இது சக பதிவர் சகோதரர் திரு அமுதவன் அவர்களால் எனது வலைப்பதிவில் இடப்பட்ட கருத்துரை.இவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பொதுவாக நமது நாட்டில் வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்,இதே,நடைமுறைதான் பதிவுகளில் வாக்களிக்க,எந்த ஓட்டுப் பட்டை மூலமாக வாக்களிக்க விரும்புகிறீர்களோஅந்த ஓட்டுப்பட்டைக்குரிய
வலைப்பதிவுத் திரட்டியில் நீங்கள் இணைந்திருந்தால்,அந்த ஓட்டுப்பட்டை மேல் உங்கள் மௌசை வைத்து அழுத்தியதும்,ஓட்டுப்பட்டைக்குரிய வலைப் பக்கத்துக்கு உங்களை அழைத்துச் சென்று,உங்கள் பயனர் பெயர்,கடவுச் சொல் போன்றவற்றைப் பரிசோதித்துவிட்டு நீங்கள் எந்தப் பதிவுக்கு வாக்களிக்க நினைத்தீர்களோ, அந்தப் பதிவும் அங்கு இருக்கும் அதில் நீங்கள் உங்கள் வாக்கை அளிக்கலாம்.அளித்த வாக்கு செல்லுபடியாகிற்றா? என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம், நீங்கள் வாக்களிக்கும் முன் இருந்த இலக்கம் நீங்கள் வாக்களித்தது ஏற்றுக் கொள்ளப்பட்டால்,உடனடியாக ஒரு இலக்கத்தால் அதிகரித்து,இடுகையின் கீழ் வாக்களித்தவரின், பயனர் பெயரும்,இதற்கு முதல்,யார்,யார் இந்தப் பதிவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையும்,வாக்களித்தவர் அறியக்கூடியதாக இருக்கும்.சில திரட்டிகளில் வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் உயரும் வேறு,தகவல்கள்,கிடைக்காது
ஒருவர், ஓருவாக்கு மாத்திரமே அளிக்கலாம். 99 % மான வலைப் பூக்களுக்கு இது பொருந்தும்,ஒரு சில வலைப் பூக்களில் இந்த நடைமுறை காணப்படவில்லை.வாக்களிக்க நம்மிடம் ஒரு வலைப்பூ இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.அந்த வலைப் பதிவுத் திரட்டிகளில் நீங்கள் இணைந்திருந்தால் மட்டும் போதும்.நீங்களும் ஒரு வாக்காளர்தான்.
கள்ளவோட்டு என்பது இங்கு நடவாத காரியம்.அதுதான் நமது வலைப்பதிவு பக்கம்,அரசியல் வாதிகளும்,அவர்களின் அடிவருடிகளும்,நமது வலைப்பூக்களின் பக்கம்,
அவர்களின் பார்வை இல்லாமல் இருக்கிறது.அத்துடன் தாதாக்களின் அட்டகாசம் குறைவாக இருக்கிறது போல் தெரிகிறது.ஆனால் பினாமி ஓட்டுக்கள் அதிகமாக இடலாம்.ஆனால் இவையெல்லாம் கூகுள் ஆண்டவரிடம் செல்லாது. எல்லாம் இகவ்வாழ்க்கைக்கு மட்டும் பொருந்தும், கூகுல் ஆண்டவரின் சந்நிதியில் இவையெல்லாம் கணக்கில் வராது, அங்கு சித்திர புத்திரனார் தரமான கணனியில் நமது
அசைவுகளை கணித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இங்கு இக வாழ்க்கை என்பது
இந்த தமிழ்ப் பதிவு வட்டத்திற்குள் பந்தா காட்டுவது, அதாவது அதி கூடுதல் வாக்குகள் பெற்ற பதிவு, அதி கூடிய வாசகர்கள் பரிந்துரைத்த பதிவு,இப்படி பந்தாவெல்லாம் அங்கு
எடுபடாது.
நந்தனார், போன்ற பிரபலமிலாதவ்ர்கள் எப்படி ஆண்டவன் சந்நிதியில் ஜோதியாணர்களோ,அப்படித்தான் பதிவுலகமும்,எந்த வித ஆராவராமும் இல்லாத பதிவுகள்,அங்கே நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது.
நமது பதிவுகளுக்கு நல்ல வாக்குகள் கிடைக்கவில்லை என்று,சில பதிவர்கள் நினைப்பதுண்டு,நல்ல கருத்துக்களை,நயமான வார்த்தைகளால், நாலுபேருக்கு
விளங்கக் கூடிய மாதிரி எழுதுங்கள்.அதே மாதிரி நீங்களும்,நல்ல பதிவுகளைத் தேடிப் படியுங்கள்,குறை நிறைகளை,கருத்துரைகள் மூலம் அறிவியுங்கள்.வலைப் பதிவர்களை
உங்கள் கருத்துக்களால் கவருங்கள்,நிற்சயம் உங்கள் வலைப் பதிவுக்கு நல்ல மதிப்புக் கிடைக்கும்.
வலைத் திரட்டிகளில் நீங்கள் இணையும் போது,ஒரே பயனர் பெயரையும் ஒரே கடவுச்
சொல்லையும்,உபயோகியுங்கள்,இதன் மூலம் வீணான காலவிரயத்தையும்,
தேவையில்லாத அசௌகரியங்களையும் தவிர்க்கலாம்.
வாக்களிப்புப் பற்றிய விளக்கம்போதும் என்று நினைக்கின்றேன்.ஏதாவது விடுபட்டிருந்தால்,தயக்கமில்லாமல் கருத்துரை இடுங்கள்,அதற்குரிய விளக்கத்தைத்
தேடித் தருகிறேன்.உங்கள் வலைப்பதிவைப் பற்றி அறிய இங்கு சென்று பாருங்கள்,
உங்கள் தரம் எப்படிஎன்பதை அறிந்து கொள்ளலாம்.
,