ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது


இசை:T.K. இராமமூர்த்தி பாடியவர்கள்:T.M. சௌந்தராஜன் இயற்றியவர்;கண்ணதாசன் படம்;தங்கச் சுரங்கம் ஆண்டு 1969

நித்திரை வருகுதில்லை

                                                                                                                   www.tamil10.com/submit
                                                                                                                                                        

நித்திரை வருகுதில்லை ரதியே -என்
நெஞ்சமும் பொறுக்குதில்லை சகியே
சித்திரம்போலே வந்து சிரித்து-நீ
சீக்கிரம் மறைவதாலே எனக்கு


சுற்றிடும் உலகமெல்லாம் தூசியே-யுனைப்
பார்த்திடும் நேரமெல்லாம் ருசியே
கொட்டிடும் மழையுமெனக்கு இராசியே-ஆட்
கொண்டிடும் பார்வை யுனக்கில்லையே  

இட்டிடு எனக்கொரு ஈ-மெயிலே-யெந்
இதயமெல்லாம் நிறையவேனுமதிலே
கட்டிடும் ஆசை யுனக்கில்லையோ- என்
கடைசிதான் உந்தன் முடிவுரையோ

பட்டென உடைத்துவிடு முடிவை -நான்
பட்டணம் போய் எடுக்கவேணும் உடையை
சட்டென விக்கவேணும் ஒரு வளவை-தாலி
கட்டி வளர்க்கவேணும் நம்ம  உறவை

அமுதே தமிழே

புலமைப் பித்தனின் வரி வண்ணம்,இளைய ராஜாவின் இசைவண்ணம் இவர்களின் குரல் வண்ணம்.சுசிலா,உமா ரமணன் மற்றும் வலம்புரி சோமநாதன்.படம் கோயில் புறா