முத்தங்கள்ஆயிரம்
தந்து –என்
மூச்செல்லாம்
பெரும்
நெருப்பாக்கி
சித்துக்கள் செய்து
காட்டிவிட்டு –தேவ
சுந்தரியே ! ஏன்? மௌனமானாய்?
அத்தான் என்று அழைத்து -என்
அங்கமெல்லாம்
என்னைக்
குளிரவைத்து
பித்தனாகயெனை இங்கு
ஆக்கிவிட்டு-இன்று
பேசாமல்!, ஏன்? மௌனமானாய்?
சிட்டாகப்
பறந்து வந்து-முல்லை
மொட்டாக
மலர்ந்து
என்னை
திண்டாட
வைத்த
மங்கையே –நான்
மண்டாட!, ஏன்? மௌனமானாய்?
செத்தாலும் உன்னுடனே
சாவேன் --யாரும்
எதிர்த்தாலும்
உன்னுடனே
வாழ்வேன்
மதியிழந்து
கதிகலைந்து
அலைகிறேன் –இங்கே
மெய்யாகவே! ஏன்? மௌனமானாய்?
சோகத்தின்
சொந்தமாகிப்
போனேன் -இந்த
ஏகத்தின்
எதிரியாகி
ஏங்கிவிட்டேன்
வாதத்தில்
சாதனை
புரிந்தவளே -இன்று
மொத்தத்தில்! ஏன்? மௌனமானாய்?