அநித்ய சுகம்
கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்,
விண்ட நாகத்தின் வாயினில் வெருண்ட வன் தேரை,
மண்டு தேரையின் வாயினில் அகப்படு தும்பி,
வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.
ஒரு கருடன் தன் வாயில் நாகத்தை இரையாகக் கொண்டு பறந்தது. அந்த நாகத்தின் வாயில் தவளையும், தவளையின் வாயில் தும்பியும் இருந்தன. தும்பிவண்டு நாவில் விழுந்த ஒருதுளி தேனை ருசித்து அனுபவித்தது. இதைப் போன்றதே (மரணதேவனின் வாயில் இருக்கும்) மனிதர் அனுபவிக்கும் இன்பம்.
(ஆகவே அற்பமான உலக இன்பத்தை விடுத்து நிலையான பேரின்பத்தை தேடு.)