சனி, 5 டிசம்பர், 2009

வல்லாரைக் கஞ்சி- Gordon Ramsay


நாங்க வல்லாரைக் கஞ்சி செய்வது எப்படி என்று சொன்னால் சிலபேருக்கு விளங்காது.இவர்கள் சொன்னால் விளங்கும்

வல்லாரையும் மருத்துவகுணமும்






வல்லாரை (Centella asiatica) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையதாவரமாகும்ஆசியாஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும்


வல்லாரைக்கு மருத்துவ பெயர்கள் பல வழங்கப்படுகிறது அவற்றில்   சரஸ்வதி கீரை, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது.இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள்உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. சரசுவதிக் கீரையென்றும்  அழைக்கின்றனர்

சத்துக்கள்

இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்குதேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்       

மருத்துவ குணங்கள்

  • இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
  • உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
  • தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
  • மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
  • இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
  • சளி குறைய உதவுகிறது.

உண்ணும் முறை

  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
  • காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.
  • இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.
  • இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரைபாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.
  • புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.
  • சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
  • இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார
  • வல்லாரையை காயவைத்து பொடிசெய்து தேநீருடன் கலந்து அல்லது தனியாக சாப்பிட்டுவர ஞாபகமாக மறதி,நீரழிவு போன்றவைகள்  கட்டுக்குள் வரும
  • வல்லாரையை மிக எளிமையாக சாப்பிட,பச்சையாக இலைகளை மட்டும் தெரிவு செய்து,தேவையான அளவு உப்பு,மிளகு, வெங்காயம் சேர்த்து அரைத்து தேசிக்காய்ப் புளியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.