ஞாயிறு, 6 நவம்பர், 2016

Video 1




"ஊஞ்சல் ஆடி நம் உள்ளத்தை ஆட்டிடும் மழலை."

நீங்களும் பாருங்க மகிழ்ந்திடுங்க










மனதுக்குள் மதம் சாத்தியம் மதத்திற்குள் மனம் அசாத்தியம் ·

மனதுக்குள் மதம் சாத்தியம் மதத்திற்குள் மனம் அசாத்தியம் · 
மத நல்லிணக்கம்



இஸ்லாமியர்கள் என்றாலே ,
இதர மதத்தினர்
கொஞ்சம் விலகியே நிற்கிறார்கள் ..!
இஸ்லாமியர்களும் கூட , 
கொஞ்சம் விலகியேதான் செல்கிறார்கள் ..!
ஆனால் .. இருபது , முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் , இப்படி இருந்ததில்லை .
இந்துக்களும் , முஸ்லிம்களும் , கிறிஸ்தவர்களும் ...
அண்ணன் – தம்பியாக ..மாமன் - மச்சானாக ... ஒரு வீட்டுப் பிள்ளைகள் போல உறவாடி களித்திருந்த காலம் ஒன்று இருந்தது .
இடையில் ஏற்பட்ட இந்த மன மாற்றத்திற்கு , சில பல காரணங்கள் ......
அதை விடுங்கள்.
திருப்பதி கோவிலுக்கு பலரும் போய் வந்திருப்போம் .
அந்த திருப்பதி திருமலை கோவிலில் , ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு , ஒரு விசேஷ பூஜை நடத்தப்படுகிறதாம் !
அந்த பூஜையில் ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு , ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு மலர் என 108 பூக்கள் , ஏழுமலையானின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படுமாம் ..!
அந்த 108 பூக்களும் , தங்கத் தாமரைப் பூக்கள் ... நன்கொடையாக வழங்கப்பட்ட பூக்களாம் ..!
ஒவ்வொரு தங்கப் பூவும் 23 கிராம் (கிட்டத்தட்ட மூன்று சவரன்) ...
108 பூக்களின் மொத்த எடை சுமாராக இரண்டரை கிலோ .
இந்த 108 தங்கப் பூக்களையும் நன்கொடையாக கொடுத்தவர் ....
ஒரு இஸ்லாமியராம் ..!
ஆம் ..
அந்த இஸ்லாமியரின் பெயர் ஷேக் மஸ்தான் !
சரி .. அவர் எதற்காக இந்த நன்கொடையை திருப்பதி கோவிலுக்கு கொடுக்க வேண்டும் ..?
அதை அந்த ஷேக் மஸ்தானே சொல்லி இருக்கிறார் , இப்படி :
“என் பெயர் ஷேக் மஸ்தான். நான் குண்டூரைச் சேர்ந்த சிறிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தினர் தினமும் காலையில் எங்கள் வீட்டில் உள்ள ஏழுமலையான் படத்தின் முன்பு ஒன்றாக கூடி , சுப்ரபாதம் பாடுவோம். பல தலைமுறைகளாக ஒவ்வொரு செவ்வாய் அன்றும் ஏழுமலையான் முன்பு ஸ்ரீனிவாச அஷ்டோத்திரத்தை சொல்லி வருகிறோம் (அஷ்டோத்திரம் என்பது இறைவனின் திருநாமத்தை 108 முறை போற்றுவது).
இதுதவிர, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களை இந்த அஷ்டோத்திரம் கூறும்போது ஒவ்வொன்றாக ஸ்ரீநிவாசனுக்கு அர்பணிப்போம்.
முன்னொரு காலத்தில் எங்கள் முப்பாட்டனார் , இதே போன்ற சேவையை ஏழுமலையானுக்கு செய்ய , தங்கத்தினாலான (சொர்ண புஷ்பம்) காணிக்கையாக தருவதாக வேண்டிக்கொண்டார்கள்.
ஆனால் , அப்போது எங்கள் நிதிநிலைமை ஒத்துழைக்காததால் 108 பூக்களில் ஒரு சில பூக்களை மட்டும்தான் , என் கொள்ளுத் தாத்தாவால் சேர்க்க முடிந்தது.
அவருக்கு பிறகு என் தாத்தா சிறிதளவு பூக்களைச் சேர்த்தார். பின்னர் என் அப்பா தன் காலத்தில் சிறிதளவு பூக்கள் சேர்த்தார். இப்போது நான் என் காலத்தில் அதை நிறைவு செய்திருக்கிறேன்...
ஒரு இஸ்லாமியரான நான் கொடுக்கும் இந்த காணிக்கையை ஏற்றுக் கொள்வீர்களா ..?”
இப்படிக் கேட்டு விட்டு ஷேக் மஸ்தான் , தேவஸ்தான அதிகாரிகளின் முகத்தைப் பார்த்தார்.
தேவஸ்தான அதிகாரிகள் , ஏழுமலையானின் முகத்தைப் பார்த்தார்கள்.
ஷேக் மஸ்தான் தொடர்ந்து சொன்னார் :
“இந்த அன்புக் காணிக்கையை ஏற்றுக்கொண்டால் , எங்கள் தாத்தாவின் ஆன்மா நிச்சயம் சாந்தியடையும் . எங்கள் குடும்பத்தினர் எல்லோரும் சந்தோஷப்படுவோம் ..”
.
ஆழ்ந்து ஆலோசித்தனர் தேவஸ்தான அதிகாரிகள்.... அதன் பின் ஏக மனதாக அந்த 108 தங்கப் பூக்களையும் ஏற்றுக் கொண்டனர் .
.
அப்போது முதல் ( 1984 ஆம் ஆண்டு ) திருமலையில் ஏழுமலையான் சந்நிதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அஷ்டோத்திர பூஜை , ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ... இப்போதும் கூட நடக்கிறது.
.
நடக்கட்டும் ...!
எனக்கு நம்பிக்கை இருக்கிறது..!.
வெகு சீக்கிரத்திலேயே மலரத்தான் போகிறது ...
இந்துக்களும் , முஸ்லிம்களும் , கிறிஸ்தவர்களும் ...
அண்ணன் – தம்பியாக ..மாமன் - மச்சானாக ...
ஒரு வீட்டுப் பிள்ளைகளாக உறவாடி மகிழும் உன்னத காலம் .
.
( தகவல் : விகடன் )