ஞாயிறு, 14 மார்ச், 2010

இலவச எண் கணித ஜோதிடம்.








இலவச எண் கணித ஜோதிடம்,உங்கள் பெயர் அதிர்ஷ்டமானதா?,நமது வீட்டின் இலக்கம்
அதிர்ஷ்டமானதா?,வியாபாரப் பெயர்அதிர்ஷ்டமானதா,?பிறந்த திகதி அதிர்ஷ்டமானதா,?பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க,திருமணம் முடிக்க இருப்பவரின் திகதி,முடிக்கப் போறவரின் திகதியுடன்,ஒத்து வருகிறதா? இப்படி பல அதிர்ஷ்ட விஞ்ஞான கணிப்புகள்,நீங்களே கணிக்கலாம். இந்த இணைய தளத்திலுள்ள, இந்த மென் பொருளில் கொட்டிக்கிடக்கிறது. யாருக்குத்தான் ஆசையில்லை எதுவும் அதிர்ஷ்டமானதா? என்பதை அறிந்து கொள்ள,இங்கே போய்
இலவசமாகத் தரவிறக்கி உங்கள் கணனியில் சேமித்து வைத்துப் பயனடையுங்கள்.

இணையத் தளத்திற்குப் போக முதல் உங்கள்,எண்ணக் கருத்தை எழுதிவிட்டுப் போங்க,
அடுத்த ஜோதிடப் பதிவு,ஆயத்தப் படுத்தத்தான்.  






அன்புடன்,!.......

படம் கண்ணுக்கு,பாடல் மனதுக்கு,!




பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்!
பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ 
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றது நீயே!   

                                   
                                         
                                         


இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் 
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் -பெருக்க 
அழைத்தாலும் போகேன் அரனே,என் தேகம் 
இளைத்தாலும் போகேன் இனி.






உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்  உயர் பொன்னெனவே 
ஒளியிட்டதாள் இரண்டுள்ளே இருத்துவதுண்மை யென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலேனே! 


                            
      



அழுதால் பயனென்ன,நொந்தால் பயனென்ன ஆய்வதில்லை 
தொழுதால் பயனென்ன,நின்னை ஒருவர் சுடவுரைத்த 
பழுதால்பயனென்ன,நன்மையையும் தீமையும் பங்கயத்தோன் 
எழுதாப் படி வருமோ?சலியாதிரு என் ஏழை நெஞ்சே!






வெட்ட வெளியான்  வெளிக்குந் தெரியாது
கட்டளையும் கைப் பணமும் காணாதே -இட்டமுடன் 
பற்றென்றால் பற்றாது: பாவியே நெஞ்சில் அவன் 
இற்றனவே வைத்த இனிப்பு.  



பாடல்கள்,பட்டம் எதுவும் பெறாத,பட்டினத்தார், எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் என நினைக்கிறேன்.படங்கள் மேலை நாடுதான்
உங்கள் எண்ணங்களை எழுத்தில் எழுதிடுங்கள் பின்னூட்டமாக!



அன்புடன்.!....