்க தொடர்புகளை ஏற்ப்படுத்த, அறிவிக்க (புளொக்கரை பதிவேற்ற ) சட்டத்தரணிகளை சந்திக்க நல்ல ஹோரை இது .

குரு ஹோரை :
எல்லா வகையான செய்கைகளுக்கும் ஏற்றது. கடன் கொடுப்பவர்களை சந்திக்க,கடன்களை பெறுவதற்கு புதிதாக எதையாவது தொடங்க,ஆடை ஆபரணங்கள் வாங்க, தெரிவு செய்ய ,காரியங்கள் தடையின்றி நடக்க

சுக்கிர ஹோரை :
சகல விதமான நல்ல வேலைகளுக்கும் ,பெண்களுடன் பேச, பார்க்க பரிதவிக்க,அவர்கள் உறவை ஆரம்பிக்க, விருந்தோம்பல், மருந்துண்ண,கடன் கொடுத்தவர்களிடம் வசூல் செய்ய,வாகனம் வாங்க

சனி ஹோரை :
தோட்டங்களைப் பற்றி பேசவும் , நடவடிக்கை எடுக்கவும் மட்டும் சிறந்தது . மற்ற எதற்கும் இது ஏற்றதல்ல


இவைகளை எப்படி கண்டு பிடிக்கலாம் என்று ஜோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம் மேலே உள்ள அட்டவனையை பாருங்கள் எல்லாம் சரியாக தயாரிக்கப் பட்டுள்ளது .கிழமையை தெரிவு செய்யுங்கள் நேரத்தை பாருங்கள். உங்கள் மணிக்கூட்டை பார்க்காதீர்கள் அட்டவணையில் உள்ள நேரத்தை பாருங்கள் இப்போது விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். விளங்கா விட்டால் பின்னூட்டம் இடுங்கள் தனியாக விளக்கம் வைக்கலாம்