பொதினாத் துவையலின் அருமையைக் கூறும் புரட்சிக் கவிஞ்ஞரின் வெண்பா இது.
ஆய ஒருத்தி அரைக்க இரண்டுபேர்
போயதை வழிக்க ஐந்து பூவைமார் --ஓயார்கள்
நாவிலிட மூன்றுபேர் நண்ண வேண்டும் பொதி
நாவிலிட்ட நல்ல துவையல்.
ஒருத்தி -ஒருகை
இரண்டு பேர் -இரண்டுகைகள்
ஐந்து பூவைமார்-ஐந்து விரல்கள்
நாவிலிட மூன்று பேர்- சுட்டுவிரல், நடுவிரல்,பெருவிரல்.
பொதினாவைத் துவைத்து, சுவைத்துப் பாருங்கள்.
