. இலங்கைச் சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
. இலங்கைச் சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 டிசம்பர், 2016

விஸ்வரூப தரிசனம்...



-- விஸ்வரூப தரிசனம்...
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.
விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)
அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.
அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.
“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.
எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.
எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது மட்டும் உறுதி.


செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-2

அநுரத புரத்திலுள்ள எல்லாளன் சமாதி .

இரண்டு தமிழர்கள் கொலை செய்யப் பட்டதற்கே எல்லாளன் என்ற சிற்றரசன்,தமிழகத்தில் இருந்து படைதிரட்டி  வந்து சண்டையிட்டது 
பழைய வரலாறு. ஆயிரக் கணக்கில் தமிழர்கள்,துடி துடித்துச் சாக 
கொலை செய்யத் தூண்டியவனுடன், சேர்ந்து கைகுலுக்கி, சேர்ந்து  
வாழுங்கள் என்று கடிதம் எழுதியது இன்றைய தமிழகத்தின், 
,சாதனையுடன் கூடிய வரலாறு. என்ன நடந்ததது இன்றையத் 
தமிழருக்கு 
முதலிருந்து  படிக்க.. 
௨.அதிகாரம்
தேவப்பிரிய தீசன் அரசனானது முதல்; எல்லாளன் வெற்றிபரியந்தம்.

முத்த சிவராஜனுக்குப்பின்,அதாவது கி.பூ. 307ம் வருசத்தில் அவன் மகன் 
(Devananpiatissa ) தேவப்பிரியன் என்னும் பட்டப்பெயருடைய தீசன் அரசனானான்.
இவன் சிம்மாசன மேறியவுடன்,பூமியில் புதைந்து கிடந்த பொன், வெள்ளி,
இரத்தினாதிகள் வெளி யெழும்பின வென்றும், மூங்கில்கள் தாமே வளர்ந்து 
புஷ்பங்கள், மிருகங்கள், பலவர்ணப் பஷிகள் முதலியவற்றை ஈன்றன 
வென்றும் சிங்கள் புராணம் கூறும்.இது மங்கள வருணனையன்றி,
உண்மையாய் நடந்ததன்று.

சனி, 29 ஜனவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-1



விஜயவமிசகாலம்.
க. அதிகாரம்.
இதன் முற்பகுதியைப் படிப்பதற்கு இங்கு செல்லவும்.
(விஜயராஜன் வந்தது முதல்; முத்த சிவ ராஜன் ஆண்டது பரியந்தம்)
 இச் சரித்திரத்தை செவ்வொழுக்காய் நடத்தி முடிக்கவேண்டி,இலங்கைக்கு
(wijayo ) விஜயராஜன் வந்தமையை, ஆதி சம்பவமாகக் கொண்டு சொல்லுவாம்.

இவ்வரசனுடைய பிறப்பை ஆராயுமிடத்து,தந்தை வழி,வங்க நாட்டு அரச
குலமென்றும், தாய் வழி,கலிங்க நாட்டு அரச பத்தினி வமிச மென்றும்
தெரிய வருகிறது.இவனுடைய மூதாயானவள்,இழிகுலத்தவனாகிய
சிங்கனேன்பவனை விய பிரசார மார்க்கமாய்க் கூடிச் சிங்கவாகு என்பவனைப்
பெற்றாள்.(Singhabahu ) சிங்கவாகு இவ் விஜய ராஜனைப் பெற்றான்.இவ்வுண்மையை
அறியாதார் உள்ளபடியே சிங்கத்தையணைந்து பெற்றாள் என்பார்.

*சிங்கவாகு என்பவன்,மகத தேயத்திலேயுள்ள லாலாநாட்டைக் கட்டிக்கொண்டு,
அதற்கு அரசனாகிச் சிங்க புரமென்னு  நகரத்திளிருந்தரசு செய்து வருகையில்
அவனுடைய மூத்த குமாரனாகிய விஜய ராஜன்,துன் மார்க்கனும் தன்போலிய
துஷ்டர் பலரைச் சேர்த்துக் கொண்டு சனங்களுக்குத் துன்பஞ  செய்பவனுமா
யிருந்தான்.அதனால் ஜனங்கள் சிங்கவாகுவிடத்திலே போய் முறையிட,
சிங்கவாகு,உடனே விஜயராஜனை எழுநூறு மெயக்காப்பாளருடன்,கடல் தாண்டி
யப்புறம்போய் பிழைக்கும்படி அனுப்பிவிட்டான்.விஜயராஜனும் அவ்வாறே
புறப்பட்டு இந்தியக்கரையிலேயே வேறோர் இடத்தையடைய முயன்றும் ,வாய்க்காமையால்,ஈற்றில்,இலங்கையை நாடிச் சென்று புத்தளத்திற்குச்
சமீபத்தேயுள்ள தம்ப பண்ணை என்னுமிடத்தை அடைந்தான்.