சனி, 1 ஜனவரி, 2011

வெண்பாவைப் பாடியவர் யார்?

இந்த வெண்பாவைப் பாடியவர் யார்?

காளமேகப் புலவரின் நிந்தாஸ்துதி போலிருக்கிறது,என்றும் சிலர் நினைக்கலாம்.

"வாதக்காலாம் தனக்கு,மைத்துனர்க்கு நீரிழிவாம்,
போதப் பெருவயிறாம் புத்திரற்கு --மாதரையில்
வந்த வினை தீர்க்க வகையறியான் வேளூரான்
எந்த வினை தீர்த்தான் இவன்".  

நடனமாடத் தூக்கிய காலைக் கொண்ட சிவபெருமானுக்கு,ஆகாய கங்கையை தன் காலால் பூவுலகுக்கு இறக்கியவரான மகா விஷ்னு மைத்துனராம்,ஞானமே உடலாகக் கொண்ட பெருவயிறுடைய பிள்ளையார் மகனாம்.இவ்வளவு சிறப்புகளையும்,பெருமைகளையும் உடைய வைத்தீஸ்வரன்,இந்தப் பரந்த உலகத்துக்கு 
வந்த வினையைத் தீர்க்க வகையறிய மாட்டானா? அவன் உங்களில் யார் விணையைத்
தீர்த்தான்,சொல்லுங்கள்?.துதிப்போம்.இவைகளை வியப்புக் குறியுடன் வைத்துப் பாருங்கள். 

காளமேகப்புலவரின் நிந்தாஸ் துதியைப்போல் இருந்தாலும்,இதை பாடியவர் காளமேகப் புலவரல்ல.இந்தியா,இலங்கை போன்ற தமிழ் கூறும் நல்லுலகில் பிறந்தவரும் அல்ல. 
இவர் பிறப்பால் கிறிஸ்தவராகப் பிறந்து,பாதிரியாராக இலங்கை இந்தியா நாடுகளுக்கு, 
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பவந்த, பெஸ்கி என்ற கிறிஸ்தவ பாதிரியார்.. 

"வைத்தீஸ்வரன் கோயில் வீதி வழியே ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் போய்க்கொண்டிருந்தார்,சுவாமி புறப்பாடு வந்தது.ஊர்வலத்தில் அவரும் கலந்து கொண்டபோது இரண்டொருவர் முணுமுணுத்துக் கொண்டார்களாம், கிறிஸ்தவர்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது என்று,அப்போதுதான் அவர் இந்த நிந்தாஸ் துதியைப் பாடினாராம்.

 இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தனது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.


                                      (வீரமாமுனிவர்-- நவம்பர் 81680 - பெப்ரவரி 04 1746)     
மேலும் விபரமறிய இங்கே செல்லுங்கள்