ஞாயிறு, 14 மார்ச், 2010

படம் கண்ணுக்கு,பாடல் மனதுக்கு,!




பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றேன் அறிவில்லேன்!
பாரோ நீரோ தீயோ வளியோ படர்வானோ 
ஆரோ நானென்று ஆய்வுறுகின்றது நீயே!   

                                   
                                         
                                         


இருக்கும் இடம் தேடி என்பசிக்கே அன்னம் 
உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் -பெருக்க 
அழைத்தாலும் போகேன் அரனே,என் தேகம் 
இளைத்தாலும் போகேன் இனி.






உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்  உயர் பொன்னெனவே 
ஒளியிட்டதாள் இரண்டுள்ளே இருத்துவதுண்மை யென்று
வெளியிட்டு அடைத்து வைத்தேன் இனிமேல் ஒன்றும் வேண்டிலேனே! 


                            
      



அழுதால் பயனென்ன,நொந்தால் பயனென்ன ஆய்வதில்லை 
தொழுதால் பயனென்ன,நின்னை ஒருவர் சுடவுரைத்த 
பழுதால்பயனென்ன,நன்மையையும் தீமையும் பங்கயத்தோன் 
எழுதாப் படி வருமோ?சலியாதிரு என் ஏழை நெஞ்சே!






வெட்ட வெளியான்  வெளிக்குந் தெரியாது
கட்டளையும் கைப் பணமும் காணாதே -இட்டமுடன் 
பற்றென்றால் பற்றாது: பாவியே நெஞ்சில் அவன் 
இற்றனவே வைத்த இனிப்பு.  



பாடல்கள்,பட்டம் எதுவும் பெறாத,பட்டினத்தார், எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் என நினைக்கிறேன்.படங்கள் மேலை நாடுதான்
உங்கள் எண்ணங்களை எழுத்தில் எழுதிடுங்கள் பின்னூட்டமாக!



அன்புடன்.!....

3 கருத்துகள்:

  1. உருத்திரா, பாடலையும் படத்தையும் இணைத்தது அருமை.

    பட்டினத்தார் தமிழின் மிகச் சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர்.

    -தோழன் மபா

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்தும்,வரவும்,என்னை மேலும் மெருகூட்டும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. கண்ணை விட்டு இப் படங்கள் போயினும்
    மனதை விட்டு என்றும்போகா- இப்பாடல்கள்;
    பட்டனதார் - தமிழ்க் கொடை.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள