புதன், 21 டிசம்பர், 2016

மக்கள் விரும்பாத இல்லத்தைவலிந்து திணிப்பது முறையல்ல!

மக்கள் விரும்பாத இல்லத்தைவலிந்து திணிப்பது முறையல்ல!

தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஆள நினைக்கவில்லை - ஞானசார

தமிழ், முஸ்லிம் மக்களை அடக்கி ஆள நினைக்கவில்லை - ஞானசார

மட்டக்களப்பில் வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் - பின்னணி என்ன?

இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கிய கருவிகளாக செயற்பட்டு வருகின்றவர்கள் பொதுபல சேனா பிக்குகள் என்பதும், அவர்களுக்கு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் அறிந்த விடயமே.
இந்த இனவாதப் பிரச்சினை ஆரம்பமானது மட்டக்களப்பு மங்களராமய விகாரையும் அதன் விகாராதிபதி சுமனரத்ண தேரர் முலமாகவே என்றே தெரிவிக்கப்பட்டன.
குறித்த விகாரையின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொருட்டும் மட்டக்களப்பின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் வகையிலும் புத்த சாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் சுமனரத்ண தேரர் உட்பட பிக்குகளுடன் அமைச்சர் விகாரைக்கு உள்ளே கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடல் சந்திப்பிற்கு தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தமிழ் பேசும் சமூகத்திடையே பாரிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஓர் பிரச்சினை தீர்வு பெற வேண்டுமாயின் மக்களுக்கு அந்தப்பிரச்சினை மற்றும் அதன் அடித்தளம் போன்றன முறையாக அறியப்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது அந்த நிலை இன்று மறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை அழிக்க வேண்டும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இலங்கையில் பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்ற வகையில் பகிரங்கமாக இனவாதத்தினை வெளிப்படுத்தியவர்களே பொதுபல சேனா உட்பட பௌத்தம் காக்கும் படைகள் என்பது சுட்டிக்காட்டப்படத் தக்கது.

மட்டக்களப்பில் வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் - பின்னணி என்ன?


அதேபோல அண்மையில் மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்தி கலவர பூமியாக மாற்ற முயன்ற பொதுபலசேனாவினரை பிரயத்தினத்திற்கு மத்தியில் பொலிஸார் தடுத்தனர்.
அவ்வாறானவர்கள் நீதித்துறை அமைச்சருடன் இப்போது மட்டக்களப்பிற்கு சென்றுள்ளதுடன் தமிழ்பேசுகின்றவர்களை புறக்கணித்துவிட்டு விஷேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஒரு நாட்டின் நீதித்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் தமது பக்கச்சார்பை வெளிப்படையாக காட்டிய இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழ் மக்களிடையேயும் தமிழ் பேசும் ஊடகவியலாளரிடையேயும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
விகாரைக்குள் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை வெளியேற்றியும் அதன் பின்னர் விகாரைக்கு வெளியே இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலுக்கு மட்டும் அனுமதிக்கவும் பட்டுள்ளனர்.
இதன் காரணமாக உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் இடம் பெறுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரச்சினைகளின் ஆரம்பம் யார் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு வாழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது..

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,
உடல்வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ] பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.
இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் .
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
.
.
.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
.
.
.குமரன் ஆலயம் 

கடும்போக்குக்கு சட்டத்தின் மூலம் தீர்வு

கடும்போக்குக்கு சட்டத்தின் மூலம் தீர்வு

இலங்கையில் அறிமுகமாகிறது!....................இலங்கையில் அறிமுகமாகிறது!....................

தந்ததை எடுப்போம் என்ற மனப்பாங்கு !


தந்ததை எடுப்போம் என்ற மனப்பாங்கு !


அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது | Virakesari.lk

அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது | Virakesari.lk: அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதிஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது என ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
ரோஹன விஜித முனி என்ற ஜோதிடர் ஒருவர் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி மாதம் 26ஆம் திகதி இறந்து விடுவதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
ஆனாலும் அவர் கூறுவதில் எந்த விதமான சோதிடமும் இல்லை. இவ்வாறான வதந்தியை பரப்புவதன் மூலம் ஜனாதிபதியை கொலை செய்து விடுவதற்கான ஓர் மறை முகமான திட்டமே தீட்டப்பட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் சோதிட நம்பிக்கையினை வெளிப்படுத்துவது போல செயற்பட்டு, அதன் மூலம் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு பின்னணியில் செயற்படுபவர்களை கண்டு பிடிக்க வேண்டும் எனவும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இது மக்களிடையே விமர்சனங்களை கொண்டு செல்வதற்கான செயற்பாடு அல்ல. இப்போது இருக்கும் வதந்திகளை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதியை கொன்று விட்டால் நாளை யாரிடம் இதனைப் பற்றி பேசுவதால் எந்த விதமான பயனும் இல்லை.
ஜனாதிபதி இது தொடர்பில் என்னுடன் ஆலாசிக்க வில்லை. ஆனாலும் அவர் கேட்கும் முன்பாக செயற்பட வேண்டும் என்பதற்காகவே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் இந்த விடயத்தினை அறியப்படுத்தியுள்ளேன்.
இது நினைப்பதை விடவும் மிகவும் ஆபத்தான மற்றும் பாரதூரமான விடயம். ஜனாதிபதி இறந்து விடுவதாக செய்தி பரப்புவதோடு அதனை நிறைவேற்ற திட்டமிடும் செயற்பாடு ஒன்றே இப்போது நடைபெற்று கொண்டு வருகின்றது.
மேலும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிமல் போபகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamil win

தாயை நினை தொலையும் வினை.!!

தாயை நினை தொலையும் வினை.!!

அன்னை சாரதா தேவியின் 150 ஆண்டு நினைவுச் சிறப்பு மலருக்கு  2003ஆம் ஆண்டு கவிஞர் வாலி எழுதியது.இன்று 163ஆம் ஆண்டு நினைவு தினம்
உள்ளமே !
உனக்கொரு வார்த்தை !!
செவிமடு!
சீர் படும் வாழ்க்கை!!

"ஜனனி என,
ஜகம் வாழ்த்த
ஜயராம்பாடியில்
ஜனித்தவளின் நாமத்தை ஐபி:
அடிக்கடி அலைபாய்தலை
அறவே விடுத்து
அடங்கிடும் அகமெனும் கபி !

இசைமிகு  வேதியர்
இராமச் சந்திர முகர்ஜிக்கும்;
சீலம் மிகு
சியாமா சுந்தரி தேவிக்கும் ;

வையம் உய்ய
வையத்தார் வெய்ய வினை கொய்ய
வந்து பிறந்த
வண்ணப் பூவிழிகள் திறந்த.

சீமந்த புத்திரி ஸ்ரீ சாரதா தேவி;
நல்ல இல்லாளாய்;
உலக இன்பங்களில் பற்றுதல் இல்லாளாய்;
பிறங்கினாள் இராம கிருஷ்ணரை மேவி!

ஆக்கைக்கும்;
ஆன்மாவிற்கும்:
வராசக்தியை
வரவழைத்துத் தரும்
பரா சக்தியை
பார்த்தார்.....

குரு தேவர் -தான்
கொண்டவளிடம்;
ஓம்பும்
ஒழுக்கத்தால் -தன்
உயிரை உணர்வை
உண்டவளிடம்!

உள்ளமே! ஒன்று
உரைப்பேன் கேள்!
அவ்வன்னைதான்-உன்
ஆன்மாவிற்கு
அணுக்கமான கேள்!


அம்புலி வாழ்
அனைவர்க்கும்
அவள்தான்

அவரவர்....
அனை  அனைய
ஆணை;
ஓவாது-அவனை
ஒவ்வொரு நொடியும்
நினை;

நினைக்க
நினைக்க
நீங்கும்
நெடு நாளைய வினை!

அவள் கருங்கண் -நீல
ஆகாயம் போன்ற இருங்கண்;
வேண்டுவார்க்கு
வேண்டியதைத் தருங்கண்;
தண்ணளி என்னும்
தன் புனல் வெள்ளம்
சதா சுரக்கும் அருங்கண்;

கை  தொழுவார்
கவலைகளைக்
 களை கண்;அவளது
கண்ணலால் நமக்கேது
காளை கண்?

பாவம் எனும்
பெரு விருட்சத்தின் ....
வேரதை
விழுத்த வல்லது -அன்னை
சாரதை
சேவடிக் கமலம்;

அதை
ஆசித்து நிற்பாரின்
அகமும் புறமும்
அழுக்கற்று ஆகும் அமலம்!
Image result