இலங்கை 1883க்கு முதல் எப்படி இருந்தது என்பதை அறிய இதை முழுவதும்
படியுங்கள்.இன்றைய இலங்கைக்கும் 1883க்கு முதல் இருந்த இலங்கையையும்
உற்று நோக்கிப் பாருங்கள்.
OPINIONS ON THIS WORK.
R.BERCKENRIDGE ESQ.
SUB INSPECTOR OF SCHOOLS.
The appearance of an Epitome of the History of Ceylon in the Tamil Language is very auspicious and quite oportune.
Mr.A.Mootootamby Pillai of Manipay in Jaffna.has made extensive researches, into all available ancient and modern works
or the subject and has summed up genuine information in this small compass.The correctness of chronology and history.
as well as the beauty of the style of language in which they are clothed, are worthy of commendation.I do not hesitate to
recommend this book for the use of pupils in our Schools.
If the author would take some more pains and make the book a little more elaborate, it cannot, but be counted one among
modern Tamil Classics.
R.Breckehtidge.
Moolay, 8th, Sept,1883.
From L.Mannuel Esq.
Sub-Asst.Inspector of Schools.
The History of Ceylon,in Tamil by Mr. A.Mootootamby Pillay,Editer of the "Sathiabbimaanie" supplies
a want longfelt in our Schools.The Compiler is a Scholar of some reputation,and a writer of much
experience, He has consulted the best writers on Ceylon --Tennent,Furguson,Cassie Chetty and
Turnour. The work is clear in arrangement; and its style is worthy of imitation by our youths.It is
thus specially designed for schools,and I have much pleasure in recommending it to students in
middle and Training Schools, and Candidates desirous of qualifying themselves for Teachers' Certificates.
L.Manuel
Jaffna,15th Sept.1883.
From
J.R.ARNOLD ESQ.
Prof.of Vernacular Literature.
Jaffna College And Editor, Morning Star.
From a careful and brief perusal and examination of Mr.A.Mootootamby Pillay's Epitome of Ceylon History.
I am prepared to express my opinion that the work is well designed and executed,and will dully supply the want that is felt and exists in the Vernacular schools.The author, it seems, has spared no pains to execute the work in such a way as to
Please the students as well as the general readers. The style is neat, simple,commanding and animating; expressions
are rich,forcible and enlivening. The plan of the work is what it should be --abundance of materials compressed
into a small compass.The size of the work is such that the vast majority of the Tamil students can easily afford
to purchase.To be brief, I am disposed to say that the work is in every respect worth the patronage of the public.
J.R.Arnold
Manipay,15th Sept, 1883.
From
WM.NEVINS ESQ.
Head Master,Wes.Central Collegiate
Institution, Jaffna.
The History of a people proposes to give prominently an account of their thoughts, words
and deeds, as they are exhibited mainly in public life.The Historian, properly so called,
assumes and perhaps claims to himself the privileged gift of ascertaining as facts the things
he has been recording.
The facts thus recorded deserve the attention and study of the rising generation only
when they tend to cultivate upon their welfare.
We have reason to believe that Mr.A Mootootamby Pillay had these and smilar thoughts
in view, in the preparation of his Lanka Charitira Suchanam, and we recommend the
work to the Tamil public.Tamil scholars will certainly find in it valuable information closely
connected with the ancient Tamils of India and Ceylon.
Wm.Nevins,
Jaffna,19th Sept. 1883.
From
J EVARTS ESQ.
HEAD MASTER,CHUNDICULLY SEMINARY.
The long felt want of a history of our island in Tamil is worthily supplied by Mr.A.Mootootamby's
Epitome of the History of Ceylon. as a text book in history for Vernacular Schools, it will be found to be a very useful work. containing as it does, much information in a little space;
while the simplicity and conciseness of the style render it a valuable acquisition to the prose
literature of our language.
J.Evarts
Alevetty,25th Sept. 1883.
From
V.FRANCIS THAMBOO ESQ.
Editor,Catholic Guardian.
I have perused with pleasure the Epitome of Ceylon History written for the use of Vernacular
Schools by Mr. Mootootamby of Manipay, the Editor of the Karical Sathiabbimani, and I am
happy to state that the work is generally interesting being written throughout in an elegant and
agreeable style.The appendix given at the end will be of great use to students.Mr.mootootamby
has on the whole done his work well as it admirably adapted to exhibit the whole of the History
of Ceylon within a short Compass.
V,Francis Thamboo.
Jaffna Town,15thSpet.1883.
From
JAMES H.MARTYN ESQ.
This little manual on the History of Ceylon by Mr A.Mootootamby Pillay of Manipay,sheets of which
were sent for my perusal as they issued from the press has special features which can not fail to
commend themselves to the public generally. There is sufficient matter. Methodically given
to meet the requirements of Tamil schools. The style of writing is engaging and evinces a refined taste
combined with considerable freshness and vigor. The writer is entitled to the praise of entire freedom
from prejudice and partiality --the chief title to public approbation in the compiler of a historical
manual. Altogether I look upon the work as a valuable contribution to the School literature of the Island
which is just forming under the influence of the Revised Code.In saying all this I hope I do not commit
myself to any expression of opinion as to the acceptability of the work in the case of denominational
schools.
James H.Martyn.
Jaffna,18th Sept.1883.
From
E.SPAULDING ESQ.
Late Teacher,Batticotta High School.
I have carefully read the Epitome of the Tamil History of Ceylon by Mr.A.Mootootamby Pillay and
am of opinion that the work contains in a small compass much valuable and useful information and is
characterised throughout with the highest graces of brevity, purity and simplicity of style. The
author has certainly conferred a lasting benefit upon the youth of the country by supplying a long
-felt desideratum and such as desire to gain a knowledge of the history of the Island will do well
to possess the compendium.
E.Spaulding Esq
Manipay, 18th Sept.1883.
சிறப்புப்பாயிரம்.
உபவித்தியாபரீஷகராகிய பிறெக்கெனிறிச்சு அவர்கள் இயற்றியது.
பங்கப் பழனஞ் செறிதரு மானைப் பழம்பதிவாழ்
துங்க னறுமுகன் சேய்முத்துத் தம்பிநற் றோன்றறந்த
லங்கைச் சரித்திர சூசனந் தன்னைப் புகழ்ந்திசைத்த
றங்கக் குடத்தினிற் பொற் பொட் டிடுத றனக்கிணை யே
யாழ்பாணத்து நல்லூர் நாவலரவர்கள் மருகரும் மாணாக்கரும் வித்துவ சிரோமணியுமாகிய
ச. பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இயற்றியது.
சீரூறு மானிப் பதியன் செழுந் தமி ழின்னியலா
லேரூறு மாறு முகவள்ள லீன்றமுத் துத்தம்பிதான்
பாரூறு லங்கைச் சரித்திர சூசனம் பன்னினனாந்
கூரூறு சொற்புல வோர்கட முள்ளங் குளிர்ந்திடவே.
சைவ உதயபானு பத்திராதிபராகிய.திருநெல்வேலி க. வேலுப்பிள்ளையவர்கள்
இயற்றியது.
நீரிலங்கைக் கடல் புடைசூழுலக மெங்கு
நேமியுருட்டிடு நெறியி னிகரி லாத
போரிலங்கைப் படைகடவு மாங்கிலேயர்
புறந்தருபா டையிற்பெரிதும் பொதிந்த மெய்ம்மைச்
சீரிலன்கைச் சரித்திரசூ சனத்தை யாருந்
தெளியும்வகை செந்தமிழிற் செய்தான் மானிப்
பேரிலங்கைப் பதிவாசன் முத்துத் தம்பிப்
பெயரினறு முகன்றருபே ரறிஞ னம்மா.
சுன்னாகம் அ.குமாரசுவாமிப்பிள்ளையவர்கள் இயற்றியது.
சொன்னயமும் பொருணயமுமினி தென்று தொல்லறிஞர்
தொகை கொண்டாடத்
தென்னிலங்கைச் சரித்திர சூசன மொன்று வரைந்தச் சிற்
றிகழச் செய்தான்
பொன்னமரு மானிநக ராறுமுக வேளருளும்
புதல்வன் கீர்த்தி
மண்ணு தமிழிங்கிலிசு வல்லமுத்துத் தம்பியெனும்
வள்ளன் மாதோ.
நூலாசிரியருக்கு ஆசிரியரும்
கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூல்
தமிழ் பண்டிதருமாகிய
பூ. முருகேச பிள்ளையவர்கள்
இயற்றியது
திருத்தகு பல் வணங்களுக்கோ ரிடமே யாகித்
திகழிலங்கா புரி மறுவுஞ் சிறப்பு மிக்க
சரித்திரசூ சனமதனை யழகு சேர்ந்து
தமிழ்மொழியாற் கற்பவர்கள் தமக்கு வாயப்பத்
திருத்தமுடன் வரைந்து பிர கடனஞ் செய்தான்
செயவாறு முகக்குரிசில் செல்வன் கல்வி
விருத்தி செயுங் கவிஞர் குல திலகன் மேன்மை
விளங்கிய முத் துத்தம்பி வித்துவானே.
தெல்லிப்பளைப் போதனாசக்தி வித்தியாசாலைப்
பிரதம உபாத்தியாயராகிய
எஸ்.எஸ்.ஜெரிமையா அவர்கள்
இயற்றியது.
சிறப்புய ரிலங்க்கைச் சரித்திரப் பரப்பிற்
றிறம்பெற மூழ்கி யாய்ந் தெடுத்த
அறப்பெரு மாணி முத்தென வான்ற
வணி கொண்மா சரிதகூ டத்துத்
திறப்பென முத்துத் தம்பி நற்றமிழாற்
றிகழுமிச் சரித் ரசூ சனத்தை
வ றப்பினன் மழைபோன் மாணவர்க் களித்த
மான்செயல் வழுத்துதற் கெளிதோ.
கத்தோலிக்க பாதுகாவல பத்திராதிபராகிய
வி.எவ்.தம்பு அவர்கள்
இயற்றியது .
சீரிலங்கைத் திகழ்நற் சரிதையை.
யேரிலங்கு மினிய தமிழினா
னாரிலங்கு நறுந்தொடை சேர்த்தெனப்
பாரிலங்க வரைந்தனன் பண்பினால்.
அம்புவிக்க ணருங்கலை வல்லுநன்
றும்பிவாழுந் துய றொடை மார்பினன்
இம்பாராரு மெழில்செய் புகழ்முத்துத்
தம்பிமானைத் தடம்பதி யண்ணலே.
முகவுரை
பூவுலகத்திலே யாவருந் தத்தந் தேச சரித்திரங்களை யுணர்ந்து,
தமது முன்னோர் நிலையையும் செயலையும்.நாகரீகத்தையும்
ஒருபால் நோக்கித்,தமது நிலையையும் செயலையும் நாகரீகத்தையும்
மற்றொருபால் நோக்குதல் அத்தியாவசியகமாம்.நோக்குமிடத்துத்
தமது நிலை தாழ்ந்ததாயின் உயருதற்கும்,உயர்ந்த்ததாயின் மேன்மேல்
உயருதற்கும் மனம் அவாவும்.இங்கன முணர்ந்து நோக்கிய தேசத்தாரே
பூமுகத்திலே உயர்ந்துள்ளாரென்பது பிரத்யஷம் ஆதலால் யாவரும்
தத்தம் தேச சரித்திரத்தை ஆராய்தலையும்,தம் மக்களுக்கு கற்பித்தலையும்
மாறக் கடனாகக் கொள்ளுதல் வேண்டும்.
இந்நூலின் முதற் பதிப்பு இருபது வருஷத்திற்குமுன்னே பிரகடனஞ்
செய்யப்பட்டது. இவை அரசினராலும்,சைவர் கத்தோலிக்கர்
புறோடெஸ்டாண்டர் என்னும் முச்சமயிகளாலும் சன்மானிக்கப்பட்டுச்
சர்வாங்கீகாரமாக, அப்பதிப்புப் பிரதிகளெல்லாம் எஞ்சாமல் விரைந்து செலவாயின.நெடு நாள் இப்புச்தகம் அகப்படாது வருந்திய உபாத்தியாயர்கள்
பலர் பன்முறை செய்த வேண்டுகோள் நோக்கி இரண்டாம் பதிப்பு வெளியிடப்
படுவதாயிற்று.
இந்நூலிலே 1883 ன் பின்னர் வந்த தேசாதிபதிகள் சரித்திரமும் புதிதாகச்
சேர்த்துச் சில திருத்தங்களும் ஆங்காங்குஞ் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம்
நாவலர் கோட்டம்
1903 ளூ நவம்பர் மீ
, இங்ஙனம்
.ஆ.முத்துத்தம்பிபிள்ளை
இலங்கைச் சரித்திர சூசனம்:இலங்கைத்தீவானது,ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்ததாய்,இந்து சமுத்திரத்திலே,
.இந்தியாவையடுத்து,அதன் தென் கீழ்த்திசையிலேயுள்ளது.இதனை ஆரியர் "லங்கா" என்றும்,மகத நாட்டார் "தாமிரவருணி" என்றும்,திராவிட நாட்டார் "சிங்களத்தீவு"
என்றும்,சிங்களவர் "இலங்கவி" என்றும்,அராபியர் "சீரந்தீப" என்றும்,சீனர் "சைத்து"என்றும்,கிரேக்கர் "தாபிரபனி"என்றும்,தற்கால ஐரோப்பியர் "சீலோம்"என்றும்,
வழங்குவர்.
"இலங்கா" என வந்தது,அத்தீவின் சிறப்புப் பற்றியென்பர். "தாமிரவருணி" என வந்தது,
செம்மண் செறிவால்."சீரந்தீப" என்பது வட மொழியாகிய "சிங்ஹளத்துவீபம்" என்பதன்,சிதைவு."தாபிரபனி" என்பது "தாமிரவருணி" என்பதன்,திரிபு போலும்.
"சைத்து" என்பது,சேதுத்தீவு எனவு மோர் பெயர்.இலங்கைக்குளமையால் அதன்
சிதைவாதல் கூடும்.அன்றேல்,சீன பாசையில் சிவந்த பூமியென்னும் பொருளது."சீலோம்"
என்பது, வட மொழிக்குச் சமமாகிய "சிம்ஹளம்" என்பதன் சிதைவு. சிங்களத் தீவு -
பட்டைத்தீவு.பட்டை -கறுவாப் பட்டை.
இவ்வபிதானங்கலேயன்றி வேறு பிறராற் கொடுக்கப்பட்ட,நாம கரணங்களும் பிறவுண்டு.
"ஆசியா" இன்னும் ஆங்கில மொழி சமஸ்கிருதமாகிய,"உஷா" என்னும் மொழியின் சிதைவு. உஷா =:விடியற் காலை.உஷா கண்டம்=சூரியன் உதயஞ்செயும் கண்டம்.
இத் தீவின் சிறப்பைக் கூறுங்கால்,தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,நாட்டிற் கிலக்கணங் கூற,
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு"
எனக் கூறினரென்று சொன்னாலும்,தோசமுறாது.அரிய பெரிய ஏரிகள்,ஆறுகள் முதலிய,
சகல ஆதாரங்களும்,குறையாத மழை வீழ்வும் உடைமையால்,நீர் வளமும்,சென் நெற்
பயிர்கள் கரும்பு போலோங்கி,வளருதலால் நிலவளமும்,உயர்ந்து,செழித்த மலைக்
குலங்களால் மலைவளமும்,ஆகரங்களிற் படுவனவாகிய மாணிக்கம்,வச்சிரம், நீலமணி,
யென்னுமிரத்தினங்களின் மிகுதியும்,கடல்படு திரவியங்களாகிய,சங்கு,முத்து,முதலிய
பொருள்களின்,குப்பையும்,மா,பலா,சந்தனம்,சண்பகம்,கருங்காலி,பாதிரி,தென்னை, கமுகு,பனை முதலிய திவ்விய விருஷங்களும்,வெயில் தெரியா தோங்கி,வானளாவி,
யடர்ந் திடம்பரந்த சோலைகளெங்கும்,யானை,மான்,மரை,மேதி,பசு,மயில்,முதலிய,
விலங்குகளின்,கூட்டங்களும்,திணைகள் தோறும்,அவ்வம் மாந்தரும்,நகரிகள் தோறும்,
பிராமணர் வைசியர்,முதலியோரும்,அவருட கல்வியால் நிறைந்த சான்றோரும்,
பண்டைக் காலமுதல்,வசிக்கும் பெற்றியும்,ஐரோப்பியர் கணிதப்படி,3000 வருடங்களுக்கு
முன்னரிந்தரசாண்ட.அரசர் செய்தியையும்,அக்காலத்தில்,இந்நாட்டுச் சீரினையும்,
உலகத்திலுள்ள இதிகாசங்களுள் அதி புரதானமுடைய தெனப்படும்,இராமாயணமே,
யொருவாறு கூறலால், மறுக்கப்படாத,பழமையும்,ஆரிய மதநூற்படி தலவிசேடத்தோடு
புண்ணிய தீர்த்தங்களும்,மலையரண்,மதிலரண்,முதலியவற்றால் சூழ்ந்து சிறந்த
நகரங்களும், தற் காலத்தில் என்னாட்டினுஞ்சிறந்து விளங்கும்,பிரித்தானியா தீவுதானும்
பெறாத எண்ணில் இதிகாசங்களைப் பெற்றுள்ள,பெரும் பெற்றிமையும், ஆகிய இவை
முதலியவெல்லாம்,உண்மையால் இலங்கைத்தீவிற்கு, அதன் மகா சிறப்பளவிலும்,
அதிப் பிரதாபத் தளவிலும் எந்நாட்டை எத்தீவை, இணையென நிறுத்தலாமோ? அதற்கிணை, வேறில்லையென்க.
இத்தீவின் பூருவக் குடிகள் இயக்கர்,நாகர் என்போர்,தற்காலத்துக்குடிகள்,பரதேசிகளாகிய
ஆங்கிலயேர் முதலியோரும்,சுதேசிகளாகிய,சிங்களர்,தமிழர்,சோனகர்,என்போருமாம்.
சுதேச பாசை தமிழும்,சிங்களமும்.மதம்,சைவம்,பௌத்தம்,இஸ்லாம்,கிறிஸ்தவம் என்பவை.
இங்கு வசிக்கும் சோனகர்,பரம்பரைச் சோனகர் அல்லர்.இவர்கள்,அராபியர்இலங்கையில்
வர்த்தகஞ்செய்த காலத்தில்,அவர் சகாயம் பெற்று வர்த்தகத்தில்,விருத்தி பெரும் பொருட்டு, அவர் மதம் புகுந்த,மலையாள நாட்டுச் சூத்திரர்.பரம்பரையில் வந்தோரேனப்படுவர்.
ஆதிகாலத்திலே,ஆதிசேடனுக்கும் வாயுபகவானுக்கும்,உண்டான,யுத்தத்தால் மகா
மேரு கிரியினது,ஆயிரத்தெட்டுச் சிகரங்களுள் ஒன்று,முரிந்து தெறித்துத்,தென்
சமுத்திரத்தில்,விழுந்து இலங்கையாகிய தீவாயிற்றென்று கூறும்,இராமாயணம்,இது
ஆதியிலே இந்தியாவும்,இலங்கையும் ஏகநாடாயிருந்து,பின் பூகம்பத்தால்,கூறுபாடுற்று
வேறு நாடாயிற்றென்பதை,வெளியிடத் துணிந்த வருனனையேயாமென்க.
இத்தீவு முன்னே எழுநூறு காதவழி யுள்ளதாயிருந்தது,பின் இராவணன் கோட்டையுள்பட இருநூற்று முப்பது காதவழியூரைக்*கடல்
பொங்கியழித்தமையால்,குறிகிற்றென்று
கூறுவர்.இதற்குப் பின்னும் காலாந்தரங்களில் கடல் பொங்கிப்பொங்கி அநேகவூர்களை ஆழ்திற்றென்று கூறவும் இடமுண்டு
.
இப்போது இலங்கை நீளத்தால் 270 மைலும்,அகலத்தால் 140மைலும்,பரிணாமத்தால் 760மைலும்,விஸ்தீரனத்தால்,25000 சதுர மைலுமுடையது.
*இப்போது இலங்கைக்குத் தெற்கே,சமுத்திரத்திலே,இரண்டாயிரமைல் தூரங்காறும்,
ஆங்காங்கும் கணங்களாகக் கிடக்கும்,தீவுகளெல்லாம் (polynesia ) பூர்வம் ஒரு காலத்து நடந்த மகா பூகம்பத்தால் தகர்ந்து, பின்னங்களாகிய இலங்கையினது கூறுகளென்றும்,
ஜன சஞ்சாரமில்லாத சில தீவுகளிலே,ஆரியமத சம்பந்தமான சிவவிக்கிரகங்கள்,
உளவென்றும் ஐரோப்பிய பண்டிதர் சிலர், சாதிப்பர்.(Vide S .D.vol.11 .)
இத் தீவைப்ப்றிய சரித்திரம் முறையே,பூர்வகாலம்,விஜய வமிச காலம்,பறங்கிக்காரர் காலம்,ஒல்லாந்தர் காலம்,ஆங்கிலேயர் காலமென ஐந்து கால சரித்திரங்களாக வகுக்கப்
படத்தக்கது.
1 . பூர்வகாலம்
இலங்கையின் பூர்வகால சரித்திரம்,ஒழுகிய நடையும் விழுமிய விடையமும், பொருந்தியதன்று,இராமாயனத்திலுள்ளபடி,ஆதியிலே,இலங்கையில் இராவண னென்றோர்,இராஷசன், என்டிசையிளுள்ளோரும்,தான் பெயர் கேட்டு நைந்து நடுங்கி,
யஞ்சுமாறு, உத்தண்ட கம்பீரனாயிருந்தரசியியற்றினான்.அக் காலத்திலே,
இந்தியாவிலே, அயோத்தியா புரியிலிருந்து,செங்கோல் செலுத்திவந்த,தசரச் சக்கரவர்த்தியுடைய,குமாரன்,இராமன் என்போன்,சீதையைப் பாணிக்கிரகணம்
பண்ணியபின்,குடும்பத்திலே கலகமுண்டாக,அக் கலகத்தால் சீதையுடன்
வணவாசியாய்யிருக்கும்படி நேர்ந்திட,இலங்காபதியாகிய இராவணன் அக்
காட்டிற்குச் சென்று சீதையைத் திருடிக் கொண்டு போயினான்.அது கண்ட
இராமன் *வாநர வீரரைத் துணைக்கொண்டு,இலங்காபுரியை வளைந்தது,
இராவனனையுமவன் கிளைகளையுங் கொன்று,சீதையைச் சிறை மீட்டான்.
$இது நிகழ்ந்தது ஏறக்குறைய 3000 வருடங்களுக்கு,முன்னரேன்பர்,ஒருசார்
ஐரோப்பியர்.
இவனுக்குப்பின்,அவன்,தம்பி விபீஷணனை முதலியோரிருந் தரசாண்டார்.
அவர்கள் அரசியல் ஒரு துறைப்பட்டதன்று,அவர்களுடைய தலை நகரம் இலங்காபுரி,
இது மட்டக்களப்பு நாட்டிலேயுள்ள,திருக்கோயிலுக்கு நேரே,கடலுள் அமிழ்ந்திக்
கிடக்கின்றது என்பர்.
*வாநரரென்றது ,-வணசரரைப்போலும் காப்பிரிகளிலும் குரூபிகளாகிய ஒரு
ஜாதி வேடர்,இன்றும் விந்திய பர்வதச் சார்பிலுளர்.வாநரென்னுஞ்சொல்வடமொழி.
அதன் பொருள் ஒருவாறு,நரரை யொத்தவர் என்பது.
$இராமன் பிறந்தது இற்றைக்கு 12 ,569 ,௦016 வருஷங்களுக்கு முன்னரென்று கூறும்,
Palagonda chronicle of events .என்னும் நூலும், விஜயநகர பஞ்சாங்கமும் எனவே
ஆரியர் இது நிகழ்ந்தது,ஒரு கோடியே இருபத்டைந்திலச்சத்து அறுபத்தொன்பதினாயிரம்
வருஷங்களுக்கு முன்னரென்பர்.
சிங்களருடைய காலத்துக்கு முன்,இலங்கை,இயக்கராலும்,நாகராலும்,குடி
கொள்ளப்பட்டிருந்தது,இயக்கர் என்று சிங்களர் கூறுவது.இரஷசரைப்போலும் .
அக்காலத்தில் ஆதி புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வந்தாரென்றும்,
முதல் முறையில்,ஆகாய மார்க்கமாய்ப் பறந்துவந்து,விந்தனையிலே,இயக்கருடைய
சபாஸ்தானமாகிய மாகநக நந்தாவனத்தில்,இறங்கினாரென்றும், இரண்டாவது
முறை வந்தபோது,கொழும்புக்குச் சமிபத்தேயுள்ள,கழனியா நாட்டுக்கு அதிபதியாயிருந்த
இயக்கரும் நாகரும்,தற்காலத்துச் சிங்களரையும்,தமிழரையும் போன்று,இரு வேறு
சாதியினராயிருந்திருக்கலாமென்றன்றி, அவர் இன்னசாதியினர்,இன்ன பாஷையாளர்,
என்று துனிதற்கிடமில்லை. இனிச் சிங்களரும், தமிழரும்,யாரோவெனில்,-இந்தியாவிலுள்ள,
பாஷைகளெல்லாம், சமஸ்கிருதம், திராவிடம், ஏன்னு மிரு பாஷைகளுள்ளுமடங்குமாகையால்,
சிங்களபாஷைக்கும்,மூல பாஷை சமஸ்கிருதமாகும், ஆகவே, அப் பாஷைக்காரராகிய,
சிங்களர், சமஸ்கிருதம் வழங்கி வந்த நாடாகிய, வட இந்தியாவினின்றும், இலங்கையிலே
குடியேறினவர், எனவும், தமிழர், தமிழ் நாடாகிய, தென் இந்தியாவினின்றும், இலங்கையிலே,
குடியேறினவர்,எனவும், அனுமானிக்கப்படுவர். அன்றியும்,முன் ஓர் காலத்தில், கடல்
வற்று நாட்களில், இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு, எளிதில், நடந்து வரக் கூடியதாயு
மிருந்தமையால், அது சாத்தியமே, இயக்கரும்,நாகரும், பைசாச சர்ப்ப வழிபாடுகளுடையோர்,
அதுபற்றியே, பைசாசு சர்ப்பம், என்று முறையே அர்த்தங்கொள்ளும், இயக்கர், நாகர்,என்னும்
பெயர்கள், அவர்க்காயின,அன்றியும், இயக்கர் விகார ரூபிகளாயும், நாகர், கீழ்ச்
சுரங்கங்களில், வசித்தவராயு மிருந்த்தது பற்றி, இழிவுரையாய், அப்பெயர்கள்,
கொடுக்கப்பட்டிருந்தாலுங் கூடு மென்றெண்ணற்கிடமுண்டு, அது நிற்க, இவ்வியக்கர்,
நாகர்களுடைய, இராச்சிய சரித்திரம் அபூரணமாய்ப் போந்த, ஆதாரமின்றி, இருந்தலால்,
அதனை, இவ்வளவில்,நிறுத்தி,, சிங்கள அரசர் சரித்திரத்தையே, இங்கு சொல்லலாம்.
இதன் தொடர்ச்சியை தொடர்ந்து வாசிக்க,
தொடரும் ....

நாகராஜனைப் பௌத்தனாக்கி மீண்டாரென்றும்,மூன்றாம் முறை வந்தபோது,
திருவடிமலையில் தமது பாத முத்திரையை வைத்துப் போயினாரென்றும்,
சொல்லுவர்.மகியங்கனாவையென்று, முன்னாளில் சொல்லப்பட்ட, அவவிந்தனை
நகர்,நெடுங்காலமாக, இலங்கையிலுள்ள அதி முக்கிய ஸ்தலங்களுளொன்றாயிருந்தது.
இப் புத்தர் ஏழாம் பௌத்தவதாரியாகிய கௌதம புத்தர்.இயக்கரும் நாகரும்,தற்காலத்துச் சிங்களரையும்,தமிழரையும் போன்று,இரு வேறு
சாதியினராயிருந்திருக்கலாமென்றன்றி, அவர் இன்னசாதியினர்,இன்ன பாஷையாளர்,
என்று துனிதற்கிடமில்லை. இனிச் சிங்களரும், தமிழரும்,யாரோவெனில்,-இந்தியாவிலுள்ள,
பாஷைகளெல்லாம், சமஸ்கிருதம், திராவிடம், ஏன்னு மிரு பாஷைகளுள்ளுமடங்குமாகையால்,
சிங்களபாஷைக்கும்,மூல பாஷை சமஸ்கிருதமாகும், ஆகவே, அப் பாஷைக்காரராகிய,
சிங்களர், சமஸ்கிருதம் வழங்கி வந்த நாடாகிய, வட இந்தியாவினின்றும், இலங்கையிலே
குடியேறினவர், எனவும், தமிழர், தமிழ் நாடாகிய, தென் இந்தியாவினின்றும், இலங்கையிலே,
குடியேறினவர்,எனவும், அனுமானிக்கப்படுவர். அன்றியும்,முன் ஓர் காலத்தில், கடல்
வற்று நாட்களில், இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு, எளிதில், நடந்து வரக் கூடியதாயு
மிருந்தமையால், அது சாத்தியமே, இயக்கரும்,நாகரும், பைசாச சர்ப்ப வழிபாடுகளுடையோர்,
அதுபற்றியே, பைசாசு சர்ப்பம், என்று முறையே அர்த்தங்கொள்ளும், இயக்கர், நாகர்,என்னும்
பெயர்கள், அவர்க்காயின,அன்றியும், இயக்கர் விகார ரூபிகளாயும், நாகர், கீழ்ச்
சுரங்கங்களில், வசித்தவராயு மிருந்த்தது பற்றி, இழிவுரையாய், அப்பெயர்கள்,
கொடுக்கப்பட்டிருந்தாலுங் கூடு மென்றெண்ணற்கிடமுண்டு, அது நிற்க, இவ்வியக்கர்,
நாகர்களுடைய, இராச்சிய சரித்திரம் அபூரணமாய்ப் போந்த, ஆதாரமின்றி, இருந்தலால்,
அதனை, இவ்வளவில்,நிறுத்தி,, சிங்கள அரசர் சரித்திரத்தையே, இங்கு சொல்லலாம்.
இதன் தொடர்ச்சியை தொடர்ந்து வாசிக்க,
தொடரும் ....
பகிர்ந்தமைக்கு நன்றி ...
பதிலளிநீக்கு