இலங்கையில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கிய கருவிகளாக செயற்பட்டு வருகின்றவர்கள் பொதுபல சேனா பிக்குகள் என்பதும், அவர்களுக்கு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் அறிந்த விடயமே.
இந்த இனவாதப் பிரச்சினை ஆரம்பமானது மட்டக்களப்பு மங்களராமய விகாரையும் அதன் விகாராதிபதி சுமனரத்ண தேரர் முலமாகவே என்றே தெரிவிக்கப்பட்டன.
குறித்த விகாரையின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் பொருட்டும் மட்டக்களப்பின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் வகையிலும் புத்த சாசன மற்றும் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் மற்றும் சுமனரத்ண தேரர் உட்பட பிக்குகளுடன் அமைச்சர் விகாரைக்கு உள்ளே கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
குறித்த கலந்துரையாடல் சந்திப்பிற்கு தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தமிழ் பேசும் சமூகத்திடையே பாரிய சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஓர் பிரச்சினை தீர்வு பெற வேண்டுமாயின் மக்களுக்கு அந்தப்பிரச்சினை மற்றும் அதன் அடித்தளம் போன்றன முறையாக அறியப்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருக்கின்றது அந்த நிலை இன்று மறுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை அழிக்க வேண்டும், முஸ்லிம்கள் தீவிரவாதிகள், இலங்கையில் பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்ற வகையில் பகிரங்கமாக இனவாதத்தினை வெளிப்படுத்தியவர்களே பொதுபல சேனா உட்பட பௌத்தம் காக்கும் படைகள் என்பது சுட்டிக்காட்டப்படத் தக்கது.
மட்டக்களப்பில் வெளியேற்றப்பட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் - பின்னணி என்ன?
அதேபோல அண்மையில் மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்தி கலவர பூமியாக மாற்ற முயன்ற பொதுபலசேனாவினரை பிரயத்தினத்திற்கு மத்தியில் பொலிஸார் தடுத்தனர்.
அவ்வாறானவர்கள் நீதித்துறை அமைச்சருடன் இப்போது மட்டக்களப்பிற்கு சென்றுள்ளதுடன் தமிழ்பேசுகின்றவர்களை புறக்கணித்துவிட்டு விஷேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் ஒரு நாட்டின் நீதித்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் தமது பக்கச்சார்பை வெளிப்படையாக காட்டிய இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழ் மக்களிடையேயும் தமிழ் பேசும் ஊடகவியலாளரிடையேயும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
விகாரைக்குள் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை வெளியேற்றியும் அதன் பின்னர் விகாரைக்கு வெளியே இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலுக்கு மட்டும் அனுமதிக்கவும் பட்டுள்ளனர்.
இதன் காரணமாக உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் இடம் பெறுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரச்சினைகளின் ஆரம்பம் யார் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு வாழ் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள