ஞாயிறு, 24 மார்ச், 2019

 இன்று என் வாழ்க்கைத்துணையின் பிறந்த நாள்
                      


பூச்சியமாக இருந்த என்னைத் தனிராச்சியத்திற்கு அதிபதியாக்கி
ஆச்சரியப்படவைத்து அழகு பார்த்து ,அதிர வைத்தவள் -தன் 
 இலடசியத்திற்காக  லட்சங்களைத் துணிந்து  துறந்தவள்
மெச்சுமளவுக்கு    வளமுடன்  வாழ்க்கை அமைத்தவள்   


 ..
 கடந்த காலங்களில் சில நேரம் கண்கலங்கி, இதயம் நொறுங்கி நின்ற போது , என் கண்ணீர் துடைத்த முதல் கை அவளுடையது தான் . நல்ல விஷயங்களை பாராட்டவும்,தவறு செய்துவிட்டால், கண்டிக்கவும் ஒரு போதும் தயங்கியதில்லை . இன்றும் நான் துவண்டால் என் தாயைப்போல என்னை தாங்கி நிற்பவள்.
உண்மையில் என்னவள் எனக்கு இறைவனின் அருட்கொடை . நீ நோயின்றி பல்லாண்டு வாழ்க என்று இறைவனை வேண்டி நின்றேன் இந்நாளில்..
சில நேரம் கிண்டலுக்காக நகைச்சுவைக்காக சில பதிவுகள் போட்டதுண்டு, அவ்வளவே. மற்றபடி அவள் மடியிலேயே என் உயிர் பிரியவேண்டும் என்பதே என்றும் என் பிரார்த்தனை.
இறைவா என் பிரார்த்தனையை நிறைவேற்றுவாயாக.
.
தாய்க்குப்பின் தாரம் ..