சனி, 12 அக்டோபர், 2019

எல்பிட்டிய பி. சபை அனைத்து வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுன வெற்றி


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 ஆசனங்களை வென்றுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று (11) காலை  7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
47 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்று இத்தேர்தலில் 53,384 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதோடு, அதில் 75 வீதமானோர் வாக்களித்திருந்தனர்.
அதற்கமைய, 23,372 (56.31%) வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 வட்டார ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதோடு ஏனைய கட்சிகளுக்கு விகிதாசார ரீதியிலான ஆசனங்களையே கிடைத்துள்ளன. 
அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 (24.37%) வாக்குகளைப் பெற்று 07 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 (12.7%) வாக்குகளைப்  பெற்று 03 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 (5.86%) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன